மெய்யழகன் (தமிழ்)

’96’ திரைப்படத்தை இயக்கிய பிரேம் குமாரின் அடுத்த திரைப்படம் இந்த ‘மெய்யழகன்’. கார்த்தி, அரவிந்த் சுவாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கின்றனர். வெள்ளந்தியான கிராமத்து கதாபாத்திரத்தில் கார்த்தி, டிப் டாப்பாக நகரத்திலிருந்து கிராமத்திற்குச் செல்லும் கதாபாத்திரத்தில் அரவிந்த் சுவாமி நடித்திருக்கிறார். பாசப் பிணைப்பைப் பற்றி பேசும் இத்திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகிறது.
தேவாரா – பாகம் 1 (தமிழ்)

கொரட்டல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், சயிஃப் அலிகான், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் ‘தேவாரா- பாகம் 1’. அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அதிரடி ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது செப்டம்பர் 27ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகிறது.
ஹிட்லர் (தமிழ்)

தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹிட்லர்’. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது செப்டம்பர் 27ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகிறது.
பேட்ட ராப் (தமிழ்)

எஸ்.ஜே. சீனு இயக்கத்தில் பிரபு தேவா, வேதிகா, விவேக் பிரசன்னா, சன்னி லியோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பேட்ட ராப்’. சினிமாவில் பெரிய ஸ்டாராக வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கும் பிரபு தேவாவின் வாழ்வில் என்னவெல்லாம் நடந்தது, அவரின் கனவு நனவாகியதா என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகிறது.
தில்ராஜா (தமிழ்)

இயக்குநர் வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் சத்யா, ஷெரின், இமான் அண்ணாச்சி, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தில்ராஜா’. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது செப்டம்பர் 27ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகிறது.
Binny And Family (இந்தி)

சஞ்சய் இயக்கத்தில் பங்கஜ் கபூர், ஹிமாணி ஷிவ்புரி, அஞ்சினி தவான், ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Binny And Family’. காமெடி, ஃபேமலி ட்ராமா திரைப்படமான இது செப்டம்பர் 27ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகிறது.
Dharmaveer: Mukkam Post Thane 2 (இந்தி, மராத்தி)

பிரவீன் டர்டே இயக்கத்தில் பிரசாத், ஷிட்டிஷ் டேட், ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Dharmaveer: Mukkam Post Thane 2’. மகாராஷ்டிராவில் தர்மவீர் என்றழைக்கப்படும் ஆனந்த் தீக்ஹே என்ற சிவசேனா கட்சியின் அரசியல் தலைவரின் வாழ்வை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த வாரம் நீங்கள் தியேட்டரில் பார்க்க விரும்பும் திரைப்படத்தை கமென்ட்டில் பதிவிடவும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX