நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கூகுள் நிறுவனத்தின் டூல் தான் ‘கூகுள் நோட்புக்LM’. அண்மையில் சில முக்கிய அப்டேட்களை இதில் அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். அந்த புதிய அம்சங்களின் மூலம் யூடியூப் வீடியோக்களை சுருக்கமான உரையாக பெறுவது முதல் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும்.
கூகுள் நோட்புக்LM? இதில் கூகுள் பயனர்கள் தங்களது பிடிஎஃப் கோப்பு, கூகுள் டாக்குமெண்டுகள், வலைதள முகவரி, யூடியூப் வீடியோ லிங்குகள் மற்றும் பலவற்றை அப்லோட் செய்யலாம். அப்படி பதிவேற்றப்பட்ட கன்டென்ட்களின் முக்கிய விவரங்களை ரத்தின சுருக்கமாக வழங்கும் டிஜிட்டல் நோட்டு புத்தகம் தான் இந்த நோட்புக் எல்எம். பெரிய கோப்புகள் மற்றும் வீடியோக்களில் இருந்து முக்கிய விவரங்களை இது பயனர்களுக்கு வழங்கும்.
இது மிகப்பெரிய தரவுகளை கையாளும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பலருக்கு உதவும். இந்த நிலையில் தான் சில முக்கிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது கூகுள்.
முன்னதாக, பிடிஎஃப் கோப்பு, கூகுள் டாக்குமெண்டுகள், வலைதள முகவரி போன்றவற்றை மட்டுமே இதில் பயனர்கள் ஆக்சஸ் செய்ய முடிந்தது. இந்த நிலையில் தற்போது யூடியூப் வீடியோ லிங்க் மற்றும் ஆடியோ கோப்புகளையும் இதில் அப்லோட் செய்யலாம். அதன் சுருக்கம் உரையை பெறலாம்.
கூகுள் நோட்புக் எல்எம்: பயன்படுத்துவது எப்படி? https://notebooklm.google.com/ லிங்கில் புதிய நோட்புக்கை கிரியேட் செய்ய வேண்டும். அதில் சோர்ஸ்களை பதிவேற்ற வேண்டும். அதன் பின்னர் சம்மரியை ஜெனரேட் செய்ய வேண்டும். ஆடியோ ஓவர்வியூ அம்சமும் இதில் உள்ளது. இதனை அனைத்து கூகுள் பயனர்களும் பயன்படுத்தலாம்.