அஜித் ‘விடா முயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களை லைப் அப்பில் தற்போது வைத்திருக்கிறார்.
‘விடாமுயற்சி’ திரைப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்குநர் ஆதிக் ரவிசந்திரம் இயக்கி வருகிறார். சினிமாவை தாண்டி ஆட்டோமொபைலிலும் அதீத ஆர்வம் கொண்டவர் அஜித் என்ற செய்தி ஊர் அறிந்ததே! கார் ரேஸ் மீதும் அலாதியான ப்ரியம் கொண்ட அஜித் இதற்கு முன் பார்முலா ரேஸ்களிலும் பங்கேற்றிருக்கிறார்.
2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பியா GT4 சாம்பியன்ஷிப் ரேஸின் அஜித் பங்கேற்கவிருப்பதாக இந்திய மோட்டர்ஸ்போர்ட் சம்மேளம் அறிவித்திருந்தது. இந்தியாவின் முன்னனி கார் ரேஸ் வீரரான நரேன் கார்த்திகேயனும் அஜித் விரைவில் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவிருப்பதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அஜித் எப்போது அறிவிப்பை வெளியிடுவார் என பலரும் காத்திருந்தார்கள். தற்போது அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அந்த பதிவில், ” துபாயில் ஃபெராரி 488 இ.வி.ஒ சேலஞ் காரை செஸ்ட் செய்துக் கொண்டிருக்கும் ‘AK’ நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ரேஸிங் சீசனுக்கு தயாராகி வருகிறார். புதிய ஹெல்மட் பெயிண்ட் ஸ்கீமை அறிமுகப்படுத்துவதிலும் மகிழ்ச்சி. `Adrenalin Fueled’ பயணத்திற்கு ரெடி!’ ” எனக் குறிப்பிட்டிருக்கிரார்.
வெல்கம் பேக் ஏ.கே!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…