Nandhan: `இனிவரும் காலத்தில் நந்தன்கள் வெற்றிபெறுவார்கள் – 'நந்தன்' படம் குறித்து திருமாவளவன்

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘நந்தன்’.

கடந்த வாரம் வெளியான இத்திரைப்படம் பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு நடக்கும் தீண்டாமைக் கொடுமைகள் பற்றிப் பேசி பாராட்டுகளைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தை இன்று பார்த்த வி.சி.க தலைவர் திருமாவளவன், படக்குழுவினரைப் பாராட்டி, மேலவளவு 7 பேர் படுகொலை குறித்தும் தலித் தலைவர்களுக்கு நடக்கும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்தும் பேசியிருக்கிறார்.

திருமாவளவன்

இது குறித்து பேசியிருக்கும் அவர், “அரசியலமைப்புச் சட்டம் இங்கு முழுமையாக நடைமுறையில் இல்லை. ஜனநாயகத்தை மதிக்கும் நிலை இங்கு இன்னும் பரிணமிக்கவில்லை. நாடெங்கும் நடந்துகொண்டிருக்கும் சாதியக் கொடுமைகளே இதற்கு சாட்சிகளாக இருக்கின்றன. இந்த ‘நந்தன்’ திரைப்படம் தனித் தொகுதி ஊராட்சி அமைப்புகளில், தேர்தல்களில் தலித் மக்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர். ஊராட்சி அமைப்புகளில் பதவி வகிக்கும் தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள், பணியாளர்கள் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதை எந்தவித சமரசமின்றி அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமத்தில் முருகேசன் என்ற தலித் ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி அலுவலகத்திற்குள் சென்றதால் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். முருகேசன் உட்பட 7 பேர் இந்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது அது பெரும் பேசுபொருளாக இருந்தது, பிறகு மறக்கப்பட்டுவிட்டது.

நந்தன்

இதுபோன்ற கொடூரங்கள் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. சனாதன சமூக கட்டமைப்பால் இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறைகள் தலைவிரித்தாடுகிறது. இனிவரும் காலத்தில் நந்தன்கள் வெற்றிபெறுவார்கள், ஜனநாயகம் வெற்றிபெறும். இந்தச் சாதியப் பிரச்னைகளை எந்தவித சமரசமின்றி திரைப்படமாக எடுத்த இயக்குநர் இரா. சரவணன் மற்றும் படத்தில் நடித்த சசிகுமார், சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்” என்று பாராட்டிப் பேசியிருக்கிறார் திருமாவளவன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.