2024-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படம்’ பிரிவில் இந்தியா சார்பாக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது ‘லாபத்தா லேடீஸ்’.
இந்த பிரிவிக்கான பட்டியலில் மொத்தம் இரண்டு இந்திய திரைப்படங்கள் இருக்கிறது. ஆம், ஒன்று இந்தியாவின் அதிகாரப்பூர்வ என்ட்ரியாக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம். மற்றொன்று பிரட்டனின் அதிகாராப்பூர்வ என்ட்ரியாக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ‘சந்தோஷ்’ என்ற இந்திய திரைப்படம். இவை இரண்டுமே இந்தி மொழி திரைப்படங்கள்தான்.
பிரிட்டன் சார்பாக ஒரு இந்திய திரைப்படம் எப்படி பரிந்துரைக்கப்படும் என்ற கேள்விதான் பலரும் எழுந்திருக்கிறது. இத்திரைப்படத்தை இந்தியா, பிரட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. முதன்மையாக பிரிட்டன் நாட்டின் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறது.
இந்த படத்தை இயக்கிய சந்தியா சுரி ஒரு பிரிட்டிஷ் இந்தியன் (British- Indian) திரைப்பட இயக்குநர். இவர் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘தி ஃபீல்டு’ என்ற குறும்படமும் பல முக்கிய மேடைகளில் விருதுகளையும் பெற்றிருக்கிறது.
‘சந்தோஷ்’ திரைப்படமும் இந்தாண்டு கேன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை முதன்மையாக தயாரித்தது ஒரு பிரிட்டன் நிறுவனம் என்பதால்தான் இத்திரைப்படம் பிரிட்டனின் அதிகாரப்பூர்வ என்ட்ரியாக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி , பிரான்ஸின் அதிகாரப்பூர்வ என்ட்ரியாக ஆஸ்கருக்கு அனுப்புவதற்கு முதலில் நான்கு திரைப்படங்களை பட்டியலிட்டது அந்த நாட்டின் ஆஸ்கர் கமிட்டி. அதில் பயல் கபாடியா இயக்கத்தில் உருவான ‘ஆல் வி இமாஜின் அஸ் லைட்’ திரைப்படமும் ஒன்று. ஆனால் இந்த படம் அதிகாரப்பூர்வ என்ட்ரியாக ப்ரிந்துரைக்கப்படவில்லை. இந்த படத்தை முதன்மையாக தயாரித்ததும் ஒரு பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பு நிறுவனம்தான்.
கணவனை இழந்து விதவையாக இருக்கும் மனைவிக்கு கணவரின் போலீஸ் வேலை கிடைக்கிறது. போலீஸானதும் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் வழக்கை விசாரித்து என்னென்ன விஷயங்களை கட்டவிழிக்கிறார் என்பதுதான் இந்த ‘சந்தோஷ்’ படத்தின் கதை.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…