Where to watch on OTT: ஜில்லு, கொட்டுக்காளி, டிமான்டி காலனி 2 இந்த வாரம் ஓடிடியில் என்ன பார்க்கலாம்!

இந்த வாரா ஓடிடி ரிலீஸ்கள்

ஜில்லு (தமிழ்) – BlackSheep Value OTT

ஜில்லு (தமிழ்)

‘கக்கூஸ்’, ‘ஒருத்தரும் வரேல’ ஆவணப்படங்களை இயக்கிய திவ்யா பாரதியின் இயக்கத்தில் முழு நீள திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘ஜில்லு’. தோனி ஐ ஆலிவர் இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். திருநங்கைளின் வாழ்வியலை எந்தவித சமரசமின்றி யதார்த்தமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம். திருநங்கைகள் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்ககளை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் கொண்டாட்டத்தையும், போராட்டத்தையும் மிக யதார்த்தமாகப் பேசும் இத்திரைப்படம் ஞாயிற்றுக் கிழமை (செப்டம்பர் 29ம் தேதி) ‘BlackSheep Value OTT’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கொட்டுக்காளி (தமிழ்) – Amazon Prime Video

கொட்டுக்காளி

`கூழாங்கல்’ திரைப்படம் சர்வதேச அளவில் பல அங்கீகாரங்களை இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜுக்குப் பெற்றுத் தந்தது. இதற்குப் பிறகு, அவர் சூரியை வைத்து இயக்கியிருக்கிற திரைப்படம் ‘கொட்டுக்காளி’. ஆணாதிக்கம், சாதிய ஒடுக்குமுறைகளை, பெண்களுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய சமூக அமைப்பை ஒரு பெண்ணின் வாழ்க்கைக் கதை வழியாகக் கேள்விக்குள்ளாக்குவதுதான் இதன் கதைக்களம். தமிழ் திரையரங்கிற்குப் புதிய நடைமுறையாக 1.30 மணிநேரம், பின்னணி இசையின்றி வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்த இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

டிமான்டி காலனி 2 (தமிழ்) – Zee 5

டிமான்டி காலனி

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், வேட்டை முத்துகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி 2’. முதல் பாகத்தின் வரவேற்பைத் தொடர்ந்து உருவாகியிருக்கும் ஹாரர், திரில்லர் திரைப்படமான இது ‘Zee 5’ ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

Love, Sitara (இந்தி) – Zee5

Love, Sitara

வந்தனா கட்டாரியா இயக்கத்தில் சோபிதா துலிபாலா, அப்பாஸ் தலால், ஹுசைன் தலால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Love, Sitara’. மலையாளிப் பொண்ணு, பஞ்சாபி பையன் இருவருக்குமிடையே நடக்கும் காதல் கதைதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Rez Ball (ஆங்கிலம்) – Netflix

Rez Ball (ஆங்கிலம்)

சிட்னி ஃபிரிலேண்ட் இயக்கத்தில் கெளச்சானி ப்ராட், ஜெஸிகா மட்டேன், டெவின் சாம்ப்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Rez Ball’. கூடை பந்து விளையட்டு பற்றிய ஸ்போர்ட்ஸ் திரில்லர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Will & Harper (ஆங்கிலம்) –

Will & Harper

ஜோஷ் இயக்கத்தில் வில் ஃபெரல், ஹார்பர் ஸ்டீல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Will & Harper’. இரண்டு நண்பர்கள் சேர்ந்து நினைவுகளைப் பகிர்ந்தபடி செல்லும் ரோட் ட்ரிப்தான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Wolfs (ஆங்கிலம்) – Apple Tv +

Wolfs

ஜான் வாட் இயக்கத்தில் அமி ரையான், ஆஸ்டின் ஆப்ராம்ஸ், ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Wolf’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ‘Apple Tv +’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Killer Heat (ஆங்கிலம்) – Amazon Prime Video

Killer Heat

பிலிப்பே லோக்கேட் இயக்கத்தில் ஜோசப் கார்டன், ஷைலனே வூட்டே, ரிச்சர்ட் மட்டன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Killer Heat’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

Saripodhaa Sanivaaram (தெலுங்கு/ தமிழ்) – Netflix

Saripodhaa Sanivaaram

விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Saripodhaa Sanivaaram’. நானி சனிக்கிழமை மட்டும்தான் சண்டைபோடுவார், மற்ற நாட்களில் சண்டைபோட மாட்டார் இதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Prathinidhi 2 (தெலுங்கு) – Aha

Prathinidhi 2

மூர்த்தி இயக்கத்தில் நாரா ரோஹித், ஶ்ரீ லெல்லா, சப்தகிரி, தனிக்கெல்லா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Prathinidhi 2’. ஊழல் பற்றிய அரசியல் திரில்லர் திரைப்படமான இது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Bharathanatyam (மலையாளம்) – Manorama MAX

Bharathanatyam

கிருஷ்ணதாஸ் முரளி இயக்கத்தில் சாய்ஜி க்ரூப், சாய்குமார், ஸ்ருதி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bharathanatyam’. குடும்ப பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பழமைவாதத்தோடு இருக்கும் பெரியவர்கள், அதைப் பின்பற்றாமல் சேட்டைகள் செய்யும் பிள்ளைகள், பேரன் பேத்திகள் என ஜாலியான திரைப்படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் ‘Manorama MAX’ ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

Vaazha (மலையாளம்) – Disney + Hotstar

Vaazha

ஆனந்த் மேனன் இயக்கத்தில் ஜெகதீஷ், அஜீஷ், சிஜு, ஜோமோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Vaazha’. வாழ்வில் பொறுப்பற்று எதிர்கால வாழ்க்கைக் குறித்தச் சரியான தெளிவில்லாத, சரியாகப் படிக்காத நண்பர்கள் தங்கள் வாழ்வை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படமான ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

Stree 2: Sarkate Ka Aatank (இந்தி) – Amazon Prime Video

Stree 2: Sarkate Ka Aatank (இந்தி)

அமர் கெளஷிக் இயக்கத்தில் ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி, அபர் சக்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Stree 2: Sarkate Ka Aatank’. காமெடி, ஹாரர் திரில்லர் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Ulajh (இந்தி) – Netflix

Ulajh (இந்தி) – Netflix

சுதன்ஷீ சர்யா இயக்கத்தில் ஜான்வி கபூர், ரோஷன் மேத்யூ, குல்ஷன் தேவ்வய்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Ulajh’. திரில்லர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Auron Mein Kahan Dum Tha (இந்தி) – Amazon Prime Video

Auron Mein Kahan Dum Tha (இந்தி)

நீரஜ் பாண்டே இயக்கத்தில் அஜய் தேவ்கன், தபு, ஜிம்மி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Auron Mein Kahan Dum Tha’. ரொமாண்டிக் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Exhuma (கொரியன்) – Amazon Prime Video

Exhuma (கொரியன்) – Amazon Prime Video

ஜாங் ஜியா ஹுயுன் இயக்கத்தில் சோய் மின் சிக், கிம் கோ யின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கொரியன் திரைப்படம் ‘Exhuma’. ஹாரர், திரில்லர் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Inside Out 2 (ஆங்கிலம்) – Disney + Hotstar

Inside Out 2 (ஆங்கிலம்) – Disney + Hotstar

மெக் லேஃபாவே எழுத்தில் கென்சிங்ட்ண்ட் டால்மன், அனன்யா பாண்டே (இந்தி வெர்ஷன்), ஆமி போஹ்லர், மாயா ஹாக் உள்ளிட்டோர் குரலில் உருவாகியுள்ள அனிமேஷன் திரைப்படம் ‘Inside Out 2’. இத்திரைப்படம் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.