புதுடெல்லி: முப்படைகளிலும் அக்னிபாதை திட்டத்தின் கீழ் அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ராணுவத்தில் இருந்து 4 ஆண்டு பணிக்குப் பின் விடுவிக்கப்படும் அக்னி வீரர்கள் காவல்துறையில் சேர இடஒதுக்கீடு அறிவிப்புகளை ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் அறிவித்துள்ளன. மத்திய ஆயுத படையில் சேர அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அறிவிப்பை பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் ‘பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் அறிவித்து உள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் பொது நிர்வாக பிரிவில் உள்ள காலிபணியிடங்களில் அக்னி வீரர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் எனவும், மற்ற மையங்களில் உள்ள பாதுகாப்பு பணியிடங்கள் மற்றும் இதர நிர்வாக பணியிடங்களில் 50 சதவீதம் அளவுக்கு அக்னி வீரர்கள்தேர்ந்தெடுக்கப்படுவர் என பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம்தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்துடன் இணைந்துபணியாற்றும் மற்ற நிறுவனங்களும், அக்னி வீரர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க ஊக்குவிக்கப்படுவர் எனவும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.