கொல்கத்தா: நீலம் மற்றும் வெள்ளை நிறப்பெட்டிகள்பூட்டப்பட்ட மரப்பலகையால் ஆனஇருக்கைகள் கொண்ட அழகிய டிராம்வண்டிகள் கொல்கத்தா நகர வீதிகளில் கடந்த 151 ஆண்டுகளாக ஒய்யாரமாக வலம் வந்தன. தற்போது பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறுவதால் கொல்கத்தா டிராம் போக்குவரத்து சேவையை நிறுத்தவிருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் கொல்கத்தா மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
சமூக ஊடக பதிவர் ஒருவர் “ஒருமகத்தான சகாப்தம் முடிந்தது.கொல்கத்தா டிராமின் 151 ஆண்டு மரபு முடிவுக்குவந்துவிட்டது. இந்த சரித்திர சின்னத்தின் அத்தியாயம் நிறைவடையும்போது வரலாற்றின் ஒரு பகுதிக்கு பிரியாவிடை கொடுக்கிறோம். எதிர்கால சந்ததியினர் சாயம்போன புகைப்படங்களின் வழியாகவும் நினைவலைகளின் வழியாகவும் மட்டுமே டிராம் குறித்து அறிந்து கொள்ள நேரும். இறுதி அஞ்சலி கொல்கத்தா டிராம்”என்று கனத்த மனதுடன் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவர், “பாரம்பரிய சின்னமாக நீடித்திருந்த கொல்கத்தாவின் நூற்றாண்டு பழமைவாய்ந்த டிராம் சேவையைநிறுத்த துணிந்த அதிகாரத்துக்கு சபாஷ்!நவீனப்படுத்துவதற்குப் பதிலாக அதனைஅழுக வைத்துவிட்டார்கள்” என்றுஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், கொல்கத்தா நகரின்மையத்திலுள்ள எஸ்பிளேனேட் பகுதியிலிருந்து மைதான் பகுதிவரை செல்லும் டிராம் வண்டி சேவை மட்டும் தொடரும் என்பது தெரியவந்துள்ளது. சரித்திர புகழ்வாய்ந்த விக்டோரியா நினைவு மண்டபம், மைதான் பகுதியில் உள்ள புல்வெளி வழியாக இந்த வழித்தடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.