சிஎஸ்கே டார்கெட்டில் 2 பவுலர்கள், ஒருவர் சென்னை செல்லப்பிள்ளை

ஐபிஎல் 2025 மெகா ஏலம் நவம்பர் கடைசி அல்லது டிசம்பர் தொடக்கத்தில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இம்முறை ஐபிஎல் ஏலத்தை பிரம்மாண்டமாக நடத்த சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதனால் அங்கு ஏலம் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஏலத்தில் யாரை எடுக்கலாம் என்ற பிளானில் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இருக்கும் பத்து அணிகளும் ஒரு மேப் போட்டுவிட்டன. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வேகப் பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளரை டார்க்கெட் செய்ய முடிவெடுத்திருக்கிறது. இருவருமே இந்தியர்கள் என்பதும், அதில் ஒருவர் சென்னையின் செல்லப்பிள்ளை என்பதும் கூடுதல் தகவல்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சரிவர அந்த அணிக்கு அமையவில்லை. கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே அந்த அணி இந்த பிரச்சனை இருக்கிறது. அதனால் இம்முறை ஸ்டார் பவுலர் ஒருவரை தூக்கிவிடலாம் என முடிவெடுத்திருக்கிறது. இப்போதைக்கு சிஎஸ்கேவின் வேகப்பந்துவீச்சாளர் பிளானில் இருக்கும் பிளேயர் முகமது ஷமி. அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சூழலில், ஒருவேளை அவருடைய பெயர் ஏலத்தில் வந்தால் எடுத்துவிடலாம் என்கிற முடிவில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஏழு முதல் 8 கோடி ரூபாய் வரை அவருக்கு செலவு செய்யவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ப்ளூ பிரின்ட் போட்டு வைத்திருக்கிறது.

அடுத்தாக சிஎஸ்கேவின் டார்க்கெட்டில் இருக்கும் பிளேயர் சென்னையின் செல்லப்பிள்ளையான ரவிச்சந்திரன் அஸ்வின். அவர் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவர். பின்னர் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தால் டெல்லி, பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக ஆடினார் ரவிசந்திரன் அஸ்வின். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாட விரும்புவதாக கடந்த சில வருடங்களாகவே தெரிவித்து வருகிறார் அஸ்வின். அவரை இம்முறை மீண்டும் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்கவும் விருப்பம் தெரிவித்துவிட்டதாம். அந்த அணிக்கு இருக்கும் தொகையில், அஸ்வின் ஏலத்தில் வந்தால் அவரை எடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த இரண்டு பிளேயர்களை தவிர்த்து விக்கெட் கீப்பர் ஆப்சனில் ஒரு இளம் வீரரை எடுக்கலாம் என்ற முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது. ரிஷப் பந்த்தைக் கூட ஏலத்தில் எடுக்கலாம் என்ற பேச்சுகள் எழுந்த நிலையில், அவரை சிஎஸ்கே நிர்வாகம் பரிசீலிக்கவே இல்லையாம். தோனிக்கு அவரை பிடித்திருந்தாலும், வேற பிளேயரை பார்க்கலாம் என்ற முடிவில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.