Amaran: "நான் தொகுத்து வழங்க; ராஜ்குமார் இயக்க; சாய் பல்லவி பங்கேற்ற டிவி ஷோ…" – சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’.

இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். நெல்சன் விஜய் தொலைக்காட்சியிலிருந்த போது அவருடன் அங்கு பணியாற்றியவர் ராஜ்குமார் பெரியசாமி. ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை இயக்கியிருக்கிறார். கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ரங்கூன்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘அமரன்’ படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ‘இந்து ரெபேக்கா வர்கீஸ்’ என்ற உண்மை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார். தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

அமரன்

‘அமரன்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படம் தீபாவளி (அக்டோபர் 31) அன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் கலந்துகொண்டிருக்கின்றனர். அதில் பேசிய சிவகார்த்திகேயன், “இந்தப் படத்தில் நானும் சாய் பல்லவியும், கொஞ்ச நாட்கள் மட்டுமே ஒன்றாக இணைந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தது. நன்றாக வேலை செய்யக்கூடியவர். நான் தொலைக்காட்சிகளில் பணிபுரியும்போது இருந்தே அவரை எனக்குத் தெரியும்.

ராஜ்குமார் பெரியசாமிதான் ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நிகழ்ச்சியை டைரக்ட் செய்தார். அதில் சாய் பல்லவியும் கலந்துகொண்டிருக்கிறார். நான் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகளை ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்திருக்கிறார். அதனால் எங்களுக்கெல்லாம் நீண்ட நாள் பழக்கம் இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் நாங்கள் முதல் முறை சந்தித்துக்கொண்டோம் என்றெல்லாம் இல்லை. ஏற்கனவே நாங்கள் ஒன்றாகப் பயணித்திருக்கிறோம்.

சிவகார்த்திகேயன்

கோயம்புத்தூரில் ஒரு நிகழ்ச்சி நடந்தபோது அதை ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்தார். நான் அதனைத் தொகுத்து வழங்கினேன். சாய் பல்லவி அதில் கலந்துகொண்டார். இந்த மாதிரி எங்களுக்குள் ஒரு பயணமே இருக்கிறது. ஒரே சேனலில் இருந்து வந்து மூன்று பேரும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறோம். சாய் பல்லவி உடன் இணைந்து நடிக்கும்போது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.