விளையாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டங்களுக்கான துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். காலக்கோடு வழியாக உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதையைப் பற்றி இங்கே.
மே 3, 2008 – ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உதயநிதி முதல் முதலாக தயாரித்த ‘குருவி’ படம் வெளியானது
அக்டோபர் 17, 2009 – ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் சூர்யா நடித்த ‘ஆதவன்’ திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் உதயநிதி முதல் முதலாக திரையில் தோன்றியிருந்தார்.
ஏப்ரல் 13, 2012 – உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்த முதல் திரைப்படமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ வெளியாகியிருந்தது.
ஜூலை 4, 2019 – இளைஞரணி செயலாளராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதனை அந்தப் பதவியிலிருந்து மாற்றி உதயநிதி இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
மார்ச் 01, 2019
உதயநிதி ஸ்டாலின் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சந்திரபாபு கொடுத்தார்.
ஏப்ரல் 2021 – சாத்தூர் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஒன்றிய அரசு கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான் என ஒரு செங்கலை காட்டி உதயநிதி செய்த பிரசாரம் வைரலானது.
நவம்பர் 14, 2019
சென்னை மாநகராட்சி தேர்தலில் உதயநிதி போட்டியிட வேண்டும் என இளைஞரணி சார்பில் நிர்வாகிகள் விருப்ப மனு அளித்தனர்.
மே 2021 – சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகினார்.
நவம்பர் 23, 2022 – உட்கட்சித் தேர்தலை தொடர்ந்து உதயநிதி மீண்டும் இளைஞரணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டிசம்பர் 14, 2022 – அமைச்சரவையில் மாற்றம். விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த சி.வி.மெய்யநாதன் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக மாற்றப்பட்டு உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராகவும் சிறப்புத்திட்டங்களுக்கான அமைச்சராகவும் அறிவிக்கப்பட்டார்.
இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டபோது, சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது எதிர்கொண்ட அதே விமர்சனக் கணைகளை, அமைச்சர் அறிவிப்பின்போதும் எதிர்கொள்கிறேன். விமர்சனங்களை என் செயலால் எதிர்கொள்வேன்’ என்று அன்று பதிலளித்து இருந்தேன். அமைச்சர் பொறுப்பிலும் என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன்.” என உதயநிதி பேசியிருந்தார்.
செப்டம்பர் 2023
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க நிகழ்வில் உதயநிதி சனாதனம் குறித்து பேசிய பேச்சு விவாதப் பொருளானது
ஜூன் 2024 – முதலமைச்சர் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் உதயநிதியின் உற்ற நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ், ‘முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உதயநிதி செயல்பட்டு வருகிறார். விளையாட்டுத் துறை அமைச்சர், இளைஞர் நலத்துறை அமைச்சர் என பொறுப்பு வகித்தாலும் எங்களைப் போன்றவர்களுக்கு அவர் தான் துணை முதலமைச்சர்,” என்றார்.
ஆகஸ்ட் 5 2024,
உதயநிதியை துணை முதல்வர் ஆக்கப்போகிறீர்களா எனும் கேள்விக்கு, கோரிக்கை வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை என முதல்வர் பதில் கூறியிருந்தார்.
செப்டம்பர் 17, 2024
திமுகவின் முப்பெரும் விழாவில் ஸ்டாலின் விருது வென்ற எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், ‘மேடையில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கு இன்னும் ஏன் தயக்கம்? உதயநிதியை துணை முதல்வர் ஆக்க வேண்டாமா?’ என பேசியிருந்தார்.
செப்டம்பர் 24, 2024
உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவது பற்றிய கேள்விக்கு, ‘மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது.’ என முதல்வர் ஸ்டாலின் பதில்.
செப்டம்பர் 28, 2024
விளையாட்டு மற்றும் சிறப்புத்திட்டங்களுக்கான துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். நாளை பதவியேற்கவிருக்கிறார்.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டிருப்பதை பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.