ஐபிஎல் 2025 தொடருக்கான ஏல விதிமுறைகள் மற்றும் பிளேயர் ரீட்டென்ஷன் விதிமுறைகளை ஐபிஎல் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இம்முறை ஏலத்தில் பங்கேற்காமல் மினி ஏலத்தில் வெளிநாட்டு பிளேயர்கள் நேரடியாக பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மெகா ஏலத்தில் பங்கேற்கும் பிளேயர்கள் மட்டுமே மினி ஏலத்திலும் பங்கேற்க முடியும் என ஐபிஎல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐபிஎல் புதிய விதிமுறைகள்
மேலும், மினி ஏலத்தில் பங்கேற்கும் பிளேயர்களுக்கு மெகா ஏலத்தில் அதிகபட்சமாக செல்லும் பிளேயர்களின் விலை அல்லது ஒரு அணி அதிகபட்ச தொகைக்கு ரீட்டென்ஷன் செய்கிறதோ அந்த தொகையை கொடுக்கலாம் என கூறியுள்ளது. மேலும், ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்ற பிறகு திடீரென ஏதாவது ஒரு காரணம் கூறி விளையாட வராமல் இருந்தால் அவர்களுக்கு 2 ஆண்டுகள் ஐபிஎல் விளையாடவும், ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணியில் தோனி
அதேபோல், இந்திய வீரர்கள் யாரேனும் 5 ஆண்டுகள் எந்தவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியும் விளையாடாமல் இருந்தால் அவர்களை அன்கேப்டு பிளேயராக தக்க வைத்துக் கொள்ளலாம் என ஐபிஎல் அறிவித்துள்ளது. இந்த விதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் தோனி சர்வதேச கிரிக்கெட் விளையாடி 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டதால் அன்கேப்டு பிளேயர்கள் என்ற முறையில் சிஎஸ்கே அணி அவரை தக்க வைத்துக் கொள்ளும். ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது தக்க வைக்கப்படும் பிளேயர்களுக்கான பணத் தொகையையும் ஐபிஎல் அறிவித்துள்ளது. அதிகப்சமாக 18 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக 11 கோடி ரூபாயும் பிளேயர்களுக்கு கொடுக்க வேண்டும் என புதிய ரூல்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டூபிளசிஸ் மீண்டும் சிஎஸ்கே திரும்புவாரா?
இதனால் இவ்வளவு தொகை கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை தக்க வைக்குமா? அதனை அவரும் விரும்புவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னொருபுறம் பாப் டூபிளசிஸ்-யை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை ஏலத்தில் எடுக்க விரும்புகிறது. ஆனால் அவரை ஏலத்துக்கு ஆர்சிபி அணி கொண்டு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை டூபிளசியை ஏலத்தில் சிஎஸ்கே அணி எடுத்தாலும் ஆடிஎம் விதிமுறை மூலம் மீண்டும் ஆர்சிபி அணி அவரை தக்க வைக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஏனென்றால் அதிகபட்சமாக 6 பிளேயர்களுக்கு ஆர்டிஎம் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஐபிஎல் தெரிவித்திருக்கிறது. அதில் ஒரு இடத்தை கட்டாயம் இந்தியாவின் அன்கேப்டு பிளேயருக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எஞ்சிய 5 இடங்களில் இந்திய பிளேயர்கள் அல்லது வெளிநாட்டு பிளேயர்கள் என யாரை வேண்டுமானாலும் தக்க வைத்துக் கொள்ளலாம் என ஐபிஎல் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. இந்த விதிமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளானுக்கு பாதகமாக அமைந்திருக்கிறது.