சிட்ரோன் இந்தியா நிறுவனம் ஏர்கிராஸ் எஸ்யூவி மாடலில் தற்பொழுது குறைந்த விலை 1.2 NA எஞ்சின் ஆப்ஷனில் அறிமுகம் செய்துள்ளதை தொடர்ந்து கூடுதலாக எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர்பேக்குகள் உள்ளிட்டவற்றை நீட்டித்துள்ளது.
முன்பாக C3 Aircross என அழைக்கப்பட்ட நிலையில் தற்போது Aircross என்ற பெயரை மட்டும் கொண்டுள்ளது.
முன்பாக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மட்டும் பெற்றிருந்த நிலையில் தற்போது 82 hp பவர் மற்றும் 115Nm டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ளது.
110 PS பவர் மற்றும் 190Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் Puertech 110 டர்போ பெட்ரோல் என்ஜினில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.
You, Plus, மற்றும் Max என மூன்று விதமான வேரியண்டின் அடிப்படையில் மேக்ஸ் டாப் மாடலில் 6 ஏர்பேக்குகள், எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் ஆனது சேர்க்கப்பட்டு கூடுதலாக ஃப்ளிப் கீ, ஆட்டோமேட்டிக் ஏசி, ஓட்டுநர் பக்கத்தில் பவர் விண்டோஸ், விங் மிரர்-யில் டர்ன் இன்டிகேட்டர் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
வேரியண்ட் | விலை பட்டியல் |
1.2 NA You | Rs. 8.49 lakh |
1.2 NA Plus | Rs. 9.99 lakh |
1.2 Turbo Plus | Rs. 11.95 lakh |
1.2 Turbo AT Plus | Rs. 13.25 lakh |
1.2 Turbo Max | Rs. 12.7 lakh |
1.2 Turbo AT Max | Rs. 13.99 lakh |
கூடுதலாக 5+2 இருக்கை பெற்றுள்ள மாடல்களின் விலை ரூ.35,000 வரை கூடுதலாக அமைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Ex-showroom)