புதுடெல்லி: தீவிர சிகிச்சை பிரிவில்(ஐசியு) சிகிச்சை பெறும் பல நோயாளிகள் தீராத நோய்வாய்ப்பட்டவர்களாக உள்ளனர். இவர்களுக்கு உயிர்காக்கும் கருவிகளை அகற்றுவது தொடர்பான வரைவு விதிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: தீராத நோய்வாய்ப்பட்டவர் களுக்கு உயிர்காக்கும் சிகிச்சைகள் பயனளிக்க கூடியதாக இல்லை.இது தவிர்க்கக்கூடிய சுமைகளை அதிகரிக்கிறது. நோயாளிகளுக்கும் வேதனையை அதிகரிக்கிறது. இவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சைகள் பொருத்தமற்றது. மேலும், நோயாளிகளின் குடும்பத்தினரின் பொருளாதார செலவு, மனஅழுத்தம், மருத்துவஊழியர்களின் தார்மீக துயரத்தையும் அதிகரிக்கிறது. இதுபோன்ற தீராத நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சைகளை நிறுத்தும் முறைதான் உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது.
தீராத நோய்வாய்ப்பட்ட வர்களால் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது. அவர்களின் இறப்பு தவிர்க்க முடியாதது. இந்தப் பிரிவில் 72 மணி நேரத்துக்குப்பின், முன்னேற்றம் இல்லாத தீவிர மூளைக் காயமும் சேர்க்கப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்தவர்கள், உயிர்காக்கும் சிகிச்சைகளால் பயனடைய வாய்ப் பில்லாதவர்களுக்கு உயிர்காக்கும் கருவிகளை அகற்றுவதற்கான வரைவு விதிமுறைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் உருவாக்கி யுள்ளது.
நோயாளி முடிவெடுக்க முடியாத நிலையை அடையும் போது,அவரது நலனில் அக்கறையுள்ள குடும்ப பிரதிநிதி, உயிர் காக்கும்கருவிகளை அகற்றுவது பற்றிநோயாளி சார்பில் முடிவெடுக் கலாம். தனது சிகிச்சை விஷயத்தில் யார் முடிவெடுக்கலாம் என நோயாளி, செல்லுபடியாகக்கூடிய மருத்துவ படிவத்தில் (ஏஎம்டி) குறிப்பிட்டிருந்தால், அவர் நோயாளியின் சார்பில் முடிவெடுக்கலாம். அவ்வாறு இல்லையென்றால், நோயாளியின் குடும்பத்தில் உள்ள நெருங்கிய உறவினர் அல்லது காப்பாளர் முடிவெடுக்கலாம்.
அரசு வகுத்துள்ள விதிமுறைப்படி, தீராத நோய்வாய்ப்பட்ட வருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொருத்தமற்றது என்பதை முதல் நிலை மருத்துவ குழு (பிஎம்பி) முடிவு செய்ய வேண்டும். இதில்குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் கொண்ட மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் இடம் பெற வேண்டும். இந்த முடிவை 2-ம் நிலைமருத்து குழு (எஸ்எம்பி) சரிபார்க்கவேண்டும். முதல் நிலை குழுவில் இடம்பெற்ற மருத்துவர்கள், 2-வது குழுவில் இடம்பெறக் கூடாது. மருத்துவமனையும் சிகிச்சை நெறிமுறைக் குழுவை உருவாக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
அக்டோபர் 20-க்குள் கருத்து: இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அக்டோபர்20-ம் தேதிக்குள் தெரிவிப்பதற்காக இந்த வரைவு விதிமுறைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஹோலி பேம்லி மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவர் டாக்டர் சுமித் ராய்கூறுகையில், ‘‘தனிநபர் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் அதுதுரதிர்ஷ்டவசமாக சில நடைமுறைகளை, அமல்படுத்த முடியாத அளவுக்கு சிக்கலாக்கியுள்ளது. இவற்றை வரைவு விதிமுறைகள் சற்று எளிதாக்கும் என நம்பப் படுகிறது’’ என்றார்.