இளங்கலை படிப்பு முடித்திருக்கிறார்களா? ரயில்வே துறையில் கிட்டதட்ட 8,113 காலி பணியிடங்கள் காத்திருக்கின்றன. அவற்றின் தகவல்கள்…
என்னென்ன பணிகள்?
டிக்கெட் பரிசோதகர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் நிர்வாகி, சீனியர் கிளர்க், ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட்.
என்னென்ன தேர்வுகள் நடைபெறும்?
முதல்நிலை தேர்வாக கணினி சார்ந்த தேர்வு நடைபெறும். அடுத்ததாக, ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கு கணினி சார்ந்த ஆப்டிட்யூட் தேர்வும், சீனியர் கிளர்க் மற்றும் அக்கவுண்ட் அசிஸ்டன்டிற்கு டைப்பிங் தேர்வும், சரக்கு ரயில் நிர்வாகி மற்றும் டிக்கெட் பரிசோதகருக்கு இரண்டு கட்ட கணினி சார்ந்த தேர்வும், பின்னர் ஆவண சரிப்பார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனையும் நடைபெறும்.
மொத்த பணியிடங்கள்: 8,113
வயது வரம்பு: 18 – 33 (பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், பெஞ்ச்மார்க் இயலாமை, முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் 18 வயதிலிருந்து 36 வயது வரை விண்ணப்பிக்கலாம்)
ஆரம்ப சம்பளம்: ரூ.29,200 – ரூ.35,400
விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 13.10.2024
இந்த பணிகளுக்கு https://www.rrbchennai.gov.in/ என்ற வலைதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
12-ம் வகுப்பு மட்டுமே முடித்தவர்களுக்கும், 3,445 பணியிடங்கள் காத்திருக்கின்றன. இதில் டிக்கெட் கிளர்க், அக்கவுண்ட் கிளர்க், ரயில் கிளர்க், ஜூனியர் கிளர்க் (டைப்பிஸ்ட்) ஆகிய பணிகள் அடங்கும்.
என்னென்ன தேர்வுகள் நடைபெறும்?
கணினி சார்ந்த தேர்வு, கணினி சார்ந்த தட்டச்சு திறன் தேர்வு என இருகட்ட தேர்வு நடைபெறும்.
அதன் பின்னர், ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு நடக்கும்.
வயது வரம்பு: 18 – 30 (பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், பெஞ்ச்மார்க் இயலாமை, முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் 18 வயதிலிருந்து 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்)
ஆரம்ப சம்பளம்: ரூ.19,990 – ரூ.21,700
விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 20.10.2024
இந்தப் பணிகளுக்கு https://www.rrbchennai.gov.in/ இணையதளத்தின் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.