ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து குறித்து சமீப நாட்களாக அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
முதலில் விவாகரத்து தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டார் ஜெயம் ரவி. அதன் பிறகு, ‘இது என் கவனத்துக்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் எடுக்கப்பட்ட முடிவு’ என ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் பிறகு, ஆர்த்தி அமைதி காத்து வந்த நிலையில், பல விமர்சனங்களும் அவரைச் சுற்றி எழுந்தன. தற்போது தான் கூறியது தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டதாக அறிவித்திருக்கிறார்.
அதில் அறிக்கையில் அவர், “எனது மெளனமானது பலவீனமோ, குற்றவுணர்ச்சியோ அல்ல. நான் கண்ணியமாக இருக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளேன். உண்மையை மறைத்து என்னை மோசமாகச் சித்தரிக்க நினைப்பவர்களுக்கு நான் பதிலளிக்க முயற்சிக்கவில்லை. ஆனால், நான் சட்டத்தை நம்புகிறேன். அதன் மூலமாக நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
எனது முந்தைய அறிவிப்பு தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டது. அந்த விவகாரத்து அறிவிப்பானது எனது ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டது என்றுதான் சொன்னேன். அந்த விவகாரத்தைப் பற்றி தெரியாது என்று நான் சொன்னதாக, என் வார்த்தைகள் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டுவிட்டது. நான் இன்னும் இந்த விஷயத்தில் தனிப்பட்ட உரையாடல் அவருடன் நிகழும் என நம்புகிறேன். திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன். மற்றவர்களின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் உரையாடல்களில் நான் ஈடுபடமாட்டேன். என்னுடைய கவனம் என் குடும்பத்தின் நல் வாழ்வில் உள்ளது.” எனப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…