இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி!

கொழும்பு: தீவு தேசமான இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். இது குறித்த அறிவிப்பை அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சனிக்கிழமை அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் சுமார் 42.31 சதவீத வாக்குகளை அநுர குமார திசாநாயக்க பெற்றுள்ளார். இது தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய சக்தி முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச இரண்டாம் இடம் பிடித்தார். ரணில் விக்ரம சிங்க … Read more

வேள் பாரி காட்சிகள் திருட்டு… கங்குவாவா… தேவாராவா… எந்த படத்தை சொல்கிறார் இயக்குநர் ஷங்கர்?

Director Shankar: தான் உரிமம் பெற்று வைத்துள்ள வேள் பாரி நாவலின் முக்கிய காட்சிகள் பல திரைப்படங்களில் அனுமதியின்றி பயன்படுவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

FIDE செஸ் ஒலிம்பியாட் : இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்று சாதனை…

FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 11வது மற்றும் இறுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்திய ஆடவர் அணி ஸ்லோவேனியா அணியை எதிர்கொண்டது. மகளிர் அணி அஜர்பைஜான் அணியை எதிர்கொண்டது. இந்த சுற்றில் இந்திய அணியின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் ஸ்லோவேனியாவின் விளாடிமிர் பெடோசீவ்-வை எதிர்கொண்டார். துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய குகேஷ் இதில் வெற்றி பெற்றார். அதேபோல் அர்ஜுன் எரிகைசி – ஜன் சபெல்ஜ்ஜை வீழ்த்தினார். மகளிர் பிரிவில் சிறப்பாக ஆடிய திவ்யா தேஷ்முக் அஜர்பைஜானை … Read more

இலங்கையின் நிலம், வான், கடல் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது-அனுர குமார திசநாயக்க

கொழும்பு: இலங்கையின் நிலம், வான், கடல் ஆகியவை இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது என இந்தியாவுக்கு ஏற்கனவே தாம் வாக்குறுதி கொடுத்துள்ளதாக புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தம்மை சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் தாம் இதனை தெரிவித்திருக்கிறேன் என்கிறார் அனுர குமார திசநாயக்க. இலங்கையின் புதிய Source Link

சொம்புக்கெல்லாம் என்னடா மரியாதை.. நான் ஓடிப்போய் கல்யாணம் செஞ்சவதான்.. மணிமேகலை பதிலடி!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ நிறைவடைந்தாலும் அது ஏற்படுத்தியுள்ள சர்ச்சை நிறைவடையாது போல. இந்த நிகழ்ச்சியில் குக்காக செயல்பட்ட பிரியங்கா தன்னை ஆங்கராக செயல்படவிடவில்லை என்று குற்றச்சாட்டுகளை அடுக்கிய மணிமேகலை, நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார். இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் மணிமேகலைக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்ட நிலையில், சிலர் பிரியங்காவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.

இலங்கை அதிபரானார் மார்க்சிஸ்ட் தலைவர்… யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?

Sri Lanka Elections 2024: 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். 

Anura Kumara Dissanayake : 'கூலிக்காரர் மகன் டு இலங்கை அதிபர்' – யார் இந்த அநுரா குமார திசநாயக்கே?

கடந்த பிப்ரவரி மாதத்தில் டெல்லியிலிருந்து இலங்கைக்கு ஒரு முக்கிய அழைப்பு செல்கிறது. அந்த அழைப்பை ஏற்று இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசநாயக்கே டெல்லிக்கு வருகிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலும் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கரும் அவருடன் முக்கிய சந்திப்பில் ஈடுபடுகின்றனர். தெற்காசிய அளவில் முக்கியமான சந்திப்பாக இது பார்க்கப்பட்டது. அமெரிக்கா, சீனா, இந்தியா என பெரிய நாடுகளெல்லாம் இலங்கையின் அதிபர் தேர்தலை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் முடிவுகளில் மக்கள் … Read more

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளத்தில் உழவாரப்பணி: ஒரு டன் குப்பைகள் அகற்றம்

திருநீர்மலை: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளத்தில் உழவாரப்பணி நடைபெற்றது. இதில் ஒரு டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. திருநீர்மலை ரங்கநாத பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இந்த கோயிலில், பெருமாள் நான்கு கோலங்களில் காட்சி அளிக்கிறார். இந்தக் கோயிலின் எதிரிலுள்ள புஷ்கரிணியில் (குளம்) சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம், க்ஷீர தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன. இந்த குளம் முறையாக பராமரிக்கப்படாமல் … Read more

திருப்பதி லட்டு விவகாரம் | ‘‘முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி இருப்பது உண்மையல்ல’’ – பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் கடிதம்

ஹைதராபாத்: திருப்பதி லட்டுகளில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பியதாக குற்றம்சாட்டி முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன், பிரதமர் மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். மேலும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பொறுப்பற்ற மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட அறிக்கைகள் பக்தர்களின் நம்பிக்கைகளை காயப்படுத்தியிருப்பதுடன், திருப்பதி தேவஸ்தான போர்டின் புனிதத்தன்மையை குலைப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜெகன்மோதன் ரெட்டி தனது கடிதத்தில், “வெங்கடேச பெருமாளுக்கு இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் கோடிக்கணக்கான … Read more

ஈரான் சுரங்கத்தில் வெடி விபத்து: 50 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்

தெஹ்ரான்: ஈரானின் தெற்கு கொராசன் பிராந்தியத்தில் உள்ள சுரங்கத்தில் எரிவாயு வெடித்து நடந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன. விபத்து நடந்த பகுதியில் இயங்கி வரும் மாதன்ஜோ நிறுவனத்தால் நடத்தப்படும் சுரங்கத்தில் உள்ள பி மற்றும் சி பிளாக்குகளில் மீத்தேன் வாயு வெடித்ததால் இந்த விபத்து நடந்துள்ளது என்று அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்து குறித்து தெற்கு கொராசன் பிராந்தியத்தின் கவர்னர் அலி அக்பர் … Read more