Month: September 2024
மநீம தலைவராக கமல் மீண்டும் தேர்வு – செல்வப்பெருந்தகை வாழ்த்து
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் நேற்று (செப்.22) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. அதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு … Read more
ஆட்சேபனை கருத்து: வருத்தம் தெரிவித்தார் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி
பெங்களூரு: நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறப்படுவது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா வருத்தம் தெரிவித்துள்ளார். நிலத்தின் உரிமையாளர் – குத்தகைதாரர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று அழைத்திருந்தார். மேலும் பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு எதிராக பெண் வெறுப்பு கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார் .இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை … Read more
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வினை ரத்து செய்து விடுவாரா? கடம்பூர் ராஜூ!
நாளைக்கே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள். அப்படியாவது கையெழுத்து போட்டு நீட் தேர்வினை ரத்து செய்து விடுவாரா? கடம்பூர் ராஜூ கேள்வி.
IND vs BAN : சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை பொட்டலம் கட்டிய அஸ்வின், சொந்த மைதானத்தில் செம கெத்து
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்கேதசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் எடுக்க, வங்கதேசம் அணி 149 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 287 ரன்கள் எடுத்தபோது டிக்ளோர் செய்தது. இதனால் இந்திய அணி வங்கதேச அணியைவிட 514 ரன்கள் முன்னிலை பெற்று 515 ரன்களை வெற்றி … Read more
ஒரு வருடமாக பற்றி எரியும் மணிப்பூருக்கு மோடி என்ன செய்தார் : ஓவைசி வினா
ஐதராபாத் அகில் இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி ஒரு வருடமாக பற்றி எரியும் மணிப்பூருக்கு பிரதமர் மோடி என செய்டார் என வினா எழுப்பியுள்ளார். பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூரில் பாஜக கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்து. 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்tததுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். பிறகு மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் … Read more
லெபனானுடன் வெடிக்கும் போர்? இஸ்ரேலுக்காக பெரும் படையை அனுப்பிய அமெரிக்கா! மத்திய கிழக்கில் பதற்றம்
ஜெருசலேம்: காசா போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே மோதல் என்பது உச்சமடைந்துள்ளது. இதனால் விரைவில் இஸ்ரேல் – லெபனான் இடையே போர் உருவாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்கா தனது 50 ஆயிரம் படை வீரர்கள், 6 போர் விமானங்கள், 12 போர் கப்பல்களை இஸ்ரேலுக்காக அனுப்பி வைத்துள்ளது. இதனால் இஸ்ரேல் Source Link
GOAT: அவமானப்படுத்தப்படும் விஜய்? அரசியலுக்கு வரும்போது இப்படியா? ஏ.ஜி.எஸ் மீது ரசிகர்கள் கோபம்!
சென்னை: தளபதி விஜய், சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகி முழுக்க முழுக்க அரசியலில் பயணிக்கவுள்ளார். இதனால் இவரது கடைசி இரண்டாவது படமாக கோட் படம் அமைந்தது. இந்தப் படத்தினை ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரித்தது. வெங்கட் பிரபு இயக்கினார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். படம் கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் தமிழ் நாட்டில்
"ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…" – பவன் கல்யாண் பதிவு
ஆந்திரா, ஆந்திரா துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ஏழுகொண்டலவாடா..! மன்னிக்கவும்… புனிதமாக கருதப்படும் திருமலை லட்டு பிரசாதம்… கடந்த ஆட்சியாளர்களின் கேடுகெட்ட போக்கின் விளைவாக தூய்மையற்றதாகிவிட்டது. விலங்கு எச்சங்களால் மாசுபட்டது. திறந்த மனங்கள் மட்டுமே இத்தகைய பாவத்திற்கு அடிபணிய முடியும். இந்தப் பாவத்தை ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்க முடியாமல் போனது இந்து இனத்தின் மீதான கறை. லட்டு பிரசாதத்தில் மிருக எச்சங்கள் இருந்ததை அறிந்த நொடியில் மனம் உடைந்தது. குற்ற உணர்வு … Read more
ஒருநாள் கிரிக்கெட்; தொடர்ச்சியாக அதிக வெற்றிகள்…இலங்கையை பின்னுக்கு தள்ளிய ஆஸ்திரேலியா
லீட்ஸ், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 270 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அலெக்ஸ் கேரி 74 … Read more