இலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னிலையில் அனுர குமார திசநாயக்க- 2வது இடத்தில் சஜித்-ரணில் தோல்வி முகம்!

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று அதிகாலை 12 மணியில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலையில் மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜேவிபியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான அனுர குமார திசநாயக்க அதிக வாக்குகள் முன்னணியில் உள்ளார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் Source Link

வயசான வல்கர் தாத்தாவை செருப்பால அடிக்கனும்.. மணிமேகலை – பிரியங்கா விவகாரம் குறித்து வெங்கடேஷ் பட்!

சென்னை: தமிழ் சின்னத்திரை உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிரச்னை என்றால் அது, விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடைபெற்ற பிரச்னைதான். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலைக்கும் குக்காக இருந்த பிரியங்காவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பெரும் பிரச்னையாக உருவெடுத்து, நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறும்

அதிகாரபூர்வ அடையாள அட்டைகளை, ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்த முடியும்

ஊரடங்குச் சட்டம்; பிறப்பிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில், பயணங்களை மேற்கொள்வதற்கு பொலிஸ் நிலையங்களின் ஊடாக ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரங்கள் வெளியடப்பட மாட்டாது என்று இலங்கை பெலிஸ் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அதிதியாவசிய, மற்றும் அவசர சேவைகளுக்காக பயணிக்கும்போது தமது அதிகாரபூர்வ அடையாள அட்டைகளை, ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்த முடியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவகங்கை: குடிநீர் போர்வெல்லில் கலக்கும் கழிவுநீர்… அவதியில் மக்கள்; கண்டுகொள்ளுமா அரசு?!

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றியம் காரைக்குடி வட்டம், சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம், பழைய செஞ்சை. இங்கு மிகப்பெரிய பிரச்னை குடிநீர். அதிலும், குடிநீர் இல்லை என்பது அங்கு பிரச்னை இல்லை, இருக்கும் குடிநீரை குடித்தால் நோய் வருமளவுக்கு குடிநீர் அசுத்தமாக இருக்கிறது என்பதுதான் பிரச்னை. இத்தகைய அசுத்தமான குடிநீரைக் குடித்து பலர் தோல் நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருவதாக, ஊர்மக்கள் கூறுகிறார்கள். சிவகங்கை குடிநீர் இவ்வளவு அசுத்தமாவதற்குக் காரணம் அந்த … Read more

ஆம்பூர் அருகே மேம்பால கட்டுமானப் பணியின்போது விபத்து: 3 தொழிலாளர்கள் படுகாயம்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே கட்டப்பட்டு வரும் மேம்பால கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்ததில் புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தின் சாரம் திடீரென சரிந்து விழுந்தது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். இந்த விபத்தை அடுத்து அங்கிருந்த பிற தொழிலாளர்கள் … Read more

பஞ்சாப் அரசுக்கு விதித்த ரூ.1,000 கோடி அபராதத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: திடக்கழிவு நிர்வாக முறையில் ஏற்பட்ட தோல்விக்காக பஞ்சாப் அரசுக்கு விதித்த ரூ.1,000 கோடி அபராதத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பஞ்சாப் மாநில அரசானது திடக்கழிவு நிர்வாக விதிகளைமுறையாகக் கடைப்பிடிக்காத தாலும், பல முறை எச்சரிக்கை விடுத்த நிலையில் முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினையான திடக்கழிவு நிர்வாகத்தில் தொடர்ந்து தோல்வி கண்டது. இதைத் தொடர்ந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) ரூ.1,000 கோடி அபராதத்தை பஞ்சாப் அரசுக்கு விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து பஞ்சாப் அரசு தரப்பில் … Read more

தடபுடலாக நடந்த சமந்தாவின் அண்ணன் திருமணம்.. சமந்தா கொடுத்த பரிசை பாருங்க!

சென்னை: நடிகை சமந்தாவின் அண்ணன் டேவிட்டின் திருமணம் ஜெனிவாவில் நடந்து முடிந்துள்ளது. தடபுடலாக நடந்த இந்த திருமண போட்டோக்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த தம்பதிகளுக்கு இணையவாசிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக சமந்தா திகழ்ந்து வருகிறார். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என ரவுண்டு கட்டி நடித்து வரும் சமந்தா, அரியவகை

முதலாவது தபால் வாக்கு முடிவு வெளியாகியுள்ளது.

2024 ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது தபால் வாக்கு முடிவு வெளியாகியுள்ளது அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் தபால் மூல வாக்கு முடிவு வெளியாகியுள்ளது. இம்முறை அளிக்கப்பட்டுள்ள மொத்த தபால் வாக்குகளின் எண்ணிக்கை 712,318 ஆகும்.

சிதம்பரம்: `2,000 ஏக்கர் நிலங்களை விற்றுவிட்டோமா?' – அரசின் குற்றச்சாட்டும் தீட்சிதர்கள் விளக்கமும்!

`சிதம்பரம் நடராஜர் கோயில் 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த காலகட்டத்தில் பக்தர்களின் காணிக்கை மூலம், ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வருவாயாக வந்தது. அதன் பிறகு தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்றதிலிருந்து, ஆண்டுக்கு வெறும் இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே வருவதாக கணக்கு காட்டுகிறார்கள். அதனால் கோயிலின் வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் கோயில் வளாகத்திற்குள் நடைபெறும் சட்டவிரோத கட்டுமானப் … Read more

“மறுக்கப்பட்ட உரிமையை வழங்கவே சாதி சான்றிதழ் கேட்கப்படுகிறது” – கனிமொழி எம்.பி

திருச்சி: “சாதி சான்றிதழ் கேட்பது சாதியை தெரிந்து கொள்வதற்காக அல்ல; அவர்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை, உரிமையை வழங்கவே சாதி சான்றிதழ் கேட்கப்படுகிறது” என்று கனிமொழி எம்.பி கூறினார். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திராவிடப் பள்ளி 5-ம் ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி கலந்துகொண்டு, திராவிடப் … Read more