திருப்பதி லட்டு பிரசாத நெய்யில் கலப்படம்: தேவஸ்தானம் அறிக்கை அளிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு

திருமலை: திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் குறித்த விளக்க அறிக்கையை உடனடியாக வழங்க வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு, மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய் ரூ.320 முதல் ரூ.411 என்ற விலையில் 5 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளது. இதில் ஒரு நிறுவனமான திண்டுக்கல்லை சேர்ந்த … Read more

IND vs BAN: ஸ்பின் போட வந்த சிராஜ்… ஷாக்கில் உடனே தடுத்த ரோஹத் சர்மா – ருசிகர சம்பவம்

IND vs BAN: பாகிஸ்தானுக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று பாகிஸ்தான் மண்ணிலேயே வெற்றி வாகை சூடிய வங்கதேசம் அணி, அதே உத்வேகத்துடன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கு முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் வங்கதேச அணி மோத உள்ளது.  இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப். 19ஆம் தேதி அன்று தொடங்கியது. சென்னை … Read more

Vettaiyan: "ரஜினியின் எனர்ஜி ரகசியம்; படையப்பா மொமென்ட்" – நெகிழ்ந்த 'வேட்டையன்' கதாநாயகிகள்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி ரிலீஸாகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ரானா, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அனிருத் இசையில் ஏற்கெனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியிருந்தன. இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய … Read more

உணவு பாதுகாப்பு தரவரிசையில் கேரளா மீண்டும் முதலிடம்… தமிழகத்திற்கு இரண்டாம் இடம்…

உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள உலக உணவு இந்தியா 2024 டெல்லி பிரகதி மைதானத்தில் செப் 19 முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக உலகளாவிய உணவு ஒழுங்குமுறை உச்சிமாநாடு (GFRS) நேற்று நடைபெற்றது FSSAI நடத்திய இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். அப்போது, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தயாரித்த ஆறாவது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டை (SFSI) … Read more

காலில் தாங்க முடியாத வலி.. மீண்டு வந்த டிடி.. ரஜினியைப் பார்த்த பூரிப்பில் போட்ட ஆட்டத்தை பாருங்க!

சென்னை: நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்து வழங்கி ரசிகர்களிடம் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல வருடங்களாக கால்வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில்,கடந்த மாதம் இவருக்கு முழங்காலில் பெரிய ஆப்ரேஷன் செய்யப்பட்டது. அதில் இருந்து மீண்டு வந்துள்ள டிடி, இணையத்தில் அட்டகாசமாக ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே நிகழ்ச்சியின்

நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம்!

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கத்தின் 2402/23 இற்கு அமைய, இன்று (21) இரவு 10.00 மணி முதல் நாளை (22) காலை 06.00 மணி வரை நாடுபூராகவும் மற்றும் உள்ளூர் கடற்பரப்பிற்கு உட்பட்டு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

`அமைச்சராக இருந்தபோது ரூ.27.90 கோடி லஞ்சம்?'-வைத்திலிங்கம், அவர் மகன் மீது விஜிலென்ஸ் வழக்கு பதிவு!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் தற்போது ஓ.பன்ன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். சமீபத்தில் அ.தி.மு.க இணைப்பு குறித்து பேசிவந்த வைத்திலிங்கம், 2025 பிப்ரவரி மாதத்திற்குள் அனைவரும் இணைந்து விடுவோம் எனக் கூறினார். அவரின் இந்தக் கருத்துக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் சரவணன், அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட லஞ்சம் பெற்றுள்ளதாக வைத்திலிங்கம், பிரபு ஆகியோர் … Read more

சிறைக் கைதிகளின் பாதுகாப்புக்காக கண்காணிப்புக் குழு கோரி வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் சிறைக்குள் இருக்கும் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து கண்காணிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு, மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சிறைத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை, வேலூர் சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி, தனது வீட்டு வேலைக்காக அழைத்து சென்று, பின்னர் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் … Read more

ரூ.4 லட்சத்துக்கு கூலிப்படையை அனுப்பி ஏர் இந்தியா ஊழியரை கொன்ற வழக்கு: பிரபல பெண் தாதா டெல்லியில் கைது

புதுடெல்லி: ஏர் இந்தியா ஊழியர் கொலையில் தொடர்புடைய பெண் தாதாவை டெல்லி போலீஸார் கைது செய்தனர். கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் சூரஜ் மான் (30) என்ற ஏர் இந்தியா ஊழியர் டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கு குறித்து போலீஸார் தீவிரவிசாரணை நடத்தினர். அப்போது சூரஜ் மான் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், சிறையில் உள்ள அவருடைய சகோதரரரும் தாதாவுமான பர்வேஷ் மானின் குடும்பத்துக்கு அவ்வப்போது சூரஜ் … Read more

இலங்கையில் அமைதியாக நடந்த அதிபர் தேர்தல்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

கொழும்பு: இலங்கையில் ஒன்பதாவது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குப் பதிவு இன்று (செப்.21) அமைதியாக நடைபெற்றது. இதையடுத்து, மாலை 6 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது. இந்தத் தேர்தலில் கிட்டத்தட்ட 70% வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 9-வது அதிபர் தேர்தல்: இலங்கையில் அதிபர் ஆட்சி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார். அதிபர் அரசின் தலைவராகவும், முப்படைகளின் தலைவராகவும் பதவியில் இருப்பார். இலங்கையில் … Read more