இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு நிலவரம் என்ன? – ஒரு ரவுண்டப்

கொழும்பு: இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பின்பு அதன் முதல் அதிபர் தேர்தலை சந்தித்துள்ள நிலையில், பிற்பகல் வரை 30 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களின் அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்காக மக்கள் வாக்களித்து வருகின்றனர். பதிவான வாக்குகள் இன்று மாலை முதல் எண்ணப்பட இருக்கின்றன. மாலை 4 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. தொடர்ந்து, 6 மணிக்கு அனைத்து வாக்குகளையும் எண்ணும் பணி தொடங்க இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். … Read more

"சிவகாசி, திருப்பாச்சி படங்களுக்கு சல்மான் கான் பெரிய ஃபேன்" – பேட்ட ராப் விழாவில் பிரபுதேவா பேச்சு

பிரபுதேவா நடிப்பில் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பேட்ட ராப். 1994ம் ஆண்டு வெளியான காதலன் படத்தின் புகழ்பெற்ற பேட்ட ராப் பாடலைத் தலைப்பாக வைத்த இப்படத்தை உருவாக்கியுள்ளனர். செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது. இதில் வேதிகா, சன்னி லியோன், ரமேஷ் திலக், பக்ஸ், விவேக் பிரசன்னா, வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரபுதேவா, “சல்மான் கான் … Read more

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதிக்கு பேருந்து வசதி! அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி  கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்குத் தேவையான கூடுதல் பேருந்து வசதிகளை நான்கு வாரங்களில் செய்து கொடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த பகுதியில் கள்ளச்சாராயம் பெருக காரணம், அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் குறித்து ஆய்வு செய்தது. கள்ளக்குறிச்சி பகுதியில்  கல்வராயன் மலைப் பகுதி மக்களின் … Read more

கோட் பட நடிகை மீது அடிதடி கேஸ்.. என்ன இருந்தாலும் மேல கைவெப்பாங்காளா? – நெட்டிசன்கள் கேள்வி!

சென்னை: மலையாளத்திலும் தமிழிலும் கவனிக்கும் நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர். இவர் தமிழில் கமல் ஹாசனின் உத்தம வில்லன், செல்வராகவன் எழுதிய மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, அஜித்குமாரின் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார். அண்மையில் வெளியான தளபதி விஜய்யின் ‘தி கோட்’

டெஸ்ட் கிரிக்கெட்; இந்தியாவுக்கு இது சாதகமாக உள்ளது – வங்காளதேச வீரர் தஸ்கின் அகமது

சென்னை, இந்தியா – வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் … Read more

திகாமடுல்ல மாவட்டத்தில் இதுவரை 30% வாக்களிப்பு

தமது வாக்களிப்பு நிலையங்களுக்கு முடிந்தவரை சென்று தமது வாக்குகளை வழங்குமாறு திகாமடுல்ல தெரிவத்தாட்சி அலுவலர் சித்தக அபேவிக்ரம தமது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பிற்பகல் 4 மணியுடன் வாக்களிப்பு செயற்பாடுகள் நிறைவடைய உள்ளதுடன் இறுதி கட்டம் வரை காத்திருக்காது வாக்குகளை வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறே விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கும் தமது வாக்குகளை அளிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தமது வாக்குகளை அளிப்பதற்கு உதவியாளர் ஒருவர் அவசியமாயின் அதற்கான உதவியாளரை அழைத்துச் செல்ல முடியும் என தெரிவித்த … Read more

Andhra: திரைப்படம் பார்த்தபடி மூளையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் – ஏன் தெரியுமா?

நம்மில் பலர் திரைப்பட வெறியர்களாக இருப்போம். சாப்பிடும்போது, படிக்கும்போது என எப்போதும் பிடித்த படத்தை பார்த்து மகிழ்ந்திருப்போம். ஆனால் அறுவை சிகிச்சையின் போது கூட படம் பார்த்த பெண்மணியினை உங்களுக்குத் தெரியுமா..? ஆனந்த லட்சுமி என்ற 55 வயதான பெண்மணி கை கால்கள் உணர்ச்சியின்மை மற்றும் தொடர் தலை வலி போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு காரணம் தனது மூளையில் கட்டி இருப்பதனை அவர் பின்னர் அறிந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெருமளவுக்கு தனக்கு வசதி … Read more

கடலோர காவல்படை சார்பில் மெரினாவில் தூய்மைப் பணி: 450 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

சென்னை: இந்திய கடலோர காவல்படை சார்பில் இன்று மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரையில் நடைபெற்ற தூய்மை பணியில் 450 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. சர்வதேச கடலோர தூய்மை தினம் (ICCD) ஆண்டுதோறும் செப்டம்பர் 3-வது சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் கடற்கரைகளை சுத்தம் செய்ய மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகின் பெருங்கடல்கள் மற்றும் நீர்வழிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும். இதையொட்டி இந்திய … Read more

‘சர்ச்சைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக ஊடகங்கள் மாறிவிட்டன’ – கேரள முதல்வர்

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு பேரிடருக்காக மத்திய அரசின் உதவி கோரி கேரள அரசு தயாரித்த குறிப்பாணை குறித்து ஊடகங்களின் சில பிரிவினர் பொய்யான செய்திகளை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ள மாநில முதல்வர் பினராயி விஜயன், இதனை‘அழிவுகரமான இதழியல்’ என்றும் சாடியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் தற்போது அழிவுகரமான இதழியல் நடந்து கொண்டிருக்கிறது. ஊடகங்களில் சில பகுதியினர் சர்ச்சைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறியுள்ளன. பொய்யான செய்திகளால் கேரள அரசு அவமதிப்புக்குள்ளாகி உள்ளது. ஊடகங்களில் இத்தகைய போலியான … Read more

இலங்கையின் எதிர்காலத்துக்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: அதிபர் வேட்பாளர் நமல் ராஜபக்ச

கொழும்பு: இலங்கையின் எதிர்காலத்துக்கு ஒவ்வொரு வாக்கும் மிகவும் முக்கியமானது என்று இலங்கை அதிபர் தேர்தல் வேட்பாளரும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனுமான நமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். இலங்கை அதிபர் 2024 தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்ய அவர், மக்களும் தங்களின் வாக்குகளை செலுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தான் வாக்களித்துவிட்ட புகைப்படத்தை பகிர்ந்து அவர் எழுதியுள்ள பதிவில், “நாங்கள் வாக்களித்து விட்டோம். இப்போது உங்கள் முறை – … Read more