Jayam Ravi: "அவர் ஆதரவற்ற பெண்; யாரையும் இழுக்க வேண்டாம்" – வதந்திகளுக்கு விளக்கமளித்த ஜெயம் ரவி

ஜெயம் ரவி குறித்து பரவும் வதந்திகளுக்கு அவர் விளக்கமளித்திருக்கிறார். ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால் ஆர்த்தி ‘திருமண பந்தத்தில் இருந்து விலகவேண்டும் என்பது அவராகவே எடுத்தமுடிவு தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல’ என்று கூறியிருந்தார். இது சமுக வலைதளங்களில் பேசுபொருளானது. ஜெயம் ரவி- ஆர்த்தி இதனிடையே ஜெயம் ரவி மனைவியைப் பிரிந்ததற்கு பாடகி ஒருவர்தான் காரணம் என்று சமூக வலை தளங்களில் தகவல்கள் … Read more

போனின் ரேடியேஷன் அளவை தெரிந்துக் கொள்ள சுலப் வழி! மொபைல் வாங்கலாம், ஆனால் அபாயத்தை விலை கொடுத்து வாங்கலாமா?

மொபைல் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாத கட்டத்திற்கு வந்துவிட்டோம். ஆனால், மொபைலை வாங்குவதற்கு முன் அதன் ரேடியேஷனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்… பொதுவாக நாம் நம்முடையை மொபைல் போனை கைகளில் அல்லது நமது தங்களிடம் வைத்திருக்கிறோம். செல்போன்களின் தேவை அத்தியாவசியமானது தான் என்றாலும், மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். பொதுவாக மொபைலை வாங்கும்போது பெரும்பாலானவர்கள், போனின் அனைத்து அம்சங்களையும் பார்த்தாலும், மொபைல் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது என்பதில் … Read more

சென்னை உணவகங்களில் தரமற்ற உணவு… புகார்களை தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறையில் மாற்றங்கள் மேற்கொள்ள அரசு நடவடிக்கை ?

சென்னையில் பிரபல பிரியாணி கடையான எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட சுமார் 40 பேர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த கடையை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதை அடுத்து குறிப்பிட்ட அந்த கடையை மூடிய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதேபகுதியில் மற்றொரு பிரியாணி கடைக்கு பூட்டி சீல் வைத்தனர். ஏற்கனவே, சைதாப்பேட்டையில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த மட்டன் கடையில் கெட்டுப்போன ஆட்டுக்கால்களை கிலோ கணக்கில் கைப்பற்றினர். தவிர, … Read more

ஹிப் ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் படம் எப்படி இருக்கு? படத்தின் கதை என்ன?

நடிகர்கள்: ஹிப் ஹாப் ஆதி, நடராஜன், ஹரிஷ் உத்தமன் இசை: ஹிப் ஹாப் ஆதி இயக்கம்: ஹிப் ஹாப் ஆதி சென்னை: இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவராக இருந்த ஹிப் ஹாப் ஆதி கடைசி உலகப் போர் படத்தை இயக்கி இவரே தயாரித்து தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார். நேற்று தியேட்டரில் வெளியான

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்; விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ரஹ்மனுல்லா குர்பாஸ்

ஷார்ஜா, ஆப்கானிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 311 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஹ்மனுல்லா குர்பாஸ் … Read more

இலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்

கொழும்பு, இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவின் அரசு 3 ஆண்டுகளில் ஆட்சியை பறிகொடுத்தது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதன் எதிரொலியாக அதிபர் பதவியை ராஜினாமா செய்த கேத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறினார். அதன் பின்னர் இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. எனவே … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதியம் 12.00 வரை 23.36 சதவீதம் வாக்களிப்பு..

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 442 வாக்கெடுப்பு நிலையங்களிலும் மதியம் 12.00 வரையிலும் 105,054 (23.36%) வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே. ஜே. முரளிதரன் தெரிவித்தார். இதனடிப்படையில், கல்குடா தொகுதியில் 28,668 வாக்குகளும், மட்டக்களப்பு தொகுதியில் 55,089 வாக்குகளும், பற்று தேர்தல் தொகுதியில் 21,297 வாக்குகளும் அளிக்கப்பட்டடுள்ளன. இவற்றில் அதிகளவு மக்கள் வாக்களித்த தொகுதியாக மட்டக்களப்பு தேர்தல் தொகுதி காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Brother: "பிரதர்னு பேரு வைக்க காரணம்… ராஜேஷ் காமெடி பட இயக்குநர் மட்டுமில்ல…" – ஜெயம் ரவி

இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் பிரதர் (Brother). நட்டி நடராஜன், பூமிகா, விடிவி கணேஷ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்கீரின் சீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, “நீங்க கொடுக்கிற எனர்ஜிலதான் வண்டி ஓடிட்டு இருக்குது. என்னுடைய முதல் படத்துக்கு என்ன எனர்ஜி கொடுத்தீங்களோ … Read more

சென்னையில் சுய உதவிக் குழுக்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி தொடங்கியது

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி தொடங்கியது. நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இன்று (செப்.21) தொடங்கியது. தொடர்ந்து அக்.6-ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியை ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தொடங்கி வைத்து பார்வையிட்டார். தினந்தோறும் … Read more

விமர்சனங்களைப் பொறுத்துக் கொள்வதே ஜனநாயகத்தின் மிகப் பெரிய பரீட்சை: கட்கரி

புனே: தனக்கு எதிரான வலுவான விமர்சனங்களை ஆட்சியாளர்கள் பொறுத்துக்கொண்டு அதை சுயபரிசோதனைக்கு உள்ளாக்குவதே ஜனநாயகத்தின் மிகப்பெரிய பரீட்சை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான நிதின் கட்கரி, எம்ஐடி – வோர்ல்ட் பீஸ் யுனிவர்சிட்டியில் வெள்ளிக்கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர், “ஜனநாயகத்தின் மிகப்பெரிய பரீட்சை என்பது மன்னன் தனக்கெதிராக வரும் வலுவான கருத்துக்களை பொறுத்துக்கொள்வதும், … Read more