திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாண் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம்

பெங்களூரு, திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் வழங்கப்படும் லட்டுக்கள் தயாரிப்பில் மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் , நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இதுபோன்ற பிரச்சினைகளை ஆராய தேசிய அளவில் ‘சனாதன தர்ம பாதுகாப்பு[ரக்ஷனா] வாரியம்’ என்ற அமைப்பை நிறுவும் நேரம் வந்துவிட்டது என்று தனது எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் பவன் … Read more

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்புஇன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணிக்கு நிறைவடைய உள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்குத் தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 17,140,354 ஆகவும், தபால்மூல வாக்காளர்களின் எண்ணிக்கை 712,318 ஆகவும் உள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதுடன், 1,713 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவும் உள்ளன.

தமிழகத்தில் விலங்கு கொழுப்பு கலந்த இனிப்புகள் தயாரிக்கப்படுவதில்லை: உணவு பாதுகாப்பு துறை தகவல்

சென்னை: திருப்பதி லட்டில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் கலந்திருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கும் சூழலில், தமிழகத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த இனிப்புகள் எதுவும் தயாரிக்கப்படவில்லை என்று தமிழக உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாட்டு எலும்புகளை உருக்கி, அதிலிருந்து தயாரிக்கப்படும் நெய்யைஉணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடாது. பாமோலின், விலங்குகளின் கொழுப்பு மூலம் தயாரிக்கப்பட்ட லட்டுகளின் சுவை, அசல் நெய்யில் செய்த … Read more

மேற்கு வங்க வெள்ளம் இயற்கையானது அல்ல: ஜார்க்கண்ட் அரசு மீது மம்தா சாடல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்துக்காக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சாடியுள்ள மம்தா பானர்ஜி, ஜார்க்கண்டை காப்பாற்ற தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் அணையில் இருந்து மே.வங்கத்துக்குள் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக குற்றஞ்சாட்டினார். மேலும் ஜார்க்கண்ட் ஒட்டிய எல்லைகளை மூன்று நாட்களுக்கு மூடவும் உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட வெள்ளத்துக்காக தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனை (டிவிசி) சாடிய அவர், அதனுடனான மாநிலத்தின் அனைத்து உறவுகளையும் நிறுத்தப்போவதாக தெரிவித்தார். வெள்ள நிலவரங்களை பார்வையிட புர்பா மேதினிபூர் மாவட்டத்தின் பன்ஸ்குரா மற்றும் ஹவுரா … Read more

லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட ‘பேஜர்' தாக்குதலில் கேரள இளைஞருக்கு தொடர்பு

பெய்ரூட்: லெபனான் நாட்டை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஈரான்ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர். ஈரானின் தூண்டுதலால் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் ராணுவம் அவ்வப்போது தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஆரம்ப காலத்தில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்தனர். இஸ்ரேல் உளவு அமைப்பு, ஸ்மார்ட்போன்களின் மூலம் ஹிஸ்புல்லாதீவிரவாதிகளின் இருப்பிடத்தைஎளிதாக கண்டுபிடித்து தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு பேஜர், வாக்கி டாக்கிக்கு மாறினர். … Read more

சந்திரபாபு நாயுடு – ஜெகன் மோகன் ரெட்டி இடையிலான திருப்பதி லட்டு பிரச்சனை… மத்திய அரசு கையிலெடுத்தது…

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர அரசிடம் அறிக்கை கேட்டுள்ள மத்திய அரசு அறிக்கையை தொடர்ந்து இதுகுறித்து FSSAI விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்துவது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார். திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சை … Read more

Rajinikanth speech: ஜெய்பீம் மாதிரி வேண்டாம்.. கமர்ஷியலா பண்ணுங்கன்னு கேட்டேன்.. ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை: வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனிருத் பற்றியும் ஞானவேல் பற்றியும் பேசிய காட்சிகள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றன. இந்திய சினிமா பிரபலங்களே சூப்பர் ஸ்டார் என கடந்த 50 ஆண்டுகளாக ரஜினிகாந்தை கொண்டாடி வருகின்றனர். ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்தின் அடுத்த நேரடி படமே

கிண்டி தேசிய பூங்காவில் நீர்நிலைகள் உள்ளதா? – தமிழக அரசு அறிக்கை அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: கிண்டி தேசிய பூங்கா எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நீர்நிலைகள் உள்ளதா என்பது குறித்து நீர்வள ஆதாரத்துறை அறிக்கை அளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் விடப்படுவதால் ஏரி மாசுபடுவதாக நாளிதழில் வந்த செய்தி அடிப்படையில் வழக்காக எடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த … Read more

“ஆயுதங்களைக் கீழே போடுங்கள்; இல்லாவிட்டால்..” – நக்சல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை

புதுடெல்லி: நக்சல்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பொது நீரோட்டத்தில் இணைய முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இல்லாவிட்டால் அரசின் நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியாது என எச்சரித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை புதுடெல்லியில் இன்று (செப். 20) சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வன்முறையைக் கைவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு நக்சல்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். எனது இந்த வேண்டுகோளுக்கு நக்சல்கள் செவிசாய்க்கவில்லை … Read more

ரயிலில் கைப்பற்றப்பட்ட ரூ. 4 கோடி பணம்… பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்தை விசாரிக்க நீதிமன்ற அனுமதி தேவையில்லை உச்சநீதிமன்றம் அதிரடி…

2024 நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரயிலில் இருந்து ரூ. 4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரம் அப்போது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த பணம் பாஜக வேட்பாளருக்கு சொந்தமானது என்று கூறப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இது தொடர்பாக பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்திடம் நீதிமன்ற அனுமதி பெற்ற பிறகே விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. கேசவ விநாயகத்தின் இந்த … Read more