மத்திய அரசு தமிழகத்துக்கு நீட் விலக்கு தரும் சூழல் உண்டாகும் : அமைச்சர் ரகுபதி

சென்னை மத்திய அரசு தமிழகத்துக்கு நீட் விலக்கு தரும் சூழல் உண்டாகும் என தமிழக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இன்று சென்னை தலமைச் செயலகத்தில் தமிழக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம், “நீட் விவகாரம் தொடர்பாக 4 முறை மத்திய அரசு தரப்பில் இருந்து தமிழக அரசிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு பதில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நாம் தகுந்த விளக்கங்களை கொடுத்திருக்கிறோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஏன் விலக்கு வேண்டும்? என்பதற்கான காரணங்களை … Read more

ஜூனியர் என்டிஆருடன் அடுத்தப்படம்.. உறுதிப்படுத்திய வெற்றிமாறன்.. கொல மாசு சாரே!

       சென்னை: டோலிவுட் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகர் ஜூனியர் என்டிஆர். சிறப்பான சினிமா பின்புலத்திலிருந்து வந்தபோதிலும் தன்னுடைய தனிப்பட்ட திறமையால் இவர் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ராஜமௌலி உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து நடித்துள்ளார் ஜூனியர் என்டிஆர். தற்போது கொரட்டாலா சிவா இயக்கத்தின் தேவரா படத்தில் நடித்து

செப்டம்பர் 21 முதல் BYD eMAX 7 எம்பிவி முன்பதிவு துவங்குகிறது

வரும் அக்டோபர் 8ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள பிஓய்டி நிறுவனத்தின் இமேக்ஸ் 7 எலெக்ட்ரிக் எம்பிவி ரக மாடலின் முன்பதிவு செப்டம்பர் 21ஆம் தேதி முதல் தூங்குகின்றது முன்பதிவு கட்டணமாக ரூபாய் 51 ஆயிரம் வசூலிக்கப்படுகின்ற நிலையில் முதலில் முன்பதிவு செய்யும் 1,000 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்களை வெளிப்படுத்த உள்ளதாக பிஓய்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் 8, 2024க்குள் BYD eMAX 7 காரை முன்பதிவு செய்யும் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு, டெலிவரி … Read more

Vettaiyan : `நெல்சன், லோகேஷ் மாதிரி இல்லாம, வேற மாதிரி பண்ணலாம்னு சொன்னாரு…' – ரஜினிகாந்த்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி ரிலீஸாகிறது. ரஜினியுடன் இந்த படத்தில் அமிதாப் பச்சன், ரானா, ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அனிருத் இசையில் ஏற்கெனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியிருந்தன. இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய ரஜினி, “இந்த இடத்துக்கு … Read more

புதிய பாம்பன் ரயில் பாலத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, காரைக்கால், தஞ்சாவூர் ஆகிய ஆறு மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்.20) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மீனவப் பிரதிநிதி சேசுராஜா தலைமை வகித்தார். மீனவப் பிரதிநிதிகள் போஸ், சகாயம், தட்சிணாமூர்த்தி, லூர்துராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தொடர் மனித உரிமை மீதான தாக்குதல்களை கண்டிக்காத மத்திய அரசுக்கு … Read more

இளம் ஊழியர்கள் நலனில் கவனம் தேவை: பெண் ஊழியர் உயிரிழப்பு; அஜித் பவார் கருத்து

மும்பை: புனேவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய தனது 26 வயது மகள் பணிச்சுமையால் உயிரிழந்ததாக பாதிக்கப்பட்ட தாய் எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் கவனம் தேவை என மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். “பணிச்சுமையால் பெண் ஊழியர் உயிரிழந்த செய்தி அறிந்து வருந்துகிறேன். அதீத பணிச்சுமையால் இளம் வயதினர் உயிரிழக்கும் விவகாரத்தில் கவனம் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் எர்ன்ஸ்ட் அண்ட் யங் இந்தியா நிறுவனம் … Read more

கடைசி உலகப் போர் விமர்சனம்: போர், உலக அரசியல் – ஹிப்ஹாப் ஆதியின் பிரமாண்ட முயற்சி கவனம் பெறுகிறதா?

2028-ம் ஆண்டு ஐ.நா சபையிலிருந்து விலகி சீனா தலைமையில் சில நாடுகள் ரீபப்ளிக் என்று மற்றொரு கூட்டமைப்பை உருவாக்குகின்றன. மூன்றாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் அந்த நேரத்தில் இந்தியா எந்த அமைப்பிலும் சேராமல் நடுநிலையோடு இருப்பதாகக் காட்டிக்கொள்கிறது. கடைசி உலகப் போர் விமர்சனம் உலகமே இடிந்து விழும் நிலையிலும் உள்ளூர் அரசியலில் முதலமைச்சரின் (நாசர்) மச்சான் நடராஜ் (நடராஜ்/நட்டி), தன்னை கிங் மேக்கர் என்று சொல்லிக்கொண்டு ஊழல் கேம் ஆடிக்கொண்டிருக்கிறார். ஐ.நா சபையின் ஆயுதப் பயிற்சி சிறப்புப் … Read more

முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என்ற உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி கர்நாடக உயர்நீதிமன்ற் நீதிபதி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என்றதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி வாடகை கட்டுப்பாட்டுச் சட்டம் தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வேதவியாச ஸ்ரீஷானந்தா குத்தகை ஒப்பந்தம் மற்றும் நில உரிமையாளர்களின் அதிகாரங்கள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்திருந்தார். அப்போது வாடகைக் கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களில் தேவைப்படும் … Read more

Vettaiyan Audio Launch: சாரே.. கொல மாஸ்! அனிருத்துடன் மனசிலாயோ பாடலுக்கு ஆட்டம் போட்ட சூப்பர் ஸ்டார்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இருந்து

அறிமுகத்துக்கு முன்னர் 2024 மாருதி சுசூகி டிசையர் படங்கள் கசிந்தது

இந்தியாவின் மிகவும் பிரபலமான செடான் ரக மாடலான மாருதி சுசூகி நிறுவனத்தின் டிசையரின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலின் படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்த மாடல் எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் விற்பனைக்கு போன்ற விபரங்கள் எல்லாம் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தற்போது முழுமையான விபரங்கள் படங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது. தோற்ற அமைப்பில் தற்பொழுது விற்பனையில் கிடைக்கும் என்ற ஸ்விஃப்ட் காரை விட மாறுபட்ட டிசைன் அமைப்பு முன்புற … Read more