நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை நேற்று ஆரம்பம்

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு 19/09/2024 அன்று தனது சேவையை ஆரம்பித்துள்ளது. படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு நேற்று காலை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. நெடுந்தீவு இறந்குத்துறைக்கு சென்ற ஆளுநர் படகை பார்வையிட்டார். இதுவரை காலம் மாகாண சபையின் பொறுப்பில் காணப்பட்ட இந்த படகானது 52 மில்லியன் ரூபா செலவில் திருத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் … Read more

கோழிப்பண்ணை செல்லதுரை விமர்சனம்: மெதுவா ஓகே; இவ்ளோ மெதுவாவா? யதார்த்தம் பேசுகிறதா, அந்நியமாகிறதா?

ராணுவத்திலிருந்து வந்த கணவர், தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு அவரையும் வீட்டிலிருந்த மற்றொரு நபரையும் தாக்குகிறார். மதுபோதையிலிருந்த அந்த நபரிடமிருந்து தப்பித்து ஊரைவிட்டு ஓடுகிறார்கள் இருவரும். இதனால் ஆத்திரமடைந்த கணவர் அவருடைய குழந்தைகள் இருவரையும் பாட்டி வீட்டில் விட்டுவிடுகிறார். அங்கே சென்ற சிறிது நாளிலே பாட்டியும் இறந்து விட, தூரத்துச் சொந்தமான பெரியப்பா பெரியசாமியின் (யோகி பாபு) துணையோடு வேலைக்குச் செல்கிறான் சிறுவன் செல்லதுரை (ஏகன்). பதினொரு வயதில் ஆதரவற்ற நிலையில் வாழ்க்கையைத் தொடங்கும் … Read more

“சமூக, சாதி மோதலை ஊக்குவிக்கும் சித்தாந்தத்தை கைவிடுவது அவசியம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி

புதுச்சேரி: “கடந்த 10 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லாதவர்கள் இங்கும் உள்ளனர். அரசியலமைப்பு அமைப்புகள் சமரசம் செய்யப்படுவதாக ஒரு தவறான கதையை உருவாக்குவதன் மூலம் பொதுமக்களின் அச்ச உணர்வை உருவாக்க முயற்சிக்கின்றனர்,” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் பாரத் சக்தி பாண்டி இலக்கியத்திருவிழா 2024-ஐ இன்று (செப்.20) தொடங்கி வைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது: “கடந்த பத்து ஆண்டுகளில் நாடு அடைந்த பொருளாதார முன்னேற்றத்தை ஒட்டுமொத்த உலகமும் அங்கீகரித்துள்ளது. … Read more

“ஒமர் அப்துல்லாவுக்கு பாஜக நன்றி சொல்ல வேண்டும்” – பிரதமருக்கு மெகபூபா பதிலடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதற்கு முக்கிய பங்காற்றிய ஷேக் குடும்பத்தினருக்கு (அப்துல்லாக்கள்) பிரதமர் மோடி நன்றியுடன் இருக்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். முன்னதாக, ஸ்ரீநகரில் நடந்த கூட்டத்தில் வியாழக்கிழமை பேசிய பிரதமர் மோடி, அரசியல் ஆதாயத்துக்காக பிராந்தியத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை, காங்கிரஸ், தேசிய ஜனநாயக கட்சி (என்சிபி), மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவை ஆபத்தில் ஆழ்த்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக மெகபூபா … Read more

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் டாப் காமெடி நடிகர்! யார் தெரியுமா?

Comedy Actor In Bigg Boss Season 8 Tamil : விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.   

Vettaiyan : `இந்த மாதிரி எந்தப் படத்துக்கும் நான் மியூசிக் போட்டதில்ல' – வேட்டையன் குறித்து அனிருத்

த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. ரஜினியுடன் இந்த படத்தில் அமிதாப் பச்சன், ரானா, ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அனிருத் இசையில் ஏற்கெனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியிருந்தன. இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. வேட்டையன் இவ்விழாவில் ரஜினி குறித்தும் ‘வேட்டையன்’ படம் குறித்தும் … Read more

இன்று முதல் இந்தியாவில் ஐ போன் 16 விற்பனை தொடக்கம்

டெல்லி இன்று முதல் இந்தியாவில் ஐபோன் 16 விற்பனை தொடங்கி உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இட்ஸ் க்ளோடைம் நிகழ்வு நடைபெற்றது. அப்போது ஆப்பிள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமாக ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 ஆகியவற்றை வெளியிட்டது. இன்று ஆப்பிள் தனது ஐபோன் 16 சீரிஸ் விற்பனையை இந்தியாவில் தொடங்கியதால் இதனை வாங்க டெல்லி மற்றும் மும்மையில் உள்ள … Read more

தலைவர் ரெண்டே கேரக்டரைத்தான் உருட்டிடடு இருக்காரு – வேட்டையன் டீசர் குறித்து ப்ளூ சட்டை மாறன்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இருந்து

2023/2024 பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் (Z) வெளியிடப்பட்டுள்ளன

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20) பிற்பகல் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், அதற்கினங்க வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று … Read more

தொடர் நிகழ்வான பெண் குழந்தைகள் மாயம் – பாலியல் துன்புறுத்தல் அரசு காப்பகத்தில் நடந்தது என்ன?

நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் அன்னை சத்யா என்ற பெயரில் அரசு பெண் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் பெற்றோரை இழந்த 50-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் உள்ளனர். அனைவரும் காப்பகத்தின் அருகில் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். காப்பகத்தின் கண்காணிப்பாளராக சசிகலா என்பவர் பணி புரிந்து வருகிறார். குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கு இரண்டு ஆண்கள், ஒரு பெண் என மூன்று பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாகை அரசு குழந்தைகள் … Read more