“தமிழக மீனவர்களை திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகை இடுவோம்” – கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

ராமேசுவரம்: “தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக மீனவர்களை திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமேசுவரம் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக் … Read more

‘லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்பாடு ஆய்வக சோதனையில் உறுதி’ – திருமலா திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி: திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய் கலப்படமானது என்றும், அதில் பன்றிக் கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது 4 ஆய்வக பரிசோதனைகளிலும் உறுதியாகி இருப்பதாகவும் திருமலா திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலா திருப்பதி தேவஸ்தானம்: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி பெருமாள் கோயிலை நிர்வகிக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியமலா ராவ், “திருப்பதி பெருமாள் கோயிலுக்கு நெய் சப்ளை செய்பவர்கள் தரமான நெய்யை சப்ளை செய்கிறார்களா என்பதை பரிசோதிக்க கோயிலுக்குச் … Read more

தலைவர் படம் வந்தாலே வேட்டைதான்! நடிகர் ஜான் விஜய் பேட்டி..

தலைவர் படம் எப்பொழுதுமே கலக்கலாக இருக்கும் வந்தால் வேட்டை தான் என்று பிரபல நடிகர் ஜான் விஜய் பேசியிருக்கிறார்.   

Netflix: ஸ்மார்ட்போனில் விளையாட சிறந்த கேம்கள் தரும் நெட்ஃப்ளிக்ஸ்! என்னவெல்லாம் விளையாடலாம்?

நெட்ஃபிக்ஸ் சில சிறந்த ஸ்மார்ட்ஃபோன்களின் ஆதரவைப் பெற்று, ஸ்மார்ட்போன் கேமிங்கின் சூழ்நிலையை மாற்றியுள்ளது. தற்போது, நெட்ஃபிக்ஸ் 80 க்கும் மேற்பட்ட பிரத்தியேக கேம்களை வழங்குகிறது, அவற்றில் சில நேரடியான தலைசிறந்த படைப்புகளாகும்.  கேம்களை விளையாட விரும்புபவர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் அருமையான வாய்ப்பைத் தருகிறது. ஸ்மார்ட்போனில் விளையாடக்கூடிய சிறந்த நெட்ஃப்ளிக்ஸ் கேம்களின் பட்டியல் பற்றி தெரிந்துக் கொள்வோம். ஆனால் சந்தா இல்லாமல் எந்த நெட்ஃபிக்ஸ் கேமையும் விளையாட முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவின் குறைந்தபட்ச விலை … Read more

தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதயநிதி வழங்கிய ரூ. 54.20 லட்சம் நிதி

சென்னை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சம் நிதி வழங்கி உள்ளார். தமிழக சாம்பியன்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். “இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (20.09.2024) தமிழக சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து, தென் கொரியாவில் நடைபெற உள்ள 2024 உலக டேக்வாண்டோ ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள வீராங்கனை ஆர்.ஜனனிக்கு செலவீனத் தொகையாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் … Read more

காங்கிரஸ் ஓட்டு வங்கியாக மாறிய ஊடுருவல்காரர்கள்? ஜார்கண்ட்டில் இருந்து வெளியேற்ற அமித்ஷா திட்டம்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமகைளை ஊடுருவல்காரர்கள் பறிக்கின்றனர். இவர்கள் ஹேமந்த் சோரன், ராகுல் காந்தியின் வாக்கு வங்கியாக உள்ளனர். பாஜக ஆட்சியை பிடித்ததும் ஒவ்வொரு ஊடுருவல்காரர்களும் அடையாளம் காணப்பட்டு விரட்டியடிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார். ஜார்கண்ட்டில் தற்போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி Source Link

Vettaiyan Prevue: SPங்கிற பேரில் ஒரு எமன்.. என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ரஜினிகாந்த்.. வேட்டையன் பராக்!

சென்னை: சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. வேட்டையன் படத்தின் ப்ரிவ்யூ எனப்படும் டீசரை தற்போது

வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் வாக்கெண்ணும் வளவுகளுக்கும் கையடக்க தொலைபேசிகளைக் கொண்டு வருவது தடை..

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்கெடுப்பு நிலையங்களுக்கும், வாக்கெண்ணும் இடங்களுக்கும், முடிவுகளை வெளியிடும் இடங்களுக்கும் கையடக்க தொலைபேசிகளை கொண்டு வருவதும் அத்தகைய இடங்களில் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு…

தமிழகத்தில் இதுவரை குரங்கம்மை, நிபா வைரஸ் பாதிப்பில்லை: சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்

நாகர்கோவில்: “தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை, நிபா வைரஸ் பாதிப்பில்லை,” என களியக்காவிளை சோதனைச் சாவடியில் கேரளாவில் இருந்து வருவோர்களை ஆய்வு செய்த சுகாதாரத்தறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை சார்பில் கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் நிபா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வாகனங்களில் வருவோர்களை சுகாதாரத் துறையினர் இங்கு பரிசோதனை செய்த பின்னரே குமரிக்குள் அனுமதிக்கின்றனர். … Read more