மே.வங்க வெள்ளம் | டிவிசியிலிருந்து விலகப் போவதாக பிரதமருக்கு மம்தா கடிதம்; பாஜக பதிலடி

கொல்கத்தா: தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் 5 லட்சம் கனஅடி தண்ணீரைத் திறந்து விட்டதே மேற்குவங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது: தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனுக்குச் (டிவிசி) சொந்தமான அதனால் பராமரிக்கப்படும் மைதான் மற்றும் பஞ்சாட் அணைகளில் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவில், திட்டமிடப்படாமல் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தொடர்பாக உங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். … Read more

லப்பர் பந்து விமர்சனம்: அடிச்ச எல்லா பாலுமே சிக்ஸர்தான் – உணர்வுகளை வைத்து ஒரு யதார்த்த கிரிக்கெட்!

சுவரோவிய கலைஞரான கெத்து (அட்டகத்தி தினேஷ்) ‘முதல் பந்து சாமிக்கு, மத்ததெல்லாம் தனக்கு’ என லப்பர் பந்து போட்டியில் அதிரடி காட்டும் உள்ளூர் சேவாக். ஆனால் அவரது காதல் மனைவிக்கு (ஸ்வாசிகா விஜய்) இவரது விளையாட்டு சகவாசம் அறவே ஆகாது. கெத்தின் ஊருக்கு விளையாட வரும் ‘ஜாலி பிரெண்ட்ஸ்’ அணியினர், அவரது அதிரடியால் தோற்றுப்போகிறார்கள். அந்தப் பாரம்பரிய அணியில் முதல்முறையாக விளையாட வாய்ப்பு கிடைத்தும், பந்து வீச வாய்ப்பு கிடைக்காமல் ஏமாறுகிறார் சிறுவன் அன்பு. ஆனால் காலங்கள் … Read more

நாளை இலங்கையில் அதிபர் தேர்தல்

கொழும்பு நாளை இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியுடன் மெல்ல மெல்ல சிக்கலில் இருந்து மீண்டு வருகிறது. அந்த நாட்டில் சுற்றுலாப்பயணிகள் வருகை உள்ளிட்ட பல காரணங்களால் அன்னிய செலாவணி கையிருப்பும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இலங்கையில் நாளை (சனிக்கிழமை) அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் நடந்து வந்த தேர்தல் … Read more

2 கோடி மக்களின் தலையெழுத்து மாறுமா?.. பரபரக்கும் இலங்கை அதிபர் தேர்தல்.. நாளை வாக்குப் பதிவு

கொழும்பு : இலங்கை அதிபர் பதவிக்கான வாக்குப் நாளை நடக்க உள்ளது. பொருளாதார நெருக்கடி, அரசியல் அசாதாரண சூழல் நிலவி வந்த நிலையில், புதிய அதிபர் மூலம் தங்களின் வாழ்வாதாரம் மாறுமா என்ற எதிர்பார்ப்பில் சுமார் 1.7 கோடி மக்கள் வாக்களிக்க தயாராகி வருகின்றனர். பொருளாதார நெருக்கடி, அரசியல் அசாதாரண சூழல் நிலையால் கடந்த சில ஆண்டுகளாக Source Link

சூட்டிங்கை நிறைவு செய்த கமல்ஹாசனின் தக் லைஃப் டீம்.. டிஜிட்டல் ரைட்ஸ் இவ்வளவு கோடிக்கு விற்பனையா!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் அவருக்கு கை கொடுத்தது/ நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இந்த படத்தில் கமல்ஹாசன் ஸ்கோர் செய்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அவர் கமிட்டாகி பிஸியாகி உள்ளார். தன்னுடைய நடிப்பு கமிட்மெண்ட்களால் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அவர் தவிர்த்து உள்ளதாக

மலையக சமூகத்தினருக்கான 'மலையக சாசனம்'

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ‘மலையக சாசனம்’ வெளியீட்டு நிகழ்வானது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது. நுவரெலியாவில் நடைபெற்ற இம் மலையக சாசன வெளியீட்டு நிகழ்வில், புத்தி ஜீவிகள், சட்டத்தரனிகள், பேராசிரியர்கள் அதிபர்கள்,ஆசிரியர்கள், சிவில் அமைப்பினர்கள், வர்த்தகர்கள், துறைசார் ஆர்வலர்கள், துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள், அமைச்சின் அதிகாரிகள் என பலர் கலந்துக்கொண்டனர். இந்திய வம்சாவளி தமிழ் (மலையக தமிழர்) பெருந்தோட்ட சமூகம் இலங்கைக்கு வருகை தந்ததன் 200 வது ஆண்டு … Read more

ONOE: ”ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலமாக மாநில உரிமைகளைப் பறிக்கிறது பாஜக" – கனிமொழி கண்டனம்

தஞ்சாவூரில் ‘கலைஞர் 100 வினாடி – வினா’ போட்டி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., கலந்துகொண்டார். அதற்குப் பிறகுச் செய்தியாளர்களிடம் பேசியவர், “ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே மொழி இப்படியாக எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு வருகிறார்கள். அதன் மூலமாக மாநிலங்களுக்கான உரிமையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்க வேண்டும் என பா.ஜ.க., அரசு செயல்படுகிறது. கனிமொழி தற்போது, ஒரே நாடு ஒரே தேர்தலால், மக்களுக்கு என்ன பயன்?, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியானது அதன் பதவிக்காலம் முடிவு பெறாத … Read more

தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு தடை கோரி வழக்கு: மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கான கடைகள் ஒதுக்கீட்டுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பி்ல் அளிக்கப்பட்ட மனுவை இருவாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் அக்.31ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு தனி இடம் ஒதுக்கக்கோரி அளிக்கப்பட்ட மனுவை பரிசீலி்க்க உத்தரவிட வேண்டும், எனக் கோரி பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் … Read more

“சந்திரபாபு நாயுடு செய்வது அரசியல்” – திருப்பதி லட்டு சர்ச்சையில் ஜெகன் மோகன் தாக்கு

அமராவதி: திருப்பதி பெருமாள் கோயில் பிரசாதமான லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையை மறுத்துள்ள முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மக்களினம் நம்பிக்கையை முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசியலுக்காகப் பயன்படுத்துவதாக விமர்சித்துள்ளார். ஜெகன் மோகன் ரெட்டி விளக்கம்: கடந்த புதன்கிழமை (18ம் தேதி) முதல் இந்த விவகாரம் பேசப்பட்டு வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்முறையாக இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “திருப்பதி பெருமாள் கோயில் லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில், … Read more