செஸ் ஒலிம்பியாட்: இந்திய ஆண்கள் அணி 8-வது வெற்றி

புடாபெஸ்ட், 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் தொடரில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த 8-வது சுற்று ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி, ஈரானுடன் மோதியது. இதில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய இந்திய வீரர் குகேஷ் 34-வது காய் நகர்த்தலில் பர்ஹாம் மக்சூட்லூயை தோற்கடித்தார். மற்ற இந்திய வீரர்கள் அர்ஜூன் எரிகாசி, விதித் குஜராத்தி ஆகியோரும் … Read more

ஹிஜ்புல்லா இலக்குகள் மீது தாக்குதல்; போரின் புதிய கட்டம் தொடக்கம் என இஸ்ரேல் அறிவிப்பு

டெல் அவிவ், லெபனான் நாட்டில் உள்ள ஹிஜ்புல்லா பயங்கரவாத இலக்குகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவா கேலண்ட் எக்ஸ் ஊடகத்தில் கூறும்போது, போரின் புதிய கட்ட தொடக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். எங்களுடைய கவனம் வடக்கு பகுதியில் செலுத்தப்படும் என உறுதியுடன் தெரிவித்து உள்ளார். அந்த பகுதியில் வளங்களையும், படைகளையும் ஒதுக்கியுள்ளோம். எங்களுடைய திட்டம் தெளிவாக உள்ளது. இஸ்ரேலின் வடக்கு பகுதி சமூகத்தினரை அவர்களுடைய சொந்த வீட்டுக்கு பாதுகாப்பாக … Read more

முல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

நாளை நடைபெறவுள்ள – 2024 ஜனாதிபதி தேர்தலுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள தேர்தலுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 137 வாக்களிப்பு நிலையங்களிற்கே இவ் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர்கள் … Read more

`கூட்டணி பிளவு பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில்தான் முதல்வர் இப்படிச் செய்கிறார்'- ராஜன் செல்லப்பா

“முதல்வர் ஸ்டாலின், வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று முதலீடுகளை கொண்டு வந்ததாகக் கூறுகிறார். அது வெறும் காகித பரிமாற்றம்தான்..” என்று அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா விமர்சித்துள்ளார் ஸ்டாலின் மதுரை ஒத்தக்கடையில் நடந்த அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா பேசும்போது, “அறிஞர் அண்ணா பிறந்தநாளுக்கு தி.மு.க-வினர் பேருக்கு ஒரு கூட்டத்தை நடத்தி விட்டு முடித்து விடுகிறார்கள். தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றியபோது தமிழகம் முழுவதும் … Read more

ராகுலை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை: காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் குற்றச்சாட்டு

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியை மிரட்டும் வகையில் பேசியவர்கள் மீது பாஜக தலைமையோ, பிரதமர் மோடியோ உரிய நடவடிக்கை எடுக்காததற்கு அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகிலஇந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என்.ஹெக்டே,சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் எஸ்.ராஜேஷ்குமார்உள்ளிட்ட … Read more

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 நிதியுதவி: ஹரியானா பேரவை தேர்தலில் பாஜக வாக்குறுதி

சண்டிகர்: மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. ஹரியானா முதல்வர் நயாப் சிப் சைனி, மத்திய அமைச்சர்கள் எம்.எல்.கட்டார், ராவ் இந்தர்ஜித் சிங், கிரிஷன் பால் குர்ஜார் ஆகியோர் முன்னிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதனை வெளியிட்டார். பாஜகவின் தேர்தல் அறிக்கையில், “அக்னி வீரர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் 24 … Read more

“லெபனானில் இஸ்ரேல் செய்தது போர்க் குற்றம்” – ஹிஸ்புல்லா தலைவர் கொந்தளிப்பு

பெய்ரூட்: அனைத்து நெறிகள், சட்டங்களுக்கு அப்பால் சென்று இஸ்ரேல் போர்க் குற்றம் செய்துள்ளது என ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா தெரிவித்துள்ளார். லெபனானில் பேஜர், வாக்கி-டாக்கிகளை வெடித்தவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு அவர் எதிர்வினையாற்றியுள்ளார். இது குறித்து, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா கூறும்போது, “லெபனான் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்த சூழலில் நாம் உள்ளோம் என்பதில் சந்தேகமில்லை. இது மாதிரியான தாக்குதலை உலகம் எதிர்கொண்டிருக்க வாய்ப்பில்லை. இந்தத் தாக்குதல் … Read more

சிதம்பரம் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை விற்ற தீட்சிதர்கள் – பகீர் தகவல்

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thalavettiyaan Paalayam: `காமெடி… காமெடி… காமெடி' – மெகா ஹிட் இந்தி வெப் சீரிஸின் தமிழ் ரீமேக்

இந்தி திரைப்படங்களை தமிழில் ரீமேக் செய்யும் ஃபார்முலா பற்றி அதிகளவில் கேள்விப்பட்டிருப்போம். இப்போது ஒரு மெகா ஹிட் பாலிவுட் வெப் சீரிஸையும் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். ஆம், இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘பஞ்சாயத்’ வெப் சீரிஸை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். இந்த பாலிவுட் வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் மூன்று சீசன்களாக வெளி வந்தது. நகைச்சுவைக்குப் பஞ்சமில்லாத இந்த வெப் சீரிஸை தமிழில் இயக்குநர் நாகா இயக்கியிருக்கிறார். மீண்டும் மிரட்ட வரும் … Read more

34 பேருக்கு வாந்தி மயக்கம்! எஸ்எஸ் ஐதராபாத் பிரியாணி கடைக்கு ‘சீல்’

சென்னை: சென்னையில் ஏராளமான கிளைகளைக்கொண்டுள்ள எஸ்எஸ் பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட பலர் வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னையின் பிரபலன அசைவ ஓட்டல்களில் எஸ்எஸ் பிரியாணி ஓட்டலும் ஒன்று. இதற்கு சென்னையில் மட்டுத்ம 25க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இங்குள்ள பிரியாணிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதனால், வார இறுதி நாட்களிலும், விசேஷ நாட்களிலும் பிரியாணி உள்பட அசைவ உணவுகள் வாங்க கூட்டம் அலைமோதும். … Read more