கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு : படகு போக்குவரத்து 3 நாட்களாக தாமதமாக தொடக்கம்

கன்னியாகுமரி கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் தாழ்ந்துள்ளதால் கடந்த 3 நாட்களாக படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கி உள்ளது. தினமும் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். தினமும் இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் காலை … Read more

Mari Selvaraj: பூங்கொடி டீச்சர் பாடலை பாடும் மாரி செல்வராஜின் மகன் யுவான் சுவாங்.. வீடியோ செம க்யூட்

சென்னை: கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படம் மிகவும் கவனத்தைப் பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் புரோமோசனில், இந்தப் படம் தனது சிறு வயதில் நடைபெற்ற உணமைச் சம்பவத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட படம் எனக் கூறியிருந்தார். மேலும் படம்

பீகார்: ஆளுங்கட்சி மகளிரணி தலைவரை அடித்து, செருப்பு அணிவித்து ஊர்வலம்

பாட்னா, பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியை சேர்ந்த மாவட்ட மகளிரணி தலைவராக இருப்பவர் காமினி பட்டேல். இந்நிலையில், சீதாமார்ஹி மாவட்டத்தில் பைர்கனியா பகுதியில் அக்கட்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கு காமினியை அழைக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த காமினி பேஸ்புக்கில் அதுபற்றி பதிவிட்டு உள்ளார். விமர்சனங்களை வெளியிட்ட சிலருக்கு எதிராக காரசார பதில் விமர்சனங்களும் வெளியிடப்பட்டன. இந்த சூழலில், அக்கட்சியின் வார்டு கவுன்சிலர் சஞ்சய் சிங்கின் … Read more

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் (81) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என சொந்த கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்புகள் வலுத்தன. பின்னர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ … Read more

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு … Read more

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

சென்னை: மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்ரன்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமனத்தில் உள் ஒதுக்கீடு அளிக்கவும் அவர்கள்கோரிக்கை விடுத்தனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் 30 ஆயிரம் கள உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில், அந்த காலியிடங்களில் ஐடிஐ படித்தவர்களையும் ஐடிஐஅப்ரன்டீஸ் பயிற்சி முடித்தவர்களையும் பணிநியமனம் செய்யக்கோரி தமிழ்நாடு ஐடிஐ படித்த வேலைவேண்டுவோர் ஐக்கிய சங்கம் சார்பில் அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலக … Read more

உ.பி.யின் மதுராவில் சரக்கு ரயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: சீரமைப்பு பணியில் 500 பணியாளர்கள்

மதுரா: உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் பிருந்தாவன் பகுதி அருகே நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நிலக்கரி ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு ரயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் அந்த ரயில் பாதையில் செல்லக்கூடிய 30 ரயில்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சீரமைப்பு பணியில் நேற்றுமுன்தினம் இரவிலிருந்து 500 பணியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து ஆக்ரா ரயில்வே கோட்ட மேலாளர் தேஜ்பிரகாஷ் அகர்வால் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் … Read more

புதினுடன் பேசுங்கள் அல்லது அணு ஆயுத போரை எதிர்கொள்ளுங்கள்: அமெரிக்க அரசுக்கு ட்ரம்ப் மகன் எச்சரிக்கை

வாஷிங்டன்: ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் போர் நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களையும் நிதியுதவியையும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அளித்து வருகின்றன. தற்போதைய சூழலில் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கவில்லை. சில ஏவுகணைகளை வழங்கியிருந்தாலும் அவற்றை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்த அமெரிக்கா அனுமதி வழங்கவில்லை. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டாமரும் அண்மையில் ஆலோசனை நடத்தினர். … Read more

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யலாம்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,  இன்று (19.09.2024) முதல் 25.09.2024 வரை  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (19.09.2024 மற்றும் 20.09.2024)  அதிகபட்ச வெப்பநிலை ஒருசில … Read more

இன்னொரு பெண்ணுடன் நடிகரின் உறவு.. கடற்கரையில் அடித்த கூத்து.. ஆதாரத்தை வெளியிடப்போகும் மனைவி?

சென்னை: கோலிவுட்டில் சமீபகாலமாக ஒரு டாபிக்தான் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் மீதுதான் தவறு என்று ஒருபக்கம் குரல்கள் எழ; இல்லை இல்லை அவரது மனைவி மீதுதான் தவறு என்று மறுபக்கம் சொல்ல; எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக ஒரு பெண்ணுடன் நடிகருக்கு இருந்த ரகசிய உறவுதான் இவை எல்லாத்துக்கும் காரணம் என்று பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இந்தச் சூழலில் ஒரு