மணிப்பூர்: ராணுவம், போலீசார் கூட்டு நடவடிக்கையில் 28 கிலோ சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

இம்பால், மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே வன்முறை, மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. மணிப்பூரில் பல மாதங்களாக அமைதி காணப்பட்ட நிலையில், இந்த மாத தொடக்கத்தில் வன்முறை சம்பவம் ஏற்பட்டது. இதனால், மணிப்பூர் டி.ஜி.பி. ராஜீவ் சிங், தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கினார். வெவ்வேறு பாதுகாப்பு படையினர் இடையே முறையான ஒத்துழைப்புடன் கூடிய, கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மத்திய … Read more

வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் விடும் சென்னை குடிநீர் வாரியம்: பசுமை தீர்ப்பாயத்தில் பொய்யான அறிக்கை என மக்கள் புகார்

சென்னை: சென்னை வேளச்சேரி ஏரியில் சென்னை குடிநீர் வாரியம் தொடர்ந்து கழிவுநீர் விட்டு வருவதாகவும், கழிவுநீர் கலப்பதை அடைத்துவிட்டதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அரசு பொய்யான அறிக்கை தாக்கல் செய்திருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் விடப்படுவதால் ஏரி மாசுபடுவதாக நாளிதழில் வந்த செய்தி அடிப்படையில் வழக்காக எடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை … Read more

வாக்குப்பதிவு அதிகரிப்பதன் மூலமாக நாட்டின் ஜனநாயகத்தை வலுவாக்குகிறது காஷ்மீர்: பிரதமர் மோடி பெருமிதம்

ஸ்ரீநகர்ஜம்மு காஷ்மீர் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் ஜனநாயகத்தை காஷ்மீர் வலுவாக்கி வருகிறது என்று 2-ம் கட்ட பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் முதல்கட்ட தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற நிலையில், 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஸ்ரீநகர்,கத்ரா பகுதிகளில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் பேசியதாவது: “காஷ்மீர் முதல் … Read more

காசா – ஹமாஸ் தீவிரவாதிகளையடுத்து ஹிஸ்புல்லா மீது கவனம் செலுத்தும் இஸ்ரேல்

ஜெருசலேம்: ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலால் காசா மீது போர் தொடுத்த இஸ்ரேல், தற்போது லெபனான் மற்றும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது கவனத்தை செலுத்தியுள்ளது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் 7-ம்தேதி தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 251 பேர் காசாவுக்கு பிணைக் கைதிகளாக கடத்தி செல்லப்பட்டனர். இதனால் காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்க இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்நிலையில் காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேலின் … Read more

சென்னையில் துண்டு துண்டாக சூட்கேசில் கிடந்த பெண் சடலம்

சென்னை சென்னையில் ஒரு பெண்ணின் சடலம் சூட்கேசில் துண்டு துண்டாக இருந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.   சென்னையில் துரைப்பாக்கம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சூட்கேசை மீட்டு திறந்து பார்த்ததில், பெண் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், கண்டெடுக்கபட்டுள்ளது. காவல்துறையினர் அந்தப் பெண்ணின் உடலை மீட்டு உடனடியாக விசாரணையை … Read more

மருமகள் சைந்தவி நல்ல பொண்ணு.. திரும்பவும் வீட்டுக்கு வரணும்.. ஜி.வி. பிரகாஷ் அம்மா உருக்கம்!

சென்னை: ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரியும் ஜி.வி. பிரகாஷின் அம்மாவுமான ஏ.ஆர். ரெய்ஹானா சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தன்னுடைய மகளை விட சைந்தவியுடன் தான் அதிகமாக பேசி வருவதாகவும் சைந்தவி அந்தளவுக்கு நல்ல பொண்ணு அவர் சீக்கிரமே வீட்டுக்கு வந்தால் தனக்கு சந்தோஷம் எனக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மாத்திக்கலாம் மாலை” என்கிற ஆல்பம் பாடலை

NPS Vatsalya: குழந்தைகளின் ஓய்வுக்காலத்திற்கு ஏற்றது.. யார் முதலீடு செய்யலாம்… விதிமுறைகள் என்ன?

‘குழந்தைகளுக்கு எதாவது சேர்த்து வெச்சுடனும்பா’ என்பது அனைத்து பெற்றோர்களின் ஆசை. இந்த ஆசை நிறைவேறும் விதமாக, கொஞ்சம் நஞ்சமல்ல… கோடிக்கணக்கில் குழந்தைகளுக்கு சேர்க்கலாம், ‘என்.பி.எஸ் வாத்சல்யா’ திட்டம் மூலம். கடந்த ஜூலை மாதம் தாக்கலான 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் புதிய ஓய்வூதிய திட்டம் என்.பி.எஸ் வாத்சல்யா” என்று பேசினார். இதனையடுத்து, இந்தத் திட்டம் நேற்று நிர்மலா சீதாராமனால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். … Read more

தமிழக அரசின் முத்திரை திட்டங்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை  

சென்னை: தமிழக அரசின் 11 துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரை திட்டங்கள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி, திட்டப் பணிகளை முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார். தமிழக அரசின் நெடுஞ்சாலை, பள்ளிக்கல்வி, மின்சாரம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சுகாதாரம், சமூக நலம் உள்ளிட்ட முக்கியமான 11 துறைகளின் கீழ்வரும் திட்டங்கள் முக்கியமான திட்டங்கள் முத்திரை திட்டங்கள் என்ற அடிப்படையில், அவற்றின் முன்னேற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வபோது ஆய்வு செய்து வருகிறார். … Read more

“காங்கிரஸும் பாகிஸ்தானும் எப்போதும் ஒரே பக்கம்தான்” – அமித் ஷா விமர்சனம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டுவருவதில் காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தான் ஒரே நோக்கத்துடனும், ஒரே திட்டத்துடனும்தான் இருக்கிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், “ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணி வெற்றி பெற்றால், ரத்து செய்யப்பட்ட … Read more

வரும் 21 ஆம் தேதி டெல்லி முதல்வராக அதிஷி பதவி ஏற்பு

டெல்லி வரும் 21 ஆம் தேதி டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவி ஏற்க உள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வராக இருந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்ற்ம் கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. உச்சநீதிமன்றம் அவர் முதல்வர் அலுவலகம் செல்லக் கூடாது. முதல்வராக கோப்புகளை கையாளக் கூடாது என சுப்ரீம்கோர்ட்டு நிபந்தனை விதித்ததால் முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் … Read more