இந்தியா – வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி; சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை, ஷாண்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய வங்காளதேச அணி அதே உத்வேகத்துடன் இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. … Read more

Ind Vs Ban : '9 நிமிடங்களில் வெளியேறிய கோலி; தடுமாறிய ரோஹித்’ – செக் வைத்த சேப்பாக்கம் பிட்ச்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸை வங்கதேசம் வென்று இந்திய அணியை பேட் செய்ய வைத்தது. முதல் செஷனிலேயே இந்திய அணியின் முக்கியமான சில விக்கெட்டுகள் வீழ இந்திய அணி கொஞ்சம் தடுமாறி வருகிறது. Ind Vs Ban சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் வழக்கமாக ஸ்பின்னர்களுக்குதான் அதிக சாதகமான அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஆனால், இன்றைக்கு இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் ஒரு சர்ப்ரைஸ் இருந்தது. … Read more

மத்திய பாஜக அரசுக்கு திமுக ஆதரவு அளிக்கும் நிலை உருவாகலாம்: சீமான் கருத்து

புதுக்கோட்டை: மத்திய பாஜக அரசுக்கு திமுக ஆதரவு அளிக்கும் நிலை உருவாகலாம்என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அம்பேத்கர், பெரியாரை போற்றுவதைப்போல, திருவிக,மறைமலை அடிகள், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், முத்துராமலிங்கத் தேவர், வேலு நாச்சியார், அழகுமுத்துக்கோன் போன்றவர்களையும் நடிகர் விஜய் போற்ற வேண்டும். அவருடன் கூட்டணி அமைப்பீர்களா என்று என்னை கேட்பதைவிட, சீமானுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று அவரிடம் கேளுங்கள். என்னைப் பொறுத்தவரை தேசியம், … Read more

அமைதியாக நடந்தது முதல்கட்ட தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் 59 சதவீத வாக்குகள் பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முதல்கட்ட வாக்குப் பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. முதல்கட்ட தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், ஜம்முவில் 3 மாவட்டங்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 4 மாவட்டங்கள் என மொத்தம் 7 மாவட்டங்களில் உள்ள24 தொகுதிகளில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் 90 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 219 வேட்பாளர்கள் களத்தில் … Read more

வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடா அரசு கெடுபிடி: இந்தியர்களுக்கு பாதிப்பு

ஒட்டாவா: தங்கள் நாட்டில் தற்காலிக குடியிருப்பு வாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் ‘ஸ்டெடி பர்மிட்’ அனுமதியை குறைக்கும் வகையிலான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது கனடா அரசு. இது இந்தியர்களை பெருமளவு பாதிக்கச் செய்யும் என சொல்லப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது கனடா. மாணவர்களின் பர்மிட் என்று மட்டும் இல்லாமல் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான அனுமதி அளிக்கும் விதிகளிலும் சில மாற்றங்களை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. “இந்த வருடம் … Read more

GOAT பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்: 14 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

The GOAT Movie Box Office Collection Day 14: விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தின் வசூல் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.   

சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை! அதிர்ச்சி சம்பவம்!

Chennai Women Murder: சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் போட்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

பிளிப்கார்ட் சலுகை விற்பனை… ஸ்மார்போன்களுக்கு நம்ப முடியாத அளவில் தள்ளுபடிகள்

Flipkart Big Billion Days Sale: பிளிப்கார்ட் வழங்கும் பண்டிகை கால சலுகை விற்பனை விரைவில் தொடங்கப் போகிறது. இந்த நிகழ்வுக்கு முன்னதாகவே, சில ஸ்மார்ட்போன் வாங்குவதில் கிடைக்க உள்ள தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. அதில் ஒன்று பிரீமியம் போன்கள் முதல் நடுத்தர வகையி;ல் உள்ள போன்கள், பட்ஜெட் போன்கள் என அனைத்து வித ஸ்மாட்போன்கள் மீதும், சிறந்த தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேன்ஞ் சலுகைகள் கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது.  பிளிப்கார்ட் … Read more

சென்னையில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு! சென்னை மாநகராட்சி தகவல்!

சென்னை: சென்னையில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகளை நவீன முறையில் சீரமைக்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னை மாநகராட்சியில் 418 கி.மீ நீளத்துக்கு 488 பேருந்து தட சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில்  சுமார் 1,420 பேருந்து நிறுத்தங்கள் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.  இந்த பேருந்து நிறுத்தங்களில் சுமார் 700 நிறுத்தங்கள் ஒப்பந்ததாரர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள நிறுத்தங்கள் அனைத்தும் சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. … Read more

ஆடுகள், கோழியை விடுங்க.. போன வாட்டி சப்பாத்தி.. இப்ப பரோட்டா.. தென்காசி ஆலங்குளம் கோயிலில் ஆச்சரியம்

தென்காசி: தென்காசி ஆலங்குளம் கோயில்தான் இணையத்தில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது.. வழக்கத்தை உடைத்து, புதுமைகளை புகுத்தி வரும் கோயில்களில், இந்த ஆலங்குளம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்றாகும். அப்படி என்ன நடந்தது இந்த கோயிலில்? வழக்கமாக கோயில்களில் பிரசாதமாக புளியோதரை, சர்க்கரை பொங்கல் போன்ற உணவுகள் வழங்கப்படும்.. ஆனால், சமீபகாலமாகவே, பல கோயில்களில், பல்வேறு வகையான உணவுகளை பிரசாதமாக தருகிறார்கள். Source Link