Kanguva: குழந்தைகள் தினத்தை குறிவைத்த சூர்யா.. கங்குவா பட ரிலீஸ் தேதி அறிவிப்பு.. 1000 கோடி வருமா?

சென்னை: சூர்யா நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள கங்குவா படத்தினை ஸ்டூடியோ கிரீன் உருவாக்கியுள்ளது. இந்தப் படம் முதலில் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக கூறப்பட்டது. ஆனால், அதேதேதியில் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகின்றது எனக் கூறப்பட்டதால், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு தெரிவித்தது. இது ரசிகர்களுக்கு பெரும்

மகளிர் டி20 கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

முல்தான், தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி முல்தானில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக முனீபா அலி மற்றும் … Read more

லெபனான்: வாக்கி டாக்கிகள் வெடித்ததில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

பெய்ரூட், லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஜ்புல்லா அமைப்பினர் செல்போன்களுக்கு பதிலாக பேஜர் கருவிகளை தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தங்களுடைய இருப்பிடம் பற்றிய விவரங்கள் வெளியே தெரிய வராது என்பதற்காக இவற்றை பயன்படுத்துகின்றனர். இவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சூழலில், நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் பேஜர் உபகரணங்கள் வெடித்ததில் பலர் சிக்கி கொண்டனர். லெபனானில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் பேஜர் உபகரணங்கள் … Read more

ஆடம்பர கார்களுக்கு எம்ஜி செலக்ட் டீலரை துவங்கும் ஜேஎஸ்டபிள்யூ..!

ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி செலக்ட் (MG Select) என்ற பெயரில் டீலர்களை துவங்க திட்டமிட்டு இருக்கின்றது. முதற்கட்டமாக வருகின்ற 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் டீலர்கள் துவங்கப்பட்டு உடனடியாக டெலிவரி தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இந்த டீலர்களில் குறிப்பிட்ட விலைக்கு மேல் என்று வரையறுக்கப்படாமல் ஆடம்பர வசதிகள் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் உள்ளிட்ட New … Read more

காங்கேசன்துறையல் சீமெந்து தொழிற்சாலை நிறுவுவது தொடர்பிலான கலந்துரையாடல்

காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (18/09/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் தலைமையில் , ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் யாழ் பிராந்திய சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் எ.ஆர். ஜெயமனோன், ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். உள்ளூர் மூலப்பொருட்களை பயன்படுத்தாது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களை கொண்டு சீமெந்து தயாரித்து பொதி செய்து உள்நாட்டு தேவைக்காக விற்பனை செய்யும் நோக்குடன் இந்த செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலைக்கான … Read more

Sugarcane Juice: வாரம் 2 டம்ளர்; உங்களை ஹெல்தியாக்கும் இயற்கை டானிக்..! Health Tips

எல்லாக் காலத்துக்கும் ஏற்ற ஆரோக்கிய பானம் கரும்புச்சாறுதான். கரும்புச்சாறில் இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான சத்துகள் அடங்கியிருக்கின்றன என்கிற சித்த மருத்துவர் வேலாயுதம், அதன் மருத்துவ பலன்களை சொல்கிறார். உடலில் ஏற்படும் நீர் வறட்சி, நீரிழப்பு, உடல் சூட்டைத் தவிர்க்கவும் இது உதவும். உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கும். இது, உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை வலுப்படுத்துவதால், தொற்றுநோய்கள் நெருங்காது. கோடைக்காலத்தில் ஏற்படும் சிறுநீரகக் கல், சிறுநீரகத் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். … Read more

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது புதிய வழக்கு: லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் நடவடிக்கை

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால்வாய், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தம்விட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் 10 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் 2018 நவ.1, 7, டிச. 1 மற்றும் 2019 ஜன. 3, செப். 26, 2020 பிப். 14 ஆகியதேதிகளில் புகார் அளித்திருந்தார். … Read more

குழந்தைகளுக்கான ‘என்பிஎஸ் வாத்சல்யா’ ஓய்வூதிய திட்டம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: குழந்தைகளுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கி வைத்தார். 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ‘என்பிஎஸ் வாத்சல்யா’ திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை மாதம்அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்புக்காக ஓய்வூதியக் கணக்கில் பணத்தை சேமித்து வரலாம். குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பியதும், அவர்கள்அந்தப் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். வெளிநாடு வாழ் … Read more

லெபனானில் வாக்கி-டாக்கிகள் வெடித்து 30-க்கும் மேற்பட்டோர் பலி, 3,250 பேர் காயம்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று (செப்.18) ஒரே நேரத்தில் பல இடங்களிலும் வாக்கி-டாக்கிகள், சில சூரிய மின் சக்தியால் இயங்கும் உபகரணங்கள் வெடித்ததில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். லெபனானில் நேற்று முன்தினம் பேஜர்கள் வெடித்தச் சம்பவத்தை தொடர்ந்து நேற்று அதே பாணியில் வாக்கி-டாக்கிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வெடித்துச் சிதறியது அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்கி-டாக்கிகள் அனைத்துமே ஈரான் ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தியது எனக் கூறப்படுகிறது. … Read more

ஜாபர் சாதிக் மீதான போதைபொருள் கடத்தல் வழக்கு: இயக்குனர் அமீர் உள்பட12 பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

சென்னை: முன்னாள் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் மீதான போதைபொருள் கடத்தல் வழக்கில்,  இயக்குனர் அமீர் உள்பட 12 பேர்மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே  மத்திய போதை பொருள் தடுப்பு காவல்துறை  வழக்குகள் பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல போதை பொருள் கடத்தல் மன்னாக திகழ்ந்த, முன்னாள் திமுக நிர்வாக ஜாபர் சாதிக் மத்திய போதை பொருள் தடுப்பு காவல்துறையினரால் கைது … Read more