உ.பி.: சரக்கு ரெயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டன

மதுரா, உத்தர பிரதேசத்தில் பிருந்தாவன் பகுதியருகே நிலக்கரிகளை ஏற்றி கொண்டு சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. சூரத்கார் மின்சார ஆலைக்கு சென்று கொண்டிருந்தபோது, இந்த சரக்கு ரெயில் திடீரென விபத்தில் சிக்கியது. ரெயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டன. இதனை ஆக்ரா பிரிவுக்கான மண்டல ரெயில்வே மேலாளர் தேஜ் பிரகாஷ் அகர்வால் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால், இந்த வழியில் செல்ல கூடிய 3 ரெயில்வே வழிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார். எனினும் இந்த … Read more

ஆப்கானிஸ்தான் அபார பந்துவீச்சு… தென் ஆப்பிரிக்கா 106 ரன்களில் ஆல் அவுட்

ஷார்ஜா, தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் மார்கரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டோனி டி ஜோர்ஜி ஆகியோர் களம் இறங்கினர். முதல் ஓவர் முதலே ஆப்கானிஸ்தான் அணி அபாரமான … Read more

லெபனானில் அடுத்த அதிர்ச்சி… பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கி கருவிகள் வெடிப்பு – 3 பேர் பலி, 100 பேர் காயம்

பெய்ரூட், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேல் மீது தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், லெபனானில் நேற்று மதியம் 3.30 மணியளவில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வரும் பேஜர் கருவிகள் … Read more

கைதானவரிடம் ரோலக்ஸ் வாட்ச், பணத்தை அமுக்கிய எஸ்.ஐ – ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை எடுத்த எஸ்.பி!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பச்சாம்பேட்டை வாழைத்தோப்பில் சீட்டு விளையாடியவர்களை, தனிப்படை போலீஸார் பிடித்து லால்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்படி, சீட்டு விளையாடிய 9 நபர்கள் கைது செய்யப்பட்டு, காவல் நிலைய சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சோதனையின்போது, சீட்டு விளையாடிய ஒருவரின் கையில் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச் மற்றும் அவரின் காரில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை தனிப்படை எஸ்.ஐ வினோத் எடுத்துள்ளார். அதை பறிமுதல் செய்த கணக்கில் காட்டாமல் தானே வைத்துக் கொண்டதாகச் … Read more

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 175 பேருக்கு பாதிப்பு: நிபா வைரஸ் காய்ச்சல் பரவலால் பள்ளி, கல்லூரிகள் மூடல்

மலப்புரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 175 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால்பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இங்கு 175 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 74 பேர் சுகாதார பணியாளர்கள். இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது: நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 126 பேர் தீவிர … Read more

மிலாடி நபி ஊர்வலத்தில் பாலஸ்தீன கொடி: 6 பேரை கைது செய்து கர்நாடக போலீஸார் விசாரணை

பெங்களூரு: கர்நாடகாவில் பெங்களூரு, கோலார், மங்களூரு, தாவணகெரே, சித்ரதுர்கா, மைசூரு உள்ளிட்ட இடங்களில் கடந்த திங்கள்கிழமை இரவு மிலாடி நபி ஊர்வலம் நடைபெற்றது. இந்நிலையில் கோலார், சித்ரதுர்கா, தாவணகெரே ஆகிய 3 இடங்களில் நடந்தஊர்வலத்தில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் பாலஸ்தீன நாட்டின் கொடியை ஏந்திசென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகியஅமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா கூறுகையில், ‘‘கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஒரு தரப்புக்கு … Read more

உணவு பொட்டலங்களில் பயன்படுத்தும் 3,600 வகை ரசாயனம் மனித உடலில் கலப்பு: மலட்டுத் தன்மை ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் தகவல்

சூரிச்: பிளாஸ்டிக், காகிதம், கண்ணாடி, உலோகம் உள்ளிட்டவற்றில் உள்ள ரசாயனங்கள் உணவு பண்டங்களில் கண்ணுக்குத் தெரியாமல் கலந்து வருவது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ‘எக்ஸ்போசர் சயின்ஸ் அண்டு என்விரான்மென்ட்டல் எபிடமியாலஜி’ என்ற இதழில் ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. இதுகுறித்து சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் உள்ள உணவு பேக்கேஜிங் கூட்டமைப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிர்கிட் கியூக்கி கூறியதாவது: உணவுடன் தொடர்புடைய ரசாயனங்களில் 100 வகை ரசாயனங்கள் மனித ஆரோக்கியத்துக்கு மிகவும் ஆபத்தானவையாக வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒட்டாமல் சமைக்க … Read more

வாழ்நாள் முழுவதும் என் கதைகளை சொல்லிக்கொண்டே இருப்பேன் – மாரி செல்வராஜ்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, “வாழை” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று 25 நாளைக் கடந்திருக்கிறது.   

மீண்டும் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா? அவரே கொடுத்துள்ள விளக்கம்!

இந்தியாவுக்கான இனி டி20 போட்டிகளில் விளையாடவும், ஓய்வு பெற்ற முடிவை திரும்ப பெரும் எண்ணம் இல்லை என்று ரோஹித் சர்மா மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த முடிவில் தான் நிம்மதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற பிறகு, டி20 போட்டிகளில் இருந்து ஓய்வது பெறுவதாக அறிவித்து இருந்தார் ரோஹித் சர்மா. மேலும், தற்போதைய உலக கிரிக்கெட்டில் ‘ஓய்வு’ என்ற வார்த்தை அதன் சாரத்தையும் நம்பகத்தன்மையையும் இழந்துவிட்டதாகக் கருதுகிறார். ஒரு சில … Read more

நேற்றைய ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் 61% வாக்குகள் பதிவு

ஸ்ரீநகர் நேற்று நடந்த ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் 61% வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இவற்றில், ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசம் என்ற அந்தஸ்து பெற்றுலடாக்கிற்கு சட்டசபை இல்லாத யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் … Read more