தமிழகத்தில் பிளே ஸ்கூல் விதிமுறைகளை செயல்படுத்த இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் பிளே ஸ்கூல் தொடர்பான 2023-ம் ஆண்டின் விதிமுறைகளை செயல்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ்நாடு பிளே ஸ்கூல் சங்க பொதுச் செயலாளர் கல்வாரி தியாகராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழகத்தில் 6000 பிளே ஸ்கூல்கள் உள்ளன. இவற்றில் 1.80 லட்சம் குழந்தைகள் பயில்கின்றனர். 30 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் உள்ளனர். பிளே ஸ்கூல்களுக்கு அனுமதி பெறுவது தொடர்பாக தமிழக அரசு … Read more

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ – மத்திய அமைச்சரவை ஒப்புதலும், வலுக்கும் எதிர்ப்பும்

புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றது. இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றன. இந்தத் திட்டம் நடைமுறையில் சாத்தியமே இல்லை என்பது அவர்களது வாதம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தின்படி தேர்தல் நடத்துவது குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் … Read more

பேஜர்களைத் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடிப்பு: லெபனானில் 300 தீவிரவாதிகள் படுகாயம்; 9 பேர் பலி

பெய்ரூட்: லெபனானில் நேற்று பேஜர்கள் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து இன்று அதே பாணியில் வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வெடித்துச் சிதறியுள்ளன. லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (செப்.17) பேஜர்கள் வெடித்துச் சிதறின. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் படுகாயமடைந்தனர். 12 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்தும் இந்த பேஜர்களில் லித்தியம் … Read more

26 வயதான இளம்பெண் ஆடிட்டர் வேலை பளு காரணமாக உயிரிழந்தார்… எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் மீது பெண்ணின் தாய் குற்றச்சாட்டு…

பணிச் சுமை காரணமாக வேலைக்கு சேர்ந்த நான்கு மாதங்களில் இளம்பெண் ஆடிட்டர் உயிரிழந்ததாக அந்நிறுவனம் மீது அந்தப் பெண்ணின் தாய் குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இளம் பட்டயக் கணக்காளர் (CA). அன்னா செபாஸ்டியன் பேராயில், மகாராஷ்டிரா மாநிலம் புனே-வில் உள்ள உலகின் முன்னணி ஆடிட்டிங் நிறுவனங்களுள் ஒன்றான எர்ன்ஸ்ட் & யங் (EY) நிறுவனத்தில் எக்சிகியூடிவாக 2024 மார்ச் முதல் வேலை செய்து வந்தார். 2023ம் ஆண்டு CA படைப்பை முடித்த அன்னா பேராயிலுக்கு இது முதல் … Read more

செல்போனை பார்த்தாலே அலறும் லெபனான் மக்கள்! மரண பயம் காட்டிய பேஜர், வாக்கி டாக்கி வெடிப்பு சம்பவங்கள்

பெய்ரூட்: லெபனானில் நேற்று பேஜர் கருவிகள் வெடித்து பலர் பலியான நிலையில் இன்று வாக்கி டாக்கிகள் வெடித்து சிலர் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்து மின்னணு கருவிகள் வெடிப்பால் பலர் பலியாகி வருவதால் லெபனான் மக்கள் போனை பார்த்தாலே பயத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு முதல் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் Source Link

Kanguva: கங்குவாவுக்கு தேதி குறிச்சாச்சு.. தெறிக்கவிட்ட ரிலீஸ் அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை: சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம். இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் படம் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. படம் வரும் அக்டோபர் மாதம் 10ஆம்

Ind Vs Ban: 'டெஸ்ட் சீசனை தொடங்கும் இந்திய அணி; முன் நிற்கும் அந்த 3 சவால்கள்!

இந்திய அணி தனது டெஸ்ட் சீசனை தொடங்கவிருக்கிறது. 2025 ஜூன் மாதத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பாக இப்போதிருந்து இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிராக நாளை சேப்பாக்கத்தில் தொடங்கவிருக்கும் டெஸ்ட் போட்டியோடு இந்திய அணியின் இந்த பயணம் தொடங்குகிறது. இந்த வங்கதேசத் தொடரில் இந்திய அணிக்கான சவால்கள் என்னென்ன? ஒயிட்பால் ஹேங் ஓவர்: கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல் தொடங்கியது. இரண்டரை மாதங்கள் நீண்ட … Read more

“2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள்” – தமிழிசை உறுதி

சென்னை: “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள்,” என பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சென்னையில் நடைபெற்ற திமுகவின் பவள விழா கொண்டாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பேச்சு, அவர் தமிழகத்தின் உண்மை நிலையை அறிந்து பேசுகிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், உழவர்கள், நெசவாளர்கள் என விளிம்புநிலை … Read more

“ஜெகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு” – சந்திரபாபு நாயுடு ‘பகீர்’ குற்றச்சாட்டு

திருப்பதி: முந்தைய ஜெகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புக் கூட்டம் மங்களகிரியில் இன்று (செப்.18) மாலை முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த 100 நாட்களில் நிறைவேற்றிய திட்டங்கள், எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. பின்னர் இந்த கூட்டத்தில் … Read more

தோனி மீண்டும் கேப்டனாக வேண்டும்… காரணத்துடன் கருத்துச் சொன்ன Ex சிஎஸ்கே வீரர்

MS Dhoni: 2020ஆம் ஆண்டு ஆக. 15ஆம் தேதி அன்றே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார், எம்எஸ் தோனி. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய அணியில் தனது கேப்டன்ஸி பதவியையும் விராட் கோலியிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டார். அவருக்கு தற்போது வயது 43 ஆகிறது. இந்த வயதிலும் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்களிடையேயும், முன்னாள் வீரர்கள் இடையேயும் நிலவுகிறது என்றால் அது சாமானியமானது அல்ல.  சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super … Read more