Coolie: “2 மாத கடும் உழைப்பு; இப்படியெல்லாம் பண்ணாதீங்க…"- வேதனைப்பட்ட லோகேஷ் கனகராஜ்

விஜய்யின் ‘லியோ’ படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்து இயக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. த.செ.ஞானவேலின் ‘வேட்டையன்’ படத்தின் பணிகளை முடித்த கையோடு, ‘கூலி’ படத்தின் படப்படப்பில் மும்முரமாகியிருக்கிறார் ரஜினி. ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘லியோ’ படங்களை இயக்கிய லோகேஷின் அடுத்த படம் என்பதாலும், ‘ஜெயிலர்’ படத்தில் வசூலைக் குவித்த ரஜினியின் திரைப்படம் என்பதாலும் ‘கூலி’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கின்றன. ‘கூலி’ ரஜினி இப்படத்தில் ரஜினியுடன், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா … Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல் : இந்தியாவை ‘அதிபர் ஆட்சி’ முறைக்கு மாற்றும் முயற்சி… பினராயி விஜயன் கண்டனம்

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ இந்தியாவை ‘அதிபர் ஆட்சி’ முறைக்கு மாற்றும் முயற்சி என்றும் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலை ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக வெற்றிகரமாக … Read more

பேஜர்களை தொடர்ந்து வெடித்து சிதறிய வாக்கி டாக்கி, செல்போன்! லெபனான், சிரியாவில் உச்சக்கட்ட பதற்றம்

பெய்ரூட்: லெபானானில் பேஜர்கள் வெடித்ததில், 10க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பேஜர்களை தொடர்ந்து, தற்போது வாக்கி டாக்கி, செல்போன், லேப்டாப் வெடிக்க தொடங்கியுள்ளன. இதில் 3 பேர் வரை உயிரிழந்ததுள்ளனர். ஆரம்ப காலத்தில் இஸ்ரேல் என்கிற ஒரு நாடே கிடையாது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜெர்மன் தாக்குதலுக்கு பயந்து புலம்பெயர்ந்த ஜியோனிஸ்ட்கள் Source Link

பஞ்சாயத்தை பத்தவச்சிட்டு.. பாட்ஷா லுக்கில் போஸ் வேற.. மணிமேகலை ராக்ட்.. பிரியங்கா ஷாக்ட் ரைமிங் வேற!

சென்னை: தமிழ் சின்னத்திரை உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிரச்னை என்றால் அது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடைபெற்ற பிரச்னைதான். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலைக்கும் குக்காக இருந்த பிரியங்காவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பெரும் பிரச்னையாக உருவெடுத்து, நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறும்

வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க  அனுமதிக்கப்பட்டவர்கள்

வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (18) தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;

வயநாடு துயரம்: “50 நாள்களைக் கடந்தும் 1 ரூபாய் கூட மத்திய அரசு வழங்கவில்லை" சி.பி.எம் கோப அறிக்கை!

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவின்போது இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவும், தன்னார்வலர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கவும் பெரும் தொகை செலவுப்செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கேரளாவின் ஆளும் கட்சியான சி.பி.எம் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது. கேரள மாநில சி.பி.எம் செயலாளர் எம்.வி.கோவிந்தன் `மனிதனின் பேராசை… இயற்கை எதிர்வினையாற்றும்!’ – வயநாடு நிலச்சரிவு குறித்து கேரள உயர் நீதிமன்றம் கேரள மாநில சி.பி.எம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “வயநாடு புனர் … Read more

“திமுக மேனாமினுக்கி கட்சியல்ல” – அமைச்சர் துரைமுருகன் பதிவின் பின்னணி என்ன?

சென்னை: திமுகவுக்கு மன உறுதி, கொள்கை பிடிப்பு, தியாக உணர்வுடன் வரும் இளைஞர்களை வரவேற்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுகவில் அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், முடிவெடுக்க வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை, அதற்கான எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் இருக்கும் நிலையில், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று இளைஞரணி நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதியே பேசியிருந்தார். அதன்பின், அமைச்சர் எ.வ.வேலு புத்தக வெளியீட்டுவிழாவில் ரஜினிகாந்த் … Read more

‘சந்திரயான்-4’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: நிலவில் வெற்றிகரமாக இறங்கிய பின்னர் பூமிக்கு திரும்புவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிலவின் மாதிரிகளை சேகரித்து பூமியில் பகுப்பாய்வு செய்யவும் சந்திரயான்-4 என்று பெயரிடப்பட்ட பயணத்துக்கு ஒப்புதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அளிக்கப்பட்டது. இந்த சந்திரயான்-4 விண்கலம், நிலவில் தரையிறங்கி பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பும். இதை 2040-ம் ஆண்டுக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2035-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையம் (பாரதிய அந்தரிக்‌ஷ் நிலையம்), 2040-க்குள் சந்திரனில் இந்தியா அமிர்த கால … Read more

Monkeypox: இந்தியாவில் இன்னொரு நபருக்கு குரங்கம்மை… கேரள நபருக்கு பாதிப்பு உறுதி!

Monkeypox In India: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு 2 ஆக உயர்ந்துள்ளது. 

ஸ்மார்ட் சிட்டி ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முதல் குற்றவாளி… எப்ஐஆர் பதிவு…

சென்னை ஸ்மார்ட் சிட்டி ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை முதல் குற்றவாளி (ஏ-1) என குறிப்பிட்டு எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதில் மழைநீர் வடிகால்களின் 51 டெண்டர்கள் மற்றும் பேருந்து வழித்தட சாலைகளின் இரண்டு டெண்டர்கள் குறித்து விசாரணை நடத்தியதில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பண ஆதாயத்துடன் டெண்டர்கள் வழங்கியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. … Read more