அஸ்வினுக்கு மாற்றாக வரும் இளம் வீரர்! யார் இந்த 21 வயதான ஹிமான்ஷு சிங்?

கடந்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அதே சமயம் ஒரு நாள் தொடரை 2 – 0 என்ற கணக்கில் தோல்வியும் அடைந்தது. இந்த தொடருக்கு பிறகு கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக இந்திய அணியின் வீரர்கள் ஓய்வில் இருந்து வருகின்றனர். அடுத்ததாக வரும் செப்டம்பர் 19ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட … Read more

அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் காப்பகம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் காப்பகங்கள் அமைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த அதிசயகுமார், தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கோவில் வளாகங்கள், பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் பலர் ஆங்காங்கே தங்கியுள்ளனர். இவர்களை பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009-ன் படி தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஆதரவற்றோர் முதியோர் … Read more

ஐஐடி குஹாத்தி மாணவர் ஹாஸ்டல் அறையில் சடலமாக மீட்பு.. மிகப்பெரிய போராட்டம்.. அஸ்ஸாமில் பதற்றம்

கொல்கத்தா: அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள ஐஐடியில் ( அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம்) உள்ள விடுதி அறையில் 21 வயது மாணவர் (ஐஐடி-ஜி) இறந்து கிடந்தார். இந்த மாணவருடன் சேர்த்து இதுவரை 4 மாணவர்கள் இறந்துள்ளனர். இதை கண்டு கொதித்து போன மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஐஐடி குவஹாத்தியில் மாணவர் போராட்டத்தால் Source Link

Call Me Bae Review: கள்ளத்தொடர்பு.. ஓவர் நைட்டில் நடுத்தெருவுக்கு வரும் கோடீஸ்வரி.. புது வெப்சீரிஸ்!

மும்பை: அமேசான் பிரைம் ஓடிடியில் அனன்யா பாண்டே லீடு ரோலில் நடித்துள்ள ‘Call Me Bae’ வெப்சீரிஸ் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியிருக்கிறது. பெரும் கோடீஸ்வரரை திருமணம் செய்துக் கொண்டு ராணி போல வாழ்ந்து வரும் பெண்ணுக்கு ஜிம் டிரெய்னர் மீது ஏற்படும் மோகம் காரணமாக அவரது வாழ்க்கை அடுத்த நொடியே நடுத்தெருவுக்கு வருகிறது. டெல்லியில் இருந்து

`Metro Fight எடுக்கும்போது…’ – 'THE GOAT' DOP Siddhartha Nuni sharing

‘தி கோட்’ திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வரும் நிலையில், அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா, அப்படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இவர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் பணியாற்றியவர். இவர் கோட் திரைப்படத்தில் விறு விறுப்பான சண்டைக் காட்சிகளை எடுக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களை பற்றியும் படத்தில் பணியாற்றியது பற்றியும் நெகிழ்ந்து பேசியிருக்கிறார். அவற்றை முழுமையாக காண…! Source link

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவில் கரையை கடந்தது: தமிழகத்தில் 6 நாட்கள் மழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஒடிசா மாநிலம் புரி அருகே நேற்று மதியம் கரையை கடந்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (செப்.10) முதல் 15-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான … Read more

இந்தியா - அபுதாபி இடையே 5 ஒப்பந்தம்: டெல்லி வந்துள்ள இளவரசர் அல் நஹ்யானுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அபுதாபி இளவரசர் அல் நஹ்யானை பிரதமர் மோடி சந்தித்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு அணுசக்தி, இயற்கை எரிவாயு, உணவு பூங்கா மேம்பாடு ஆகிய துறைகளில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் அவரை பிரதமர் மோடி நேற்று வரவேற்றார். பின்னர், … Read more

இன்று மாலைக்குள் மருத்துவர்கள் போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி உச்சநீதிமன்றம் இன்று மாலைக்குள் மருத்துவர்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மாதம் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் இதை கண்டித்தும், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் ஓரு மாதத்துக்கும் மேலாக வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். உச்சநீதிமன்றம் பெண் மருத்துவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை … Read more

Divorces: திரைத்துறையில் அதிகரிக்கும் விவாகரத்துகள்.. தம்பதிகளிடம் குறைகிறதா சகிப்புத்தன்மை?

சென்னை: ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவும் முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார் ஜெயம்ரவி. மிகவும் கசப்பான இந்த முடிவை தன்னுடைய தனிப்பட்ட முடிவாக எடுததுள்ளதாகவும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிவி பிரகாஷ் -சைந்தவியின் பிரிவு அறிவிப்பு மிகப்பெரிய அளவில்

கூகுள் பே பயன்படுத்தி புதிய வகை மோசடி: கவனமாக இருக்க போலீஸார் அறிவுரை

சென்னை: கூகுள் பே பயன்படுத்தி புதிய வகை மோசடி அரங்கேறி வருவதால், பொதுமக்கள் கவனமுடன் இருக்க சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸாரின் அறிவுறுத்தல்: தற்போது புதிய வகை மோசடி அரங்கேறி வருகிறது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் வங்கிக் கணக்குக்கு கூகுள் பே (ஜிபே) மூலம் பணம் அனுப்புகிறார். பின்னர், அவசரத்தில் வேறு ஒருவருக்கு அனுப்புவதற்கு பதிலாக உங்கள் எண்ணுக்கு அனுப்பிவிட்டேன். எனவே, தவறுதலாக நான் அனுப்பிய பணத்தை, மீண்டும் … Read more