‘‘மீனவர்களை மீட்க உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்’’ – வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 7-09-2024 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், IND-TN-08-MM-198, IND-TN-08-MM-28 மற்றும் IND-TN-08-MM-52 பதிவெண்கள் கொண்ட அவர்களது மூன்று மீன்பிடி … Read more

உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா செல்கிறார் அஜித் தோவல்

புதுடெல்லி: ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து, இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்கிறார். இரு நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகபோர் நீடிக்கிறது. இதன் காரணமாக இரு தரப்பிலும் அதிக அளவில்உயிர் சேதம், பொருள் சேதங்கள் ஏற்பட்டன. தற்போது ராணுவ வீரர்கள், ஆயுதங்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் உக்ரைன், … Read more

‘‘சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்’’ – அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் சென்றுவிட்டதாக விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு மாநில அரசு அடக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யாது இருப்பதும், தவறிழைத்தவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தருவதும், தொழில்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை பெருக்கி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் ஒரு மாநில அரசின் தலையாய … Read more

பிரபல பாலிவுட் நடிகர் விகாஸ் சேத்தி 48 வயதில் திடீர் மரணம்!

Vikas Sethi: 2000 ஆண்டு காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த தொலைக்காட்சி நட்சத்திரம் விகாஸ் சேத்தி அவரது 48 வயதில் மரணம் அடைந்துள்ளார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

‘மெய்யழகன்’ படக்குழுவினர் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்: சீமான்

‘மெய்யழகன்’ படக்குழுவினர் மாபெரும் வெற்றியடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பாராட்டுகளை வெளியிட்டுள்ளார்.  

தயாரிப்பாளர் டில்லி பாபு மறைவு: "அறிமுக இயக்குநர்களின் வேடந்தாங்கல்" – நெகிழ்ந்த இயக்குநர் மு.மாறன்

தமிழ் சினிமாவில் பல அறிமுக இயக்குநர்களை அள்ளிக் கொடுத்த தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு. உடல்நலப் பாதிப்பின் காரணமாக நேற்றிரவு காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 50. ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்ட்டரி என்ற நிறுவனத்தின் மூலம் ‘உறுமீன்’, ‘மரகதநாணயம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ‘ஓ மை கடவுளே’, ‘ராட்சசன்’, ‘பேச்சிலர்’, ‘கள்வன்’ எனப் பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் டில்லி பாபு. அவர் தயாரித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குநர் மு.மாறன், … Read more

அமேசனில் பண்டிகை கால சலுகை… எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடி

Amazon Electronic Festive Sale 2024: இ-காமர்ஸ் தளமான அமேசானில், செப்டம்பர் 6 முதல், செப்டம்பர் 10 வரை, அதாவது நாளை வரை பண்டிகை கால சலுகையாக, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை விற்பனையில், ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச், டிவி, ஃப்ரிட்ஜ், ஏசி உள்ளிட்ட பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 75 சதவீதம் வரை பம்பர் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ரூ.20,000 வரை உடனடி வங்கி தள்ளுபடி மற்றும் ரூ.25,000 வரை … Read more

பிரதமர் மோடியை கண்டு இந்தியாவில் யாரும் பயப்படுவதில்லை! ராகுல் காந்தி நக்கல் – பாஜக கண்டனம்…

வாஷிங்டன்: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்தியாவில் யாரும் பிரதமர் மோடியை கண்டு பயப்படுவதில்லை  என நக்கலா பேசியது சர்ச்சையாகி உள்ளது. சீன ஆதரவாளரான ராகுல்காந்தி இந்தியாவை அவமதிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார் என  பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், கூட்டணி கட்சிகளுடன் 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. அதுபோல காங்கிரஸ் கட்சியும் இந்த முறை 99 இடங்களை மட்டுமே … Read more

டிரோன் வெடிகுண்டு வீச்சு.. ராக்கெட் தாக்குதல்.. பற்றி எரியும் மணிப்பூர். மீண்டும் பள்ளிகள் மூடல்!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்த நிலையில் அம்மாநிலத்தில் பள்ளிகள் அனைத்தும் இன்றும் நாளையும் மூடப்பட்டுள்ளன. டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியதால் மணிப்பூரில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் மாரெம்பம் கொய்ரெங் வீடுதான் ராக்கெட் தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தினர். Source Link

ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்துக்கு காரணம் யார்?.. அவரால் ஓவர் பாதிப்பாம்.. பிரபலம் இப்படி சொல்றாரே

சென்னை: கோலிவுட்டில் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர் ஜெயம் ரவி. சினிமா பின்னணி இருக்கும் குடும்பத்திலிருந்து அவர் வந்திருந்தாலும் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான சைரன் திரைப்படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்றது. அடுத்ததாக அவர் ஜெனி, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில்