“விஜய்யால் நல்லது நடந்தால் சந்தோசம்” – மதுரையில் துரை வைகோ எம்.பி கருத்து

மதுரை: நடிகர் விஜய் சினிமாவில் ஜொலிக்கும் நட்சத்திரம். அவரால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்தால் சந்தோஷம் தான் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறினார். மதுரை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மதிமுக நிர்வாகிகளான மதுரையைச் சேர்ந்த பச்சமுத்து, அமிர்தராஜ், புலி சேகர் ஆகியோர் குடும்பத்திற்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ரூ.45 லட்சம் நிதியுதவி வழங்கினார். பின்னர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழக ஆளுநர் ரவி பதவியேற்ற நாளிலிருந்து ஆளுநராக செயல்படவில்லை. … Read more

சோம்பலான வாழ்க்கை வாழும் 20 கோடி இந்தியர்கள்: தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்

புதுடெல்லி: நம் நாட்டில் 20 கோடி பேர் சோம்பலான வாழ்க்கை வாழ்வதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி எந்த அளவில் உள்ளது என்ற ஆய்வை ஆசியா பசிபிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் அண்ட் சொசைட்டி ஆக்ஸிலரேட்டர் என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்தியது. மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஒடிசா மற்றும் தமிழகத்தில் பெற்றோர்கள், மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோரிடம் குழு விவாதம் நடத்தி விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி குறித்த ஆய்வுநடத்தப்பட்டது. அதில் தங்கள்பள்ளியில் விளையாட்டுக்கு … Read more

பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மொத்தம் 29 பதக்கங்கள்

பாரிஸ். இன்றுடன் நிறைவடையும் பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியா 29 பதக்கங்களை வென்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17 ஆவது பாராஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்த தொடர் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைய உள்ளது. இன்றைய கடைசி நாள் போட்டியில் இந்தியா தரப்பில் பூஜா இறுதி வீராங்கனையாக கனோயிங் போட்டியில் பங்கேற்றார்.  ஆனால் போட்டியின் அரையிறுதியில் பூஜா தோல்வியை தழுவினார். போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு … Read more

பாலியல் வன்கொடுமை வழக்கு.. எதற்காக சிறை சென்றேன்.. மன்சூர் அலிகான் கொடுத்த அதிர்ச்சி

சென்னை: மன்சூர் அலிகான் 90களில் பிரபலமான வில்லனாக வலம் வந்தவர். அவரது வித்தியாசமான உடல் மொழியும், நடிப்பும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் காரணமாக பிஸியான நடிகராக திகழ்ந்தார். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் கம்மியானதை அடுத்து அரசியலிலும் அடி எடுத்து வைத்தார். ஆனால் அதிலும் அவரால் சோபிக்க முடியவில்லை. இதற்கிடையே அவர் தொடர்ந்து சர்ச்சையாகவும் பேசி வருகிறார். இந்தச்

“இந்து மதத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களுக்கு திமுக துணை நிற்கிறது” – அர்ஜூன் சம்பத் விமர்சனம்

திருவள்ளூர்: இந்து சமயத்துக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்பவர்களுக்கு திமுக துணை நிற்கிறது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் என்.ஜி.ஓ., நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு இன்று மாலை அர்ஜூன் சம்பத் பூஜை செய்து வணங்கினார். அப்போது, அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “இந்து சமயத்துக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்பவர்களுக்கு திமுக துணை நிற்கிறது. இந்த நிலை மாறவேண்டும். தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை … Read more

அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு

ஹூஸ்டன்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா சென்றடைந்தார். இந்திய – அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்த அவர் உரையாடல்கள் நடத்த இருக்கிறார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் ராகுல் காந்தி, “அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டல்லாஸ் நகரில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் உறுப்பினர்கள் அளித்த உற்சாகமான வரவேற்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்தப் பயணத்தின் போது, இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளை … Read more

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே…! தவெக தொண்டர்களுக்கு நடிகர் விஜய் அறிக்கை…

சென்னை: என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே… என  தவெக தொண்டர்களுக்கு நடிகர் விஜய் அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது. இதற்கு  காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணையமும் விஜய்-ன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், மாநாடு தொடர்பான அதிகாரப்பூர்வ … Read more

சூடுபிடிக்கும் ஹரியானா தேர்தல்.. 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!

டெல்லி: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. உச்சான கலான் தொகுதியில் பிரிஜேந்திர சிங் களமிறக்கப்பட்டுள்ளார். ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் இதுவரை 41 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ். ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஹரியானா Source Link

விஜய்யின் GOAT.. செம நஷ்டம் வந்துவிட்டதா?.. என்ன வேற மாதிரி பேச்சு கேட்குது

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் GOAT திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. படம் வெளியான முதல் நாளில் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த சூழலில் நாட்கள் செல்ல செல்ல பலர் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களில் தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதேசமயம் வசூல் ரீதியாக படம் நல்ல கலெக்‌ஷன் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் GOAT

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: சீனாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா

ஹூலுன்பியர், 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் இன்று தொடங்குகியது. 17-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி, தொடக்க ஆட்டத்தில் … Read more