செல்வேரி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் மக்கள் பாவனைக்கு..

மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வேரி கிராமத்தில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட செல்வேரி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் நேற்று சனிக்கிழமை (7) மாலை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் செல்வேரி பகுதியில் உள்ள பொதுமக்கள் நீண்ட  காலமாக குடிநீர் பெறுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்த நிலையில் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தின் 54 ஆவது  காலாட்படையின் ஒழுங்கமைப்பில் குறித்த கிராம மக்கள் குடிநீர் பெறும் … Read more

Sinus & Migraine headache: சைனஸ், மைக்ரேன் தலைவலி காரணங்களும்… தீர்வும்! | மருத்துவர் கு. சிவராமன்

உண்மையில் ஒரு மருத்துவருக்குத் தலைவலி தரும் விஷயம் என்ன தெரியுமா? தலைவலிக்குக் காரணம் தேடுவது. ஏனென்றால், தலைவலிக்கு 200-க்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன எனக் கூறும் மருத்துவர் கு.சிவராமன், தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்களையும், சித்த மருத்துவ தீர்வுகளையும் பகிர்ந்துகொள்கிறார். தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள்… 6-7 மணி நேரமாவது தடையில்லா இரவு நேரத் தூக்கம் கிடைத்திடாதபோது… ஷிஃப்ட் முறை வேலையால் சீரான நேரத்தில் தூங்க இயலாமல் நேரம் தவறித் தூங்கும்போது… காற்றோட்டமான வசிப்பிடம் இல்லாதபோது… மருத்துவர் … Read more

‘மின் உயர்விலிருந்து 2026 இல் காப்பாற்றப்படுவீர்கள்’ – விநாயகர் சதுர்த்தி விழாவில் காங்., ஆதரவாளர்கள் நூதனம்

புதுச்சேரி: புதுச்சேரி மின் உயர்விலிருந்து 2026 இல் காப்பாற்றப்படுவீர்கள் என அறிவிப்பை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை காங்கிரஸ் ஆதரவாளர்கள் நூதனமாக கொண்டாடினர்‌. புதுச்சேரியில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. முத்தியால்பேட்டை பகுதியில் பெரிய அளவில் விநாயகர் வைத்து காங்கிரஸ் ஆதரவாளர்கள் சார்பில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் நூதனமாக விநாயகர் அருள் பாதிக்கும் கையில் மின் கட்டண உயர்வை சுட்டிக்காட்டி அறிவிப்பு வைத்திருந்தனர். அதில் “பக்தர்களே கவலை வேண்டாம்- மின்சார கட்டண உயர்வில் … Read more

லக்னோ கட்டிட விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 28 பேர் காயமடைந்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹர்மிலாப் பில்டிங் என அழைக்கப்படும் இந்தக் கட்டிடம் மருத்துவப் பொருள்களின் வணிகத்துக்கான குடோனாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடந்துள்ளது. கட்டிடம் இடிந்து விழும்போது அதன் அடித்தளத்தில் கட்டுமான பணிகள் நடந்து வந்ததாக அதிகாரிகள் … Read more

ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்க வாய்ப்பு? முதலமைச்சர் எடுக்கும் முடிவு

Tamil Nadu rural local body elections : தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேலைகள் தொடங்கியிருக்கும் நிலையில், அந்த தேர்தல் எப்போது நடைபெறும் என்ற தகவல் கசிந்துள்ளது.

மத்திய நிதித்துறை செயலாராக துஹின் காதா பாண்டே நியமனம்

டெல்லி மூத்த ஐ ஏ எஸ் அதிகாரி துஹின் காந்தா பாண்டே மத்திய அரசின் நிதித்துறை செயலரகா நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் மத்திய அமைச்சரவை செயலராக இருந்த ராஜிவ் கவுபா பணி நிறைவு பெற்றார். எனவே அப்பதவிக்கு நிதித்துறை செயலராக இருந்த டி.வி. சோமநாதன், மத்திய அமைச்சரவை செயலராக நியமிக்கப்பட்டார். முதலீடு மற்றும் பொதுத்துறை செயலராக கடந்த 1987 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேரடரான துஹின் காந்தா பாண்டே, இருந்து வந்தார். இன்று காலியாக இருந்த நிதித்துறை செயலர் … Read more

GOAT Matta Song: எனக்கு ரொம்ப புடுச்சவங்களோட அன்னைக்குத்தான்.. சஸ்பென்ஸ் குறித்து மனம் திறந்த த்ரிஷா

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தி கோட். இந்தப் படம் விஜய்யின் 68வது படமாகும். படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் படக்குழுவினர் நடத்திய செய்தியாளார்கள் சந்திப்பில் தொடங்கி, புரோமோசன் நிகழ்ச்சிகள் வரை பலமுறை கேட்கப்பட்ட கேள்வி, படத்தில் த்ரிஷா இருக்காங்களா என்பதுதான். ஆனால் படக்குழுவினர் இந்த

“வெளிநாட்டு முதலீடுகள் குறித்து திமுக வெற்று விளம்பரங்களை செய்து வருகிறது” – அன்புமணி

பெரம்பலூர்: வெளிநாட்டில் இருந்து அதிக முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் தமிழகத்திற்கு வந்துள்ளதாக திமுக அரசு வெற்று விளம்பரங்களை செய்து வருகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று (சனிக்கிழமை) பெரம்பலூருக்கு வருகை தந்த அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதவது: தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் முடிவடைய உள்ள சூழ்நிலையில் முன்பிருந்தது … Read more

கொல்கத்தா மருத்துவர் உடலுக்கு அவசரமாக இறுதிச்சடங்கு செய்ய போலீஸார் கட்டாயப்படுத்தினர்: தந்தை சரமாரி குற்றச்சாட்டு

கொல்கத்தா: கொல்கத்தாவில் கடந்த ஆக.9-ம்தேதி 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஆர்.ஜி.கர்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையொட்டி, கடந்த புதன்கிழமை இரவு ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறியதாவது: … Read more

பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 வரை நீதிமன்றக் காவல்

சென்னை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு செப்டம்பர் 20 வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு  மோட்டிவேஷனல் ஸ்பீச் வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்திருந்தனர். சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக, ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும்,  இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் … Read more