உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் மாநில தேர்தல் ஆணையம்: வாக்குப் பெட்டிகளை தயார் நிலையில் வைக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தலை நடத்தும் வகையில், வாக்குப்பெட்டிகளை பழுது நீக்கி தயார் நிலையில் வைக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு 27 மாவட்டங்களில் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வார்டு மறுவரையறை முடிந்த பின், கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பின் மீதமுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் … Read more

வெள்ள ஆய்வின் போது திடீரென எதிரே வந்த ரயில்: மெய்க்காப்பாளர்களால் உயிர் தப்பிய சந்திரபாபு நாயுடு

விஜயவாடா: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, விஜயவாடாவில் நேற்று வெள்ள ஆய்வு மேற்கொண்ட போதுஆற்றின் மேல் உள்ள தண்டவாளத்தின் அருகே நடந்து சென்றார். அப்போது எதிரே எதிர்பாராத விதமாக ரயில் வேகமாக வந்தது. உடனே அவரின் பாதுகாவலர்கள் சந்திரபாபுவுக்கு பாதுகாப்பு அரணாக நின்று அவரை காப்பாற்றினர். இதனால் அவர் வெறும் 3 அடி தூரஇடைவெளியில் உயிர் தப்பினார். ஆந்திர மாநிலத்தில் சில மாவட்டங்களை வெள்ளம் புரட்டி போட்டுள்ளது. குறிப்பாகவிஜயவாடா நகரம் சீர் குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக … Read more

வெளியானது ' யுவர்ஸ் சின்சியர்லி ராம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர்

கன்னட திரையுலகில் ரசிகர்களின் அபிமானத்திற்குரிய நட்சத்திரங்களான ரமேஷ் அரவிந்த் மற்றும் கணேஷ் ஆகிய இருவரும் ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ எனும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கௌரி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரூ கவுடா பாளையத்தில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கத்தில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. உற்சாகம் நிறைந்த இந்த விழாவில் நடிகையும், தொகுப்பாளருமான ஜானகி ராயலா கிளாப் அடிக்க, இயக்குநர்

விநாயகர் சதுர்த்தி: உச்சிப்பிள்ளையாருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்: வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம்

திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் உள்ள உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை, மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டை என மொத்தம் 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டு புத்தர்களும் கலந்து கொண்டனர். திருச்சி மலைக்கோட்டையின் நடுவே தென் கயிலாயம் என்று போற்றப்படும் தாயுமான சுவாமி கோயிலும், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும், மலையின் அடிவாரத்தில் மாணிக்க … Read more

கர்நாடகாவில் இந்த ஆண்டில் 27 ஆயிரம் பேருக்கு டெங்கு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாநில அரசு இதை தொற்று நோயாக அறிவித்துள்ளது. மேலும் கொசுக்கள் உருவாக காரணமாக இருப்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி மாநிலம் முழுவதும் 27 ஆயிரத்து 189 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக பெங்களூரு மாநகரில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு … Read more

இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்நிறுவனம் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. சிறப்பு அம்சங்கள் 6.7 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே மீடியாடெக் டிமான்ஸிட்டி … Read more

Vinayakan: விமான நிலையத்தில் போதையில் அலப்பறை.. ஜெயிலர் பட வில்லன் கைது!

சென்னை: பிரபல மலையாள வில்லன் நடிகரான விநாயகன் ஹைதாபாத் விமானநிலையத்தில் மது அருந்திவிட்டு, பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அவரை கைது செய்து ஹைதராபாத் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். நடிகர் விநாயகன், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் திமிரு, காளை, சிலம்பாட்டம் , மரியான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

TVK : `வீடியோ வெளியிடப்போகும் விஜய்?; மாவட்டத் தலைவர்களுக்கு பறந்த மெசேஜ் – பின்னணி என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பற்றிய செய்திகள் பரபரப்பாக உலாவிக் கொண்டிருக்கும் நிலையில், நாளை காலை 11 மணிக்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜய் ஒரு வீடியோவின் வழி முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாகச் சொல்கிறார்கள் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள். TVK Vijay விக்கிரவாண்டி வி.சாலையில் செப்டம்பர் 23 ஆம் தேதி மாநாடு நடத்த வேண்டி அனுமதி கேட்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி த.வெ.க சார்பில் விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் மனு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து … Read more

யானை முகத்னோனுக்கு யானைகள் பூஜை: முதுமலையில் சதுர்த்தி விழாவை ரசித்த சுற்றுலாப் பயணிகள்

முதுமலை: முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகள் பூஜையிட விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்தது. விழாவை நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். விநாயகர் சதுர்த்தி நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகருக்காக கொழுக்கட்டை, சுண்டல் செய்து சிறப்பு பூஜைகளை மக்கள் செய்வர். நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானை முகனோனுக்கு யானைகளே பூஜை செய்வது சிறப்பு. முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின் போது அங்குள்ள விநாயகர் கோயிலில் … Read more

பாஜகவில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்திருந்தார். இந்நிலையில் பாஜகவில் அவர் இணைந்துள்ளார். கடந்த 2-ம் தேதி பாஜக உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அன்று பிரதமர் நரேந்திர மோடி தனது கட்சி உறுப்பினர் பதவியை புதுப்பித்தார். இந்த … Read more