‘தவறுக்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்கிறோம்’ – பிரிஜ் பூஷணின் குற்றச்சாட்டுக்கு காங். பதிலடி 

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சி தவறு செய்பவர்களுக்கு ஆதரவாக நிலைப்பாட்டை எடுக்கிறது. காங்கிரஸ் கட்சியோ தவறுகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறது என்று பாஜகவை காங்கிரஸின் பவன் கெரா சாடியுள்ளார். மல்யுத்த வீரர்களின் போராட்டம் பாஜகவுக்கு எதிரான காங்கிரஸின் அரசியல் சதி என்ற பிரிஜ் பூஷணின் கருத்துக்கு பதிலடியாக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ” யாரெல்லாம் தவறு செய்கிறார்களோ அவர்களுடன் பாஜக நிற்கிறது. … Read more

சுனிதா வில்லியம்சை விண்வெளிக்கு ஏற்றிச்சென்ற ஸ்டார் லைனர் விண்கலம் ஆளில்லாமல் பூமிக்கு திரும்பியது…

வாஷிங்டன்: விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு  ஜூன் 5;நந்தேதி நாசா ஆராய்ச்சியாளர்கள  சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை ஏற்றிச்சென்ற விண்கலம்  பழுதான நிலையில்,  இன்று, விண்வெளி வீரர்கள் இல்லாமல்  வெற்றிகரமாக  இன்று  பூமிக்கு திரும்பியது. நியூமெக்சிகோ ஒயிட் சேண்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பர் பகுதியில் பாராசூட் உதவியுடன் தரையிறக்கம் செய்யப்பட்டு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஜூன் 5ந்தேதி  சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் நாசா, ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் … Read more

கொல்கத்தா பெண் டாக்டர் கொலை.. சிபிஐ எழுப்பிய 10 கேள்விகள்.. சஞ்செய் ராய் பதில்.. வெளியான புதிய தகவல்

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்செய் ராயிடம் கடந்த மாதம் 25 ஆம் தேதி உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், சிபிஐ 10 கேள்விகள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் Source Link

தேவரா படத்தோட ட்ரெயிலர் ரிலீசுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்.. அதிரடி அப்டேட்டை வெளியிட்ட ஹீரோ!

ஐதராபாத்: டோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக உருவாகியுள்ள தேவரான படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டோலிவுட்டின் பிரபல இயக்குநரான கொரட்டாலா சிவா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையில் தேவரா படம் உருவாகியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த 3

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தை கட்டமைப்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சான் பிரான்சிஸ்கோ, தமிழ்நாடு 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி மாதம் அமெரிக்கா சென்றார். சான் பிரான்சிஸ்கோ மாநகரில் மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அடுத்து சிகாகோ நகரில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட், டிரில்லியன்ட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. 17 நாட்கள் … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: டெய்லர் பிரிட்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

நியூயார்க், ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர்களான டெய்லர் பிரிட்ஸ் – பிரான்சிஸ் தியாபோ நேருக்கு நேர் மல்லுக்கட்டினர். இருவரும் சரி சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டம் நீண்டு கொண்டே சென்றது. முதல் 4 செட்டுகளில் இருவரும் தலா 2 செட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து மிகுந்த … Read more

ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இருந்து வெளியேறியது இஸ்ரேல் படை

காசா, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியிலுள்ள ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் கடந்த 10 நாள்களாக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டிருந்த இஸ்ரேல் படையினா் அங்கிருந்து வெளியேறினா். இது குறித்து ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், இஸ்ரேல் படையினா் வெளியேறுவதற்கு முன்னா் அவா்களின் 10 நாள் தாக்குதல் நடவடிக்கையில் ஏராளமான கட்டுமானங்களை தரைமட்டமாகியிருந்தனா் என்று தெரிவித்தது. இது குறித்து பாலஸ்தீன வெளியுறுவத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசாவில் ஏற்படுத்திய நாசத்தை மேற்குக் கரை பகுதிக்கும் இஸ்ரேல் ராணுவம் … Read more

Mahavishnu: `வள்ளுவர் வழில வாழ்றவர இப்படி பண்றீங்களே!' – மஹாவிஷ்ணு கைதும் ஆதரவாளர்கள் ரியாக்‌ஷனும்!

அரசுப் பள்ளியில் பேசிய சர்ச்சைப் பேச்சால் பேசுபொருளாகியிருக்கும் மஹாவிஷ்ணுவை சென்னை விமானத்திலிருந்து சைதாப்பேட்டை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவிலிருந்து விமானம் மூலம் வந்த மஹாவிஷ்ணுவை அழைத்துச் செல்ல காவல்துறை தயாராக இருந்த நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் என சிலரும் விமான நிலையத்தில் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. Mahavishnu ‘குருஜி விமானத்தில் வந்துகொண்டிருக்கிறார். சென்னை வந்தவுடன் எல்லா சர்ச்சைகளுக்கும் விளக்கமளிப்பார்.’ என்பது போல ஒரு பதிவை மஹாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு … Read more

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நேற்று (செப்.6) மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (செப்.7) காலை 8.30 மணி அளவில் வடமேற்கு மற்றும் … Read more

தேசியக் கொடி, அரசியலமைப்பின் கீழ் ஜம்மு காஷ்மீர் வரலாற்று சிறப்புமிக்க தேர்தலை சந்திக்கிறது: அமித் ஷா

ஜம்மு: பிரதமர் மோடி தலைமையிலான அரசு சட்டப்பிரிவு 370 நீக்கிய பின்பு, தேசியக் கொடி மற்றும் அரசியலமைப்பின் கீழ் ஜம்மு காஷ்மீர் வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தலைச் சந்திக்க இருக்கிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதேவேளையில், காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி மீண்டும் பழைய முறையைக் கொண்டு வர முயல்வதாக அமித் … Read more