பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஒப்புதல்

புதுடெல்லி: மக்களவைக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதன்பிறகு 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று … Read more

லாலு மற்றும் தேஜஸ்விக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்

டெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு நில மோசடி வழக்கில் சம்மன் அளித்துள்ளது. ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர். கடந்த 2004-09 காலகட்டத்தில் இவ்வாறு நியமனம் பெற்றவர்கள், அதற்கு பதிலாக அவர்களது நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வரும் … Read more

அன்னபூரணி படத்திற்காக நயன்தாராவுக்கு விருதா.. விருதுகள் மேல நம்பிக்கையே போச்சு.. செய்யாறு பாலு வேதனை

சென்னை: சினிமாவின் உயரிய விருதுகளாக கருதப்படும் சைமா விருதுகள், 2024ம் ஆண்டிற்கான விருதுகளை வழங்கியுள்ளன. சிறந்த நடிகருக்கான விருதுகளை சிவகார்த்திகேயன் மற்றும் விக்ரம் பெற்றுள்ளனர். சிறந்த நடிகைக்காக விருதை நடிகை நயன்தாரா பெற்றுள்ளார். தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து அவர் இந்த விருதை பெற்றுள்ளார். கடந்த 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இந்த விருது

ம.பி.: சாலை விபத்தில் 7 பேர் பலி; 10 பேர் காயம்

ஜபல்பூர், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் சிஹோரா-மஜ்காவன் சாலையில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, லாரி ஒன்று திடீரென ஆட்டோ மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள். அவர்களில் 4 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் தவிர, 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிஹோரா பகுதியில் உள்ள முதன்மை சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து பற்றி அறிந்ததும், … Read more

நவாஸ்கனி வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

சென்னை: ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த தேர்தல் வழக்கி்ல் நவாஸ்கனி எம்பி மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலி்ல் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரான நவாஸ்கனி, தன்னை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தை விட ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் அதிகம் பெற்று … Read more

‘மம்தா செயல்பட்டிருந்தால் என் மகள் உயிரோடு இருந்திருப்பார்’ – பெண் மருத்துவர் தந்தை வேதனை

கொல்கத்தா: கடந்த 2021-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்திருந்தால் என் மகள் உயிரோடு இருந்திருப்பார் என்று கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவரின் தந்தை தெரிவித்துள்ளார். இந்த கொடூர கொலைக்கு நீதி கேட்டு போராடும் இளநிலை மருத்துவர்களை அவர், தனது குழந்தைகள் என்று அழைத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட தந்தை கூறுகையில், “மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அதன் பணியைச் செய்கிறது. … Read more

பாஜக நிர்வாகிகளின் ராகுல் காந்தி குறித்த வெறுப்பு பேச்சு : காங்கிரஸ் புகார்

டெல்லி பாஜக நிர்வாகிகளின் ராகுல் காந்தி குறித்த வெறுப்பு பேச்சு குறித்து காவல்துறையினரிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. சமீப காலமாக இந்திய அரசியல் களத்தில் விமர்சனங்கள் எல்லைமீறி போகின்றன. குற்றச்சாட்டுகளை சுமத்தும்போது, கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் மிரட்டும் வகையிலும், உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலும் பேசுகின்றனர். அண்மையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது மத்திய அரசையும், பா.ஜ.க.வையும் தாக்கி அவர் பேசியது சர்ச்சையானது. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இதற்கு … Read more

கெட்டப்பையன் சார் இந்த வேட்டையன்.. தீயாக உருவாகும் தலைவர் டைட்டில் சாங்.. அனிருத் ஆன் பீஸ்ட் மோட்!

சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது அனிருத் இசையில் அல்லது அனிருத் குரலில் ஒரு பாடல் ரிலீஸ் ஆனால்தான் அந்த பாடல் இன்றைய இளைஞர்கள் மத்தியில் எளிதில் சென்று அடைந்து விடுகின்றது. இந்த நிலையை எட்ட அவரும் தீயாக உழைத்துள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை. இவரது இசையில் அடுத்து வெளியாகவுள்ள படம் வேட்டையன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்