ஹரியானாவில் பாஜகவுக்கு நாக் அவுட்? காங்கிரசில் இணைகிறார் வினேஷ் போகத்! ரயில்வே பதவி ராஜினாமா

சண்டிகர்: ஹரியானா சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், பிரபல மல்யுத்த வீரர் வினேஷ் போகத் காங்கிரஸில் இணைவார் என்று பேசப்பட்டு வருகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக, ரயில்வே துறையில் தான் வகித்து வந்த பொறுப்பை வினேஷ் இன்று ராஜினாமா செய்திருக்கிறார். ஹரியானாவில் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது. Source Link

விஜய்க்கு ஜோடியா நடிக்க விரும்பல! கருப்பா இருந்தாரு! அவங்க அப்பா முன்னாடி! நடிகை பாலாம்பிகா வருத்தம்

சென்னை: நடிகர் விஜய் நடித்த “நாளைய தீர்ப்பு” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தபோது விஜய் கருப்பாக இருக்கிறார் என்று அவரோடு நடிப்பதற்கு விருப்பப்படவில்லை என்று நடிகை பாலாம்பிகா மனம் திறந்து பேசி இருக்கும் நிலையில் இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக பல திரைப்படங்களில் ஆரம்பத்தில் ஒருவரிடம் கதை சொல்லப்பட்டிருக்கும். ஆனால் அவர்கள்

கொல்கத்தா அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

கொல்கத்தா, மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.கே. கார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் 3வது மாடியில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் கடந்த மாதம் 9ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் (வயது 31) அரை நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் … Read more

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்; எந்த அணியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது – ரிஷப் பண்ட்

மும்பை, வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் டெஸ்ட் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரிலும், டி20 போட்டிகள் குவாலியர், டெல்லி மற்றும் ஐதராபாத்திலும் நடைபெற உள்ளன. இந்நிலையில், வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் … Read more

பிரான்சின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியர் நியமனம்

பாரீஸ், பிரக்ஸிட் பேச்சுவார்த்தையாளரான மைக்கேல் பார்னியரை பிரான்ஸ் புதிய பிரதமராக அதிபர் இமானுவேல் மேக்ரான் நியமித்துள்ளதாக எலிஸி அரண்மனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2016 – 2021 வரை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியவர் மைக்கேல் பார்னியர் (73). மைக்கேல் பார்னியர் புரூசெல்ஸ் நகரில் மிகவும் பிரபலமானவராக இருந்தாலும், பிரான்ஸ் நகரில் அவ்வளவு பிரபலமானவர் அல்ல என்று கூறப்படுகிறது. அவர் லெஸ் குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினராவார். இந்நிலையில் மே மாதத்தில் … Read more

குறைந்த விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில் வெளியிடப்பட்டிருக்கின்றது. S(O)+ வேரியண்ட் ரூ.7.86 லட்சத்திலும், S+ AMT வேரியண்ட் ரூ.8.44 லட்சம் விலையில் துவங்குகிறது. இந்தியாவின் மிகக் குறைவான விலையில் சன்ரூஃப் வழங்குகின்ற டாடா அல்ட்ரோஸ் காருக்கு அடுத்தபடியாக தற்பொழுது எக்ஸ்ட்ர் மாடல் இணைந்திருக்கின்றது. மேலும் இந்த மாடல் 83hp, 114Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை தொடர்ந்து பெற்றுக் கொள்கின்றது. … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில்  தேர்தல் சட்டவிதி மீறல்கள் தொடர்பாக இதுவரை முப்பத்தாறு முறைப்பாடுகள்  பதிவு

ஜனாதிபதி தேர்தல் 2024 இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 26.07.2024 அன்றிலிருந்து இன்று (செப்டம்பர் 06)  தினம் வரை  மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக இதுவரை 36 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமையப்பெற்றுள்ள தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகம் அறிவித்துள்ளது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர்  அசையும் அசையாச் சொத்துகளின் முறைகேடான பாவனை தொடர்பாக ஆறு முறைப்பாடுகளும் , அரச அலுவலர்கள் அரசியல் நடவடிக்கைகளில் … Read more

குடியாத்தம்: நர்சிங் மாணவிக்குப் பாலியல் தொல்லை… அரசு மருத்துவர் கைது!

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள ஓர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், குடியாத்தம் பகுதியிலுள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயில்கிறார். இந்தக் கல்லூரியிலிருந்து அவ்வப்போது சில மாணவிகளை பயிற்சி பெறுவதற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். சம்பந்தப்பட்ட மாணவியும் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். மருத்துவர் பாபு கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி மதியம் 1 மணியளவில், பயிற்சி வருகைக்கான கையெழுத்து பெறுவதற்காக அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவரான பாபு என்பவரை … Read more

திருச்சி: ஹைடெக் பார் திறப்பதை எதிர்த்து விவசாய சங்கத் தலைவர் தனி ஒருவராக உண்ணாவிரதம்

திருச்சி: ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத் தலைவர் உதவியாளருடன் தனி ஒருவராக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சோமரசம்பேட்டை – அல்லித்துறை இடையே உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் பாலம் அருகே புதிதாக மனமகிழ் மன்றம் என்ற பெயரில் ‘எஃப்.எல் -2 ஹைடெக் பார்’ திறக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் இன்று காலை 6 … Read more

“நாம் கடவுளாவது குறித்து மக்களே முடிவு செய்வார்கள்” – ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு மோகன் பாகவத் அறிவுரை

புனே: “நாம் கடவுளாக மாற வேண்டுமா, வேண்டாமா என்று மக்கள் தான் முடிவு செய்வார்கள். நாம் கடவுளாகி விட்டோம் என்று நாமே பிரகடனப்படுத்த முடியாது” என்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். புனேவில் நடந்த நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மணிப்பூரில் குழந்தைகளின் கல்விக்காக பணியாற்றிய பைய்யாஜி என்று அழைக்கப்பட்ட ஷங்கர் தினகர் கனே என்பவரின் பணிகளை நினைவு கூறும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் கலந்து … Read more