தொடர்ந்து 173 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 173 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 173 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

விஜய் அண்ணா மீது அன்பு.. அனைவருக்கும் நன்றிகள்.. GOAT பற்றி எமோஷனலாக போஸ்ட் போட்ட யுவன்

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் GOAT திரைப்படம் இன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால் விஜய், வெங்கட் பிரபு என ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது. முக்கியமாக பாடல்கள் வெளியானபோது பெரும் விமர்சனங்களை சந்தித்த யுவனையும் ரசிகர்கள் இப்போது பாராட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் அவர் எமோஷனலாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். ஏஜிஎஸ்

அதானி விஷயத்தில் எல்லாம் சரியாகத்தான் நடக்கிறதா?

நம் நாட்டில் சட்டரீதியான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதற்கு முக்கியமான காரணமே, எந்தவொரு தனிநபருக்கோ, தொழில் நிறுவனத்துக்கோ ஒரு தலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்கப்படாமல் நேர்மையாக நடக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (NCLT) நடவடிக்கைகளைப் பார்த்தால், குறிப்பிட்ட ஒரு நிறுவனமே திரும்பத் திரும்ப பயனடைகிறதோ என்கிற கேள்வியே அனைவருக்கும் எழுகிறது. இந்தத் தீர்ப்பாயம் நிறுவப்பட்டதன் நோக்கம் என்ன? திவால் நிலைக்குச் சென்ற நிறுவனங்களை நல்ல விலைக்கு விற்று, வங்கிகளுக்குச் சேர வேண்டிய கடனைத் … Read more

செப். 16-க்கு பதில் 17-ம் தேதி மீலாது நபி: தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: மீலாது நபி செப். 16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். முகமது நபியின் பிறந்த நாளை மீலாது நபி என இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகி்ன்றனர். அன்று புனித நூலான குரானை வாசிப்பதை முக்கியமான கடமையாக கொண்டுள்ளனர். மேலும், ஏழை மக்களுக்கு உணவு, உடைகளையும் தானமாக வழங்குவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு செப்.16-ம் தேதி மீலாது நபி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. … Read more

போக்குவரத்து விதிமீறல் தொடர்கிறது; அபராத தொகையை எவ்வளவுதான் உயர்த்துவது? – நிதின் கட்கரி வேதனை

புதுடெல்லி: உலக பாதுகாப்பு மாநாடுடெல்லியில் கடந்த 2-ம் தேதிமுதல் 4-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி பங்கேற்று பேசியதாவது: இந்தியாவில் சாலைகளில் விதிமீறல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. விதிகளைமீறுபவர்களுக்கு எவ்வளவு தான் அபராதம் விதிப்பது? அபராதத் தொகையை அரசுஉயர்த்திக் கொண்டே போகமுடியாது. இதுதான் பிரச்சினை. இந்த சிக்கலுக்கு தீர்வுகாண, சாலைகளைப் பயன்படுத்துவோரின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம். சாலை விதிகளை உறுதியாக அமல்படுத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறோம். … Read more

உக்ரைன்-ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் : புதின்

சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உக்ரைன்-ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்யலாம் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு இதுவரை எந்த ஒரு பலனையும் அளிக்காத நிலையில் ரஷ்ய அதிபரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் மூன்றாண்டுகளாக நீடித்து வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி முதல் முறையாக இந்த ஆண்டு ஜூலை மாதம் ரஷ்யா சென்றார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் … Read more

GOAT Mistakes: கோட் படத்தில் வெங்கட் பிரபு கோட்டை விட்டது எங்கே?.. நம்பியார் காலத்து வில்லன்!

       சென்னை: லியோ படத்தில் நரபலி கொடுக்கும் காட்சிகள் இரண்டாம் பாதியில் இடம்பெற்றிருந்த நிலையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. அந்த நரபலி கான்செப்ட்டே ரஜினிகாந்தின் கழுகு பட காலத்து கதை என கலாய்க்கப்பட்டது. ஆனால், கோட் படத்தில் வில்லன் போர்ஷனை பார்த்தால் நம்பியார் காலத்து கதையாக உருவாகி இருக்கிறது. சர்வதேச படமான ஓல்டு பாய்

‘ட்ரில்லியன்ட்’ நிறுவனம் சார்பில் தமிழகத்தில் ₹2,000 கோடியில் உற்பத்தி ஆலை: சிகாகோவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் வளர்ச்சி, உலகளாவிய உதவி மையம் மற்றும் உற்பத்தி மையம் அமைக்க அமெரிக்காவின் ‘ட்ரில்லியன்ட்’ நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அதிக அளவில் நிறுவனங்களை தொடங்கவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது, சான் பிரான்சிஸ்கோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், நோக்கியா உள்ளிட்ட 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் … Read more

‘காங்கிரஸிலும் பாலியல் சுரண்டல்’ – புகார் கூறிய பெண் பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்    

திருவனந்தபுரம்: கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிமி ரோஸ் பெல் ஜான் தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்குதான் முக்கிய பதவி வழங்கப்படுகிறது. திறமையானவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். கேரள திரையுலகில் நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல் போன்ற நிலைதான் காங்கிரஸ் கட்சியிலும் நிலவுகிறது. கண்ணியமான பெண்கள் இந்தக் கட்சியில் பணியாற்ற முடியாது” என தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் பிரமுகர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் சிமி ரோஸ் மீது … Read more

தமிழக வெற்றி கழகத்தை தடுப்பது திமுகவின் நோக்கமில்லை : அமைச்ச்ர் ஏ வ வேலு

மதுரை தமிழக வெற்றிக் கழகத்தை தடுப்பது திமுகவின் நோக்கமில்லை என அமைசசர் எ வ வேலு தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டுக்கு அனுமதி அளிக்க காவல்துறையினர் பல்வேறு விளக்கம் கேட்டுள்ளனர்.  இதையொட்டி எதிர்க்கட்சிகள் நடிகர் விஜய் கட்சிக்கு ஆளும் திமுக தேவையில்லாமல் தொல்லை அளிப்பதாக கூறி வருகின்றனர்/ இன்று மதுரையில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் “தமிழகத்தில் புதிய கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை. நடிகர் விஜய்யின் … Read more