பாரம்பரிய முறைப்படி நடந்த தங்கை திருமணம்.. முன்னின்று நடத்திய சாய் பல்லவி

சென்னை: பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் சாய் பல்லவி ஏற்றிருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை அடுத்து தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இப்போது

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜானிக் சினெர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி ) – முன்னணி வீரர் மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சினெர் 6-2,1-6, 6-1,6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். … Read more

அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் நியமனத்திற்கான விண்ணப்பம் கோரல்…

அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியலமைப்பு 54 ஆவது யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு யாராவது பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் அல்லது உள்ளூராட்சி நிறுவன உறுப்பினராயின் அவ்வாறானவர்கள் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அங்கத்தவராவதற்கான நியமனத்திற்காக தகுதி பெற முடியாது. அவ்வாறே ஆணைக்குழுவின் அங்கத்தவராக நியமனம் பெறுவதற்கு அரசாங்க சேவையின் அரசாங்க அதிகாரி ஒருவர் அல்லது நீதிமன்ற அதிகாரி அல்லது அரச … Read more

ஹரியானா பாஜக-வில் கிளம்பிய உட்கட்சிப்பூசல்; தேர்தலில் சீட் கொடுக்காததால் வெளியேறிய அமைச்சர், MLA!

ஹரியானாவில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்ட மறுநாளே, தங்களுக்கு சீட் மறுக்கப்பட்டதாக அமைச்சர், எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேறிய சம்பவங்கள் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசலை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது. 2014 முதல் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ஹரியானாவில் அக்டோபர் 5-ம் தேதி, மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கவிருக்கிறது. ஹரியானா பாஜக முதல்வர் நயாப் சிங் சைனி இதனை … Read more

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் விலங்குகளுக்கு பாதிப்பா? – வனத் துறை அறிக்கை அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால், தமிழக பகுதிக்கு நீர் வரத்து குறையும்போது, அப்பகுதியில் வாழும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வனத்துறை தலைவருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் அருகே உள்ள பெருகுடா பகுதியில் பாம்பாறின் (அமராவதி ஆறு) துணை ஆறுகளில் ஒன்றான சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. … Read more

“மோடி மன்னிப்புக் கேட்க வேண்டியது சத்ரபதி சிவாஜியிடம் மட்டும் அல்ல…” – மகாராஷ்டிராவில் ராகுல் கொந்தளிப்பு

சாங்லி: நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பாஜக வெறுப்பை பரப்பி வருகிறது என்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சிலை உடைந்த விவகாரம் குறித்து கொந்தளித்த அவர், “சிவாஜி மகாராஜை பிரதமர் மோடி அவமதித்துள்ளார். அவர் சிவாஜி மகாராஜிடம் மட்டுமல்ல, மகாராஷ்டிராவின் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார். மகாராஷ்டிராவின் சாங்லி நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “மகாராஷ்டிரா ஒரு முற்போக்கான மாநிலம். பல்வேறு நபர்கள் இங்கு வேலை செய்து … Read more

“இந்தியாவில் இருக்கும் வரை ஹசீனா அமைதியாக இருக்க வேண்டும்” – வங்கதேச தலைமை ஆலோசகர்

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு கோரும் வரை அவர் அங்கே அமைதியாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள முகம்மது யூனுஸ், “முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் இருந்து கொண்டு அரசியல் கருத்துகளை வெளியிடுவது, இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவை பாதிக்கும். ஷேக் ஹசீனாவை, வங்கதேசத்துக்கு நாடு கடத்தக் கோரும் வரை, அவரை தங்கள் நாட்டில் … Read more

சகுனி பட நடிகை பிரணிதாவிற்கு 2வது குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா?

Latest News Pranitha Subhash Baby : சகுனி படம் மூலம் பிரபலமான நடிகை பிரணிதாவிற்கு குழந்தை பிறந்திருக்கிறது. அது என்ன குழந்தை தெரியுமா?   

2026இல் அதிமுக உடன் இணக்கம்? அண்ணாமலை இல்லாத நேரத்தில்… நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்

Tamil Nadu Latest News Updates: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. 

Cibi Chakravarthy: 'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி திருமணம்; வாழ்த்திய திரைப் பிரபலங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘டான்’. இன்றைய தேதி வரைக்கு இத்திரைப்படம்தான் சிவகார்த்திகேயன் கரியரில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாகவும் இருக்கிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயிடன் உதவி இயக்குநராக இருந்தவர். இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்கும் வர்ஷினி என்பவருக்கும் நேற்றைய தினம் திருமணம் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்பு சிபி சக்ரவர்த்தி சிவ கார்த்திகேயன் உட்பட தன்னுடைய நண்பர்கள் சிலருக்கு வைத்த … Read more