காயத்தால் விலகும் விக்கெட் கீப்பர்? சஞ்சு சாம்சனுக்கு கிடைக்கப்போகும் சான்ஸ்

Duleep Trophy 2024, Ishan Kishan Injury: இந்திய அணி (Team India) கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி அன்று இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியது. அதன்பின் நீண்ட இடைவெளியில் இருக்கும் இந்திய அணிக்கு செப். 19ஆம் தேதியில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதற்கு முன் உள்ளூர் தொடரான துலிப் டிராபி நாளை (செப். 5) தொடங்க உள்ளது.  ஆந்திராவின் அனந்தபூரிலும், பெங்களூருவிலும் இந்த தொடர் நடைபெறுகிறது. … Read more

GOAT Cameo: 'அஜித், தோனி ரெஃபரன்ஸ்; SKவின் கேமியோ; AI விஜயகாந்த்' – கோட் ஸ்பெஷல் என்னென்ன?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கோட் திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வரவிருக்கிறது. வழக்கமான விஜய் படங்களை விட இந்தப் படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு நிறைய சர்ப்ரைஸ்களை ஒளித்து வைத்திருக்கிறார். விஜய்யின் சமகால போட்டியாளராகப் பார்க்கப்படும் அஜித்தின் ரெஃபரன்ஸ், அடுத்த தலைமுறையின் முன்னணி கதாநாயகனாகப் பார்க்கப்படும் சிவகார்த்திகேயனின் கேமியோ, சிங்க நடைபோடும் தோனியின் சர்ப்ரைஸ் என ரசிகர்கள் குதூகலிக்கப் படத்தில் எக்கச்சக்கமான விஷயங்கள் இருப்பதாகத் தெரிகிறது. அவற்றைப் பற்றிய தொகுப்பு இங்கே. டீ … Read more

கங்கனா ரனாவத் நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்பட ரிலீஸ் ஒரு வாரம் தள்ளிப்போவதால் எந்த மாற்றமும் ஏற்படாது : மும்பை நீதிமன்றம்

கங்கனா ரனாவத் நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் செப்டம்பர் 6ம் தேதி ரிலீசாக தயாராகி வருவதை அடுத்து சென்சார் சான்றிதழை உடனடியாக வழங்கக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜீ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கொலபாவால மற்றும் பிர்தோஷ் பூனாவாலா அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. ஜீ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வெங்கடேஷ் தோண்ட், “கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் செப்டம்பர் 6ம் தேதி ரிலீஸாவதற்கு தயாராகி … Read more

ஜம்மு காஷ்மீர் 'மாநில அந்தஸ்தை' இந்தியா கூட்டணி மீட்டெடுக்கும்.. பிரசாரக் கூட்டத்தில் ராகுல் உறுதி!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பறிக்கப்பட்ட ‘மாநில அந்தஸ்தை’ காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி- இடதுசாரிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி மீட்டுத் தரும் என்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். மேலும் 1947-ம் ஆண்டே ஒழிக்கப்பட்டுவிட்ட மன்னரைப் போல ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தற்போது Source Link

GOAT Free Tickets: அமைச்சரின் வாயை அடைத்த ரசிகர்கள்! கோட் படத்தின் டிக்கெட்டை இலவசமாக வழங்கி சர்ப்ரைஸ்

கும்பகோணம்: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் படம் நாளை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ்., எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகளை உலகநாடுகள் முதல் உள்ளூர் வரை அர்ச்சனா கல்பாத்தி சிறப்பாகவே செய்துள்ளார். தாமாகவே முன் சென்று

கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா? சித்தராமையா பதில்

பெங்களூரு, கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக் கவிழுமா? என்பது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா பதிலளித்துள்ளாா். இதுகுறித்து மைசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஊழலின் தாத்தா பாஜகதான். 40 சதவீத ஊழல் என்று பாஜக ஆட்சியைத்தான் குறிப்பிட்டோம். முந்தைய பாஜக ஆட்சியில் ஒப்பந்தப் பணிகளுக்கு 40 சதவீத கமிஷன் கேட்டதாக கா்நாடக ஒப்பந்ததாரா் சங்கத் தலைவா் டி.கெம்பண்ணா குற்றம் சாட்டியிருந்தாா். காங்கிரஸ் அரசு கவிழும் என்று மத்திய தொழில் துறை மந்திரி எச்.டி.குமாரசாமி கூறியிருக்கிறாா். மத்திய மந்திரியாக எச்.டி. … Read more

பாரா ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் விவரம்

பாரீஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஏறக்குறைய 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்துகிறார்கள். இந்த போட்டி தொடர் செப்டம்பர் 8-ம் தேதி உடன் முடிவடைய உள்ளது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 19வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் பாரா ஒலிம்பிக் தொடரில் இன்று இந்திய வீரர் மற்றும் … Read more

குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடை – சுவீடன் அரசு உத்தரவு

ஸ்டாக்ஹோம், இன்றைய நவீன உலகில் செல்போன் என்பது பலருக்கும் ஆறாவது விரலாகி விட்டது. தற்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் செல்போனை பயன்படுத்துகின்றனர். அதேசமயம் செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு மனச்சோர்வு, கவனக்குறைவு, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனால் சுவீடனில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன், டி.வி. போன்றவற்றை பார்க்க பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. மேலும் 2 முதல் 5 வயது வரை உள்ள … Read more

கொழும்பு மாவட்டத்தில் 2024 ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளன…

கொழும்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான பிரசன்ன கிணிகே கொழும்பு மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு (04) இடம்பெற்றது. இதன் போது உரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர்; தற்போது கொழும்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார். செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி காலை 7 மணியிலிருந்து நான்கு மணி வரை தேர்தலுக்கு அவசியமான சகல அதிகாரிகளையும் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்துவதற்காக பயிற்றுவிக்கும் செயற்பாடு நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. அத்துடன் … Read more

காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா; ஹரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டி..!

சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுவரை சென்ற இந்திய மல்யுத்த வீராங்கணை வினேஷ் போகத் கடைசி நேரத்தில் உடல் எடையை காரணம் காட்டி போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் பதக்கம் பெறுவார் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது இந்தியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து நாடு திரும்பிய போது ஹரியானா காங்கிரஸ் எம்.பி.தீபேந்தர் வரவேற்றார். அதிலிருந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார் … Read more