டெல்லி-விசாகப்பட்டினம் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி, டெல்லியில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு நேற்று இரவு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் உடனடியாக விசாகப்பட்டினம் விமான நிலைய அதிகாரிகளிடம் தகவலை கூறி எச்சரிக்கை செய்தனர். டெல்லியில் இருந்து சென்ற விமானத்தில் 107 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், அனைத்து பயணிகளையும் உடனடியாக வெளியேற்றிவிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை தீவிரமாக சோதனை செய்தனர். … Read more

A/L மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியானது

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.exams.gov.lk இணையத்தளங்களுக்குச் சென்று பெறுபேறுகளைப் பார்வையிடலாம்; என பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, குறித்த பெறுபேறுகள் தொடர்பாக 0112 784 208 – 0112 784 537 – 0112 785 922 மற்றும் 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் திணைக்களம் … Read more

GOAT Vijay-ன் 3.10 கோடி Luxury Car-ல் என்ன ஸ்பெஷல்?! Lexus LM 350h

Join us as we explore the luxurious Lexus LM 350h, a car recently purchased by Actor Vijay. In this video, we will see what makes this car stand out in the luxury segment. We’ll cover its powerful engine, impressive safety features, and the ultimate comfort it offers. Watch the full video for a detailed breakdown … Read more

முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தடை பெற வேண்டும்: ராமதாஸ், டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுநடத்ததுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தடை பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள அரசின் கோரிக்கையை ஏற்று, முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்புகுறித்து ஆய்வு நடத்த, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழு ஆணையிட்டுள்ளது. அணையை வலுப்படுத்தி, நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தீர்ப்பு இன்னும் செயல்படுத்தப்படாத நிலையில், பாதுகாப்பு தொடர்பாக … Read more

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்கு வங்க சட்டப்பேரவையில் மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்

கொல்கத்தா: பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா, மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு தழுவிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில், பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற ஏதுவாக … Read more

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் பலி

கீவ்: உக்ரைனின் மத்திய பகுதியைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் போர் வீரர்கள் உள்பட 51 பேர் பலியாகினர். 270-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது குறித்து உக்ரைன் ராணுவம் அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “உக்ரைனின் மத்தியப் பகுதியில் உள்ள போல்டாவா பகுதியை நோக்கி ரஷ்யா திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி எழுப்பியும் கூட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல போதிய அவகாசம் இல்லாமல் போமது. ஏவுகணை தாக்குதல் நடந்த … Read more

குரூப்-4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்! டிஎன்பிஎஸ்சி தகவல்..

சென்னை: குரூப்-4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான  டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசுக்கு தேவையான காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி, தேர்ச்சி பெற்றவர்களை நியமனம் செய்து வருகிறது. அன்படி,  தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து … Read more

வௌ்ளத்தில் மிதக்கும் ஆந்திரா.. நேரில் சென்று பார்வையிடாத பவன் கல்யாண்! காரணம் இதுதான் என விளக்கம்

அமராவதி: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்து வருகிறது. மழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்கு அவர் Source Link

A.R. Rahman: சிங்கப்பூரில் ரசிகர்களை ஏங்க வைத்த ரஹ்மான்.. இணையத்தில் தீயாக பரவும் வீடியோ!

சிங்கப்பூர்: தமிழ் சினிமாவைக் கடந்து தென்னிந்திய சினிமாவின் முகமாகவும், அதன் பின்னர் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் முகமாகவும் இன்றைக்கு உலகம் முழுவதும் அறியப்படுபவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். இவரது இசைக்கு இந்தியாவில் மட்டும் இல்லாமல் நாடுகள் கடந்து, கண்டங்கள் கடந்தும் ரசிகர்கள் உள்ளனர். உலகின் எந்த மூலைக்குச் சென்று ரஹ்மான் இசைக் கச்சேரி நடத்தினாலும் இவரது இசையைக்

Nivin Pauly: "எனக்காக நான்தான் பேச வேண்டும்…" – பாலியல் வழக்கு குறித்து நிவின் பாலி சொல்வதென்ன?

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து நடிகைகள் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இதன் அடிப்படையில் சினிமா நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டு வருகிறது. பெண்கள் மட்டும் அல்ல இளைஞர் ஒருவரும் இயக்குநர் ரஞ்சித் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாகப் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகர் நிவின் பாலி பாலியல் தொந்தரவு … Read more