தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) ஆரம்பமாகி செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மேலதிக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் தபால் வாக்களிப்பில் கலந்து … Read more

Siragadikka Aasai: மனைவி கையால் விருது; நண்பன் வெற்றி வசந்த்தின் கைதட்டல்; நெகிழ்ந்த நவீன் குமார்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சின்ன மருமகள்’. இந்தத் தொடரில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பவர் நவீன். இவருக்கு விஜய் டெலி அவார்ட்ஸ் விருதுகள் நிகழ்வில் `Best Find Of The Year’கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை அவருடைய மனைவியும், செய்தி வாசிப்பாளருமான கண்மணி வழங்கி இருந்தார். இந்நிலையில் நவீனை நமது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம். நவீன் “நம்ம இப்பதான் இங்க வந்திருக்கோம். நமக்கு இந்த வருஷமே விருதெல்லாம் கிடைக்காதுன்னு தான் நினைச்சேன். எதிர்பாராம கிடைச்ச விருதுதான் இது. அதுவும் என் மனைவி வேறொரு … Read more

பாராலிம்பிக்ஸில் வெண்கலம்: மாரியப்பன் தங்கவேலுவுக்கு அன்புமணி வாழ்த்து

சென்னை: பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு வாழ்த்துகள். அவர் மேலும், மேலும் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 ஆட்டத்தில் 1.85 மீ. உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் … Read more

ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை தொடரும் என ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை: ஹெலிகாப்டரில் உணவு, மருந்து விநியோகம்

விஜயவாடா: ஆந்திரா, தெலங்கானாவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், 2 மாநிலங்களிலும் பல பகுதிகளில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம்உணவு, மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த 3 நாட்களாக பெய்து வந்த கன மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், ஆந்திராவில் விஜயவாடா நகரத்தை வெள்ளம் சூழ்ந்தது. பிரகாசம் அணையின் மதகு, வெள்ளத்தில் சேதமடைந்ததால் அணையில் … Read more

வங்கதேச டெஸ்ட் தொடரில் காபா டெஸ்ட் நாயகனுக்கு இடம் கொடுக்க கம்பீர், ரோகித் முடிவு

இந்திய கிரிக்கெட் அணி செப்டம்பர் 19 முதல் பங்களாதேஷுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி, அதன்பிறகு விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். இந்த தொடருக்கான இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது. இந்திய அணியில் யார் யார் இடம்பெற உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், ரிஷப் பந்த் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட … Read more

Vidamuyarchi: அஜித்தின் 'விடாமுயற்சி'… தீபாவளியா டிசம்பர் 20-ஆ? | சிங்கிள், பட ரிலீஸ் அப்டேட்!

அஜித்தின் ‘விடா முயற்சி’ படப்பிடிப்பு நிறைவு பெற்றதால், அதன் ரிலீஸ் தேதி அறிவிப்பும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. அல்லது டிசம்பர் 20-ம் தேதி திரைக்கு வரும் என்ற பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் பரவுகிறது. மகிழ்திருமேனி, அஜித் அஜித்தின் திரைப் பயணத்தில் இந்த ஆண்டு, கொஞ்சம் ஸ்பெஷல் ஆண்டு. காரணம், கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்தது போல, இந்தாண்டில் அவர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ‘விடா … Read more

தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம்! அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு…

சென்னை: தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் விதித்துள்ள இலங்கை அரசின் வாழ்வாதார ஒழிப்பு சதிக்கு மத்திய அரசு உடனே முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரில் 12 பேருக்கு தலா ரூ.3.5 கோடி (இந்திய … Read more

விலையில்லா சைக்கிளையும் விடாத அரசியல்.. ராஜஸ்தானில் காங்கிரசுக்கு பதிலடியாக பாஜக செய்ததை பாருங்க!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில் 9 ம்வகுப்பு மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிளின் கருப்பு நிறத்தை காவி நிறமாக மாற்றம் செய்து ஆளும் பாஜக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி காவி என்பது வீரத்தின் அடையாளம், தேசபக்தர்கள் இந்த நிற உடையை அணிந்து தான் போராட்டம் நடத்தினர் என்று கல்வித்துறை அமைச்சர் மதன் திலாவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் Source Link

விஜய், அஜித், சூர்யா படங்களை தயாரித்த தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்.. சூர்யா நேரில் அஞ்சலி

சென்னை: விஜய்யின் கண்ணுக்குள் நிலவு, அஜித்தின் ஆழ்வார், சூர்யாவின் வேல், சியான் விக்ரமின் தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் மோகன் நடராஜன் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71. ராஜகாளியம்மன் மூவிஸ் நிறுவனத்தை நடத்தி வந்தவர் தயாரிப்பாளர் மோகன் நடராஜன். பல வெற்றிப் படங்களை தயாரித்து தமிழ் சினிமாவுக்கும்

புனேவில் மொபைல் ஹாட்ஸ்பாட் பகிர மறுத்த நபர் குத்திக்கொலை

மும்பை, மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள ஹதப்சர் பகுதியில், நிதி நிறுவன ஏஜெண்ட் ராமசந்திர குல்கர்னி(47) என்ற நபரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் மொபைல் ஹாட்ஸ்பாட்டை பகிருமாறு கேட்டுள்ளனர். அடையாளம் தெரியாத நபர்களுக்கு ஹாட்ஸ்பாட்டை பகிர ராமசந்திர குல்கர்னி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின்போது அந்த இளைஞர்கள் ராமசந்திர குல்கர்னியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக … Read more