மோகன் நடராஜன் மறைவு: "தயாரிப்பாளராக இல்லாமல் ஒரு தந்தையைப் போல் இருந்தார்" – 'ஆழ்வார்' பட இயக்குநர்

விஜய்யின் 25வது படமான ‘கண்ணுக்குள் நிலவு’, அஜித்தின் ‘ஆழ்வார்’, சூர்யா இரண்டு வேடங்களில் நடித்த ‘வேல்’ உள்படப் பல படங்களைத் தயாரித்தவர் மோகன் நடராஜன். வயது மூப்பின் காரணமாகச் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். அவருக்கு வயது 71. பி.வாசு அஞ்சலி மறைந்த மோகன் நடராஜன், ராஜகாளியம்மன் மூவிஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் ‘வேலை கிடைச்சிருச்சு’, ‘கிழக்குக்கரை’, ‘கோட்டைவாசல்’, சுரேஷ் நடித்த ‘பூக்களைப் பறிக்காதீர்கள்’, விஜயகாந்த் நடித்த ‘பூ மழை பொழியுது’, பி.வாசுவின், … Read more

எஸ்சி/ எஸ்டி மாணாக்கர்களுக்கு யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி! தாட்கோ அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள எஸ்சி/ எஸ்டி மாணாக்க;ரகள்,  யுபிஎஸ்சி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இலவச பயிற்சி வழங்க உள்ளதாக  தாட்கோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த 100 மாணவர்களுக்கு யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சியை வழங்குகிறது. இப்பயிற்சியை பெற விரும்புவோர் தாட்கோவின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு … Read more

\"கைது செய்ய கிடைத்த நல்ல சான்ஸ்\".. ராஜமரியாதையுடன் புதினை தப்பவைத்த மங்கோலியா! பரபரப்பு சம்பவம்

உலான்பாதர்: உக்ரைன் மீதான போர் குற்றம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த வாரண்ட் பிறப்பித்து ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் புதின் கைது செய்யப்படவில்லை. இத்தகைய சூழலில் தான் மங்கோலியா சென்ற விளாடிமிர் புதினை கைது செய்ய நல்ல வாய்ப்பு அமைந்தது. ஆனால் அதனை மங்கோலியா செய்யாமல் அவருக்கு Source Link

அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அழைக்கும் விஷயம்.. ரஜினியின் மனைவி, மகளிடம் சென்று கேளுங்கள் – விசித்ரா காட்டம்

சென்னை: மலையாள திரையுலகுக்கு பெரும் தலைவலியாக வந்திருக்கிறது ஹேமா கமிட்டி அறிக்கை. ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி பெண் கலைஞர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டிருப்பதாக பலர் கூறியிருக்கிறார். இதனையடுத்து அந்தத் துறையில் இருக்கும் முக்கியமான இயக்குநர்கள், நடிகர்களின் தலைகள் உருள ஆரம்பித்திருக்கின்றன. சூழல் இப்படி இருக்க தமிழ், மலையாளம் உள்ளிட்ட

புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை – மனுக்களை மாலையாக அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு உருண்டு வந்த நபர்

போபால், மத்தியபிரதேச மாநிலம் நிமுச் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ் பிரஜாபதி. இவர் தனது கிராம பஞ்சாயத்து தலைவரான கன்கரியா என்பவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பஞ்சாயத்து தலைவர் கடந்த 6 மாதங்களாக ஊழலில் ஈடுபடுவதாக முகேஷ் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் கன்கரியா மீது பல முறை புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் விரக்தி அடைந்த முகேஷ் நேற்று கலெக்டர் … Read more

பாரா ஒலிம்பிக்: மாரியப்பன் தங்கவேலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பாரீஸ், மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி63 பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். அவர் 1.85 மீட்டர் உயரம் தாண்டி அசத்தியுள்ளார். பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்று மாரியப்பன் சாதனை … Read more

தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் – இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு, கடந்த மாதம் 5ம் தேதி 3 படகுகளுடன் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 மீனவர்கள் மன்னார் வடமேற்கு குதிரை மலை கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்படித்ததாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அதிக குதிரை திறன் கொண்ட இயந்திரங்களை பயன்படுத்தி மீன்வளத்தை அழித்ததாகவும் கூடுதலாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 20ம் தேதி வரை இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த 20ம் தேதி மீண்டும் இந்த வழக்கை … Read more

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) ஆரம்பமாகி செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மேலதிக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் தபால் வாக்களிப்பில் கலந்து … Read more

Siragadikka Aasai: மனைவி கையால் விருது; நண்பன் வெற்றி வசந்த்தின் கைதட்டல்; நெகிழ்ந்த நவீன் குமார்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சின்ன மருமகள்’. இந்தத் தொடரில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பவர் நவீன். இவருக்கு விஜய் டெலி அவார்ட்ஸ் விருதுகள் நிகழ்வில் `Best Find Of The Year’கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை அவருடைய மனைவியும், செய்தி வாசிப்பாளருமான கண்மணி வழங்கி இருந்தார். இந்நிலையில் நவீனை நமது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம். நவீன் “நம்ம இப்பதான் இங்க வந்திருக்கோம். நமக்கு இந்த வருஷமே விருதெல்லாம் கிடைக்காதுன்னு தான் நினைச்சேன். எதிர்பாராம கிடைச்ச விருதுதான் இது. அதுவும் என் மனைவி வேறொரு … Read more

பாராலிம்பிக்ஸில் வெண்கலம்: மாரியப்பன் தங்கவேலுவுக்கு அன்புமணி வாழ்த்து

சென்னை: பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு வாழ்த்துகள். அவர் மேலும், மேலும் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 ஆட்டத்தில் 1.85 மீ. உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் … Read more