பாரா ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் விவரம்

பாரீஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஏறக்குறைய 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்துகிறார்கள். இந்த போட்டி தொடர் செப்டம்பர் 8-ம் தேதி உடன் முடிவடைய உள்ளது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 19வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் பாரா ஒலிம்பிக் தொடரில் இன்று இந்திய வீரர் மற்றும் … Read more

குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடை – சுவீடன் அரசு உத்தரவு

ஸ்டாக்ஹோம், இன்றைய நவீன உலகில் செல்போன் என்பது பலருக்கும் ஆறாவது விரலாகி விட்டது. தற்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் செல்போனை பயன்படுத்துகின்றனர். அதேசமயம் செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு மனச்சோர்வு, கவனக்குறைவு, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனால் சுவீடனில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன், டி.வி. போன்றவற்றை பார்க்க பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. மேலும் 2 முதல் 5 வயது வரை உள்ள … Read more

கொழும்பு மாவட்டத்தில் 2024 ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளன…

கொழும்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான பிரசன்ன கிணிகே கொழும்பு மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு (04) இடம்பெற்றது. இதன் போது உரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர்; தற்போது கொழும்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார். செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி காலை 7 மணியிலிருந்து நான்கு மணி வரை தேர்தலுக்கு அவசியமான சகல அதிகாரிகளையும் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்துவதற்காக பயிற்றுவிக்கும் செயற்பாடு நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. அத்துடன் … Read more

காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா; ஹரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டி..!

சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுவரை சென்ற இந்திய மல்யுத்த வீராங்கணை வினேஷ் போகத் கடைசி நேரத்தில் உடல் எடையை காரணம் காட்டி போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் பதக்கம் பெறுவார் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது இந்தியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து நாடு திரும்பிய போது ஹரியானா காங்கிரஸ் எம்.பி.தீபேந்தர் வரவேற்றார். அதிலிருந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார் … Read more

சிறிய ஆவின் பாலகம் நடத்துவோர் மாதத்துக்கு ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய அறிவுறுத்தல்

சென்னை: சிறிய ஆவின் பாலகம் நடத்துவோரை மாதத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்ய அறிவுறுத்தி வருகிறோம் என்று ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. ஆவின் நிறுவனம், விவசாயிகளிடம் இருந்து தினசரி சராசரியாக 35 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை, ஊதா, நீல நிற உறைகளில் (பாக்கெட்டுகளில்) … Read more

“மணிப்பூர் மக்களை பாதுகாப்பதில் பிரதமர் மோடி தோல்வி அடைந்துவிட்டார்” – கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: மணிப்பூர் மக்களை பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடி, மோசமாக தோல்வி அடைந்துவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை குற்றம் சாட்டி மல்லிகார்ஜுன கார்கே, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மணிப்பூர் மாநிலம் வன்முறையில் மூழ்கி 16 மாதங்கள் ஆகின்றன. ஆனால் உங்கள் ‘இரட்டை இயந்திரம்’ அரசாங்கம், அதனைத் தணிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அமைதி திரும்ப, இயல்புநிலையை உறுதிப்படுத்த அனைத்து சமூக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது … Read more

“புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது” – சுல்தானுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் பிரதமர் மோடி பதிவு

பந்தர் செரி பேகவான்(புருனே): புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணம் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று (செவ்வாய் கிழமை) புருனே சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரண்மனையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இதனைத் … Read more

தி கோட் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிரபலம்

Actor Sivakarthikeyan and Trisha In The GOAT Movie : தி கோட் திரைப்படம் விரைவில் வெளியாவதை தொடர்ந்து, இப்படத்தில் இரண்டு முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மோகன் நடராஜன் மறைவு: "தயாரிப்பாளராக இல்லாமல் ஒரு தந்தையைப் போல் இருந்தார்" – 'ஆழ்வார்' பட இயக்குநர்

விஜய்யின் 25வது படமான ‘கண்ணுக்குள் நிலவு’, அஜித்தின் ‘ஆழ்வார்’, சூர்யா இரண்டு வேடங்களில் நடித்த ‘வேல்’ உள்படப் பல படங்களைத் தயாரித்தவர் மோகன் நடராஜன். வயது மூப்பின் காரணமாகச் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். அவருக்கு வயது 71. பி.வாசு அஞ்சலி மறைந்த மோகன் நடராஜன், ராஜகாளியம்மன் மூவிஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் ‘வேலை கிடைச்சிருச்சு’, ‘கிழக்குக்கரை’, ‘கோட்டைவாசல்’, சுரேஷ் நடித்த ‘பூக்களைப் பறிக்காதீர்கள்’, விஜயகாந்த் நடித்த ‘பூ மழை பொழியுது’, பி.வாசுவின், … Read more

எஸ்சி/ எஸ்டி மாணாக்கர்களுக்கு யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி! தாட்கோ அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள எஸ்சி/ எஸ்டி மாணாக்க;ரகள்,  யுபிஎஸ்சி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இலவச பயிற்சி வழங்க உள்ளதாக  தாட்கோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த 100 மாணவர்களுக்கு யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சியை வழங்குகிறது. இப்பயிற்சியை பெற விரும்புவோர் தாட்கோவின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு … Read more